நகரத்தார்களின் மிக முக்கியமான
நோன்பு பிள்ளையார் நோன்பு. இந்த நோன்பு நகரத்தார்களுக்கு மட்டுமே உரித்தான
தனித்தன்மை வாய்ந்தது நோன்பும் அதை பற்றிய கதைகளும் :-
"பிள்ளையார்
நோன்பு" பற்றிய வாய்மொழி வரலாற்று "கதை 1"
நகரத்தார்கள் வாணிபத்தின் பொருட்டு
கடற்பயணம் மேற்கொள்வர்.ஒருமுறை சில நகரத்தார்கள் ஒன்று கூடி
காவிரிபூம்பட்டினத்தில் இருந்து பயணத்தை மேற்கொண்டனர். அப்பொழுது கார்த்திகை தீபத்
திருநாளன்று கடலில் சூறாவளி காற்று ஏற்பட்டு கப்பலின் திசை மாறி நிலப்பரப்பை அடைய
முடியாமல் சிக்கித் தவித்தனர். தாங்கள் வணங்கும் மரகத பிள்ளையாரை நினைத்து
தங்களைக் காக்கும்படி வேண்டினர். அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் நாட்களை
கணக்கிடுவதற்காக தங்கள் வேஷ்டிகளில் இருந்து ஒரு நூலை எடுத்து பத்திரப்படுத்தினர்.21 நாட்கள் கழிந்ததும் அவர்கள் ஒரு தீவின் கரையை அடைந்தனர். அன்று சஷ்டி திதி, சதய நட்சத்திரம் கூடிய சுப தினம். தாங்கள் உணவிற்காக பயணத்தில் கொண்டு வந்த
அரிசி மாவு, நெய், வெல்லம், முதலியவற்றை கலந்து பிள்ளையார்
போல் பிடித்து வைத்து 21 வேஷ்டி நூல்களையும் சேர்த்து திரி
போல் செய்து அந்த மாவு பிள்ளையரில் ஏற்றினர். அத்தீவில் கிடைத்த ஆவாரம் பூவைக்
கொண்டு பிள்ளையாருக்கு அர்ச்சித்தனர். அவர்கள் மீண்டு வந்து காவிரி
பூம்பட்டினத்தை அடைந்து, தங்கள் சமூகத்தினரிடையேநடந்தவற்றை
எல்லாம் விவரித்தனர். தங்கள் மக்களில் பெரும்பாலோரைக் காப்பாற்றிய மரகத பிள்ளையாரை
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத் திருநாளில் இருந்து 21 ஆம் நாள், சஷ்டியும் சதயமும் கூடும் நாளில்
ஆவாரம் பூவும் அரிசி மாவு பிள்ளையாரும் புத்தம் புது வேஷ்டியின் நூலில்
செய்யப்பட்ட திரியைக் கொண்டு விளக்காக ஏற்றி தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும்
காக்குமாறு பிள்ளையாரை வேண்டுகின்றனர்.பின்னர் அந்த மாவு பிள்ளையாரை உண்டு
மகிழ்வர். ஆடவர்களால் முதன்முதலில் துவக்கப்பட்ட இந்த நோன்பு இன்றளவும் வீட்டின்
தலைமகன் எடுத்துக் கொடுக்க மற்றவர்கள் இறைவனை வேண்டி அவ்விளக்கினை பெற்று உண்பர்.
வேலை நிமித்தமாகவோ வேறு காரணத்தாலோ ஆண்கள் வீட்டில் இல்லை என்றாலும் ஒரு வயது ஆண்
குழந்தையாக இருந்தாலும் அந்தக் குழந்தையின் கைகளில் இருந்து பெண்கள் விளக்கினை
பெற்று கொள்வர்.
"பிள்ளையார்
நோன்பு" பற்றிய வாய்மொழி வரலாற்று "கதை 2"
நகரத்தார் வணிகர்கள் என்பது
எல்லாருக்கும் தெரியும் .
வணிகர்கள் சமணர்களாய் இருந்ததாக
வரலாறு சொல்லுகிறது
அக்காலத்திலே சமண மதம் கொள்கைகைகளை
வலியுறுத்துகிறதே தவிர சமண மத்தினாக வாழ வேண்டும் என்று சொல்லவில்லை.சமண மத
சடங்குகளில் இன்னமும் சில வற்றை நாம் கடை பிடிக்கிறோம் . உதாரணமாக மங்கள அமங்கள்
நிகழ்வுகளில் தென்னை ஓலையினால் ஆனா தோரணத்தயை கட்டுதல்.சாத்தப்பன் ,சாதுவன் என்ற பெயர் போன்றவை ஆகும்.சமணம் குறைந்து சைவம் வளர்ந்த காலத்தே
முதலில் மன்னர்கள் ஏழாம்
நூறாண்டுமுதல் சைவர்கள் ஆனார்கள்.மன்னர் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பது நம்
வழக்கம்.நாமும் சைவர்கள் ஆனோம்.நமது குரு ஆனவர் இருபத்தி ஒரு நாள் விரதம் இருந்தது
தான் சைவர் ஆக வேண்டும் என கட்டளையிட்டார்.அவ்வாரேநாமும் பெரிய
கார்த்திகையிலிருந்து இருபத்தி ஒரு நாள் விரதம் இருந்தது தான் சைவர் ஆனோம்.இந்த
இருபத்தி ஒரு நாளை கணக்கிட இருபத்தி ஒரு நூல் இழைகள் எடுத்து வைத்தோம் பின் இவற்றை
ஒன்றிணைத்து திரட்டுபாலின் மத்தியில் வைத்து இழையாக்கி தீபம் ஏற்றி
திருவண்ணாமலையானை உள்ளுனர்வதாக /உட்கொள்ளுவதாக கொண்டு இழைகள் எடுத்து
கொள்ளுகிறோம்.
சைவத்தின் முதற் கடவுளாகக் ஏழாம்
நூறாண்டுமுதல் கருத பெற்ற பிள்ளையார்க்கு நோன்பு இருந்து இழைகள் எடுத்து
கொள்ளுகிறோம்.நோன்பு ஆடம்பரம் இன்றி பெரிய கார்த்திகையிலிருந்து இருபத்தி ஒன்றாம்
நாள் சஷ்டியும் சதயமும் கூடும் நாளில் அந்த சமயத்தில் கிடக்கும் எளிய மலர்கள் ஆகிய
ஆவாரம் பூ போன்றவற்றை கொண்டு, நெய்யுடன் பிசைந்த மாவிளக்கில்இழை சேர்த்து எல்லாவகை பொறி , எள்ளுருண்டை கடலை உருண்டை பணியாரம் திரட்டுப்பால் வெகுநாள்கள் கேட்டு
போகாதகருப்பட்டி பணியாரம் செய்து படைத்து பிள்ளையாரை போற்றி வழிபடுவது வழக்கம்
.இதை இன்றுவரை கைவிடாது நாம் செய்துவருகிறோம்.
"பிள்ளையார்
நோன்பு" பற்றிய வாய்மொழி வரலாற்று "கதை 3"
காவிரிப்பூம்பட்டினத்தில்
நகரத்தார்கள் வசித்து வந்தபொது ஒரு செட்டியாரும் அவர் மகள் தெய்வானையும் வாழ்ந்து
வந்தார். செட்டியாரின் மனைவி சிவலோகப்பதவி அடைந்து விட்டார். செட்டியார் தன் மகள்
தெய்வானைக்கும் திருமணம் பேசத் துவங்கினார்.அவர் மகளுக்கும் சரிவர வரன் அமையவில்லை
அவருக்கும் அதுவொரு வருத்தம் . சுற்றத்தார் அவருக்கும் அறுதல் கூறினர் .
தெய்வானைக்கும் வயது கம்மியாகத்தான் உள்ளது. கலங்காதே என்ற ஆறுதல் கூறினார் .உன்
மகள் திருமணத்திற்கும் பின் உன்னை பார்த்துகொள்ள ஆள்வேன்டாமா அதானால் நீ ரெண்டாம்
திருமணம் செய்துகொள் என்று அறிவுரைகள் கூறினர்.சில ஆண்டுகள் மீதும் ஓடின அப்போது
செட்டியார் வரண்தேடிய போதும் கிடைக்கவில்லை . அவர் காதுக்கும் அரசல்புரசலாக சில
செய்திகள் வந்தன செட்டியாருக்கும் ஒரே மகள் வேறுயாரும் இல்லை செட்டியாரும்
தனிக்கட்டை சரியாக திருமணத்திற்கு பின் முறைகள் செய்வாரா என்று யோசித்து பெண்ணை
திருமணம் செய்துகொள்ள தயங்கினர் என்பதை தெரிந்து கொண்டார் .செட்டியார் தன் மகளிடம்
உறவினர்கள் சொல்லியத்தை அழைத்து சொன்னார் அப்போது அவள் தன் வாழ்கையை மனதில்
கொண்டும் தன் தந்தையின் இரண்டாம் திருமணத்திற்கு சம்மதம் சொன்னாள்
செட்டியாருக்கும் திருமணம் ஆனது.புதியதாக வந்த சின்னதாலும் வீட்டில் உள்ளவர்களை
நான்றா பார்த்துக்கொண்டாள். ஓர் ஆண்டு சென்றது .பின் தனக்கு ஒரு பிள்ளை
பிறக்கவில்லை என்று எண்ணி வருந்தினாள் அதற்கும் காரணம் தெய்வானையென நினைத்து அவளை
படாத பாடு படுத்த துவங்கினாள் .பலமுறை அவள் தெய்வானையை கடிந்து கொண்ட போதெல்லாம்
செட்டியார் சமாதானம் செய்துவைப்பார்.செட்டியார் தன் புதுமனைவியை கடிந்து கொள்ளாமல்
பொறுத்துக் கொண்டு இருந்தார் .தன் மகளுக்கும் திருமணம் பேசத்துவங்கினார் இப்பொது
தெய்வானையின் சின்னத்தாவிற்கும் பயந்து யாரும் பெண்ணெடுத்துக் கொள்ள
தயங்கினர்.தெய்வானையை எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற்றிவிட வேண்டும் என்று
எண்ணி எல்லா வீட்டு வேலைகளை எல்லாம் செய்யச் சொல்லி துன்புறுத்தினாள்.அவளும்
எதுவும் சொல்லாமல் சரியென்று இசைந்து செய்துவந்தாள். அன்று திருக்கார்த்திகையின்
முதல் நாள் தெய்வானையின் சின்னதா எண்ணெய் தேய்த்து தலைமுழுக சென்றால். அப்படி அவள்
செல்லும் பொது அவள் அணிந்திருந்த வைரத்தொடையும் வைர மோதிரத்தையும் இராண்டான்
கட்டில் உள்ள பட்டசாலையில் ஒரு தூணுக்கு அருகில் வைத்துச் சென்றாள். அவள் குளித்து
விட்டு வந்து பார்த்த பொது அங்கு வைத்திருந்த வைரமோதிரம் காணமல் போனது அது
தெய்வானையின் அம்மாவுடையது .அதை சின்னாத்தாள் அணிந்து கொண்டிருந்தார். இப்பொது
இந்த வைரமோதிரம் காணாமல்போனதும் இதை தெய்வானைதான் திருடிவிட்டால் என அவளை
திட்டித்தீர்த்தாள்.இதை பொறுக்காமல் அவளும் அலுதுபுலம்பினால் .மறுநாளும் சின்னதா
விடவில்லை பெரியனாலும் அதுவுமாக இவர் வாயிலா விழுவது என்று மாலை பூசை முடிந்துதும்
அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியேறினாள் தெய்வானை.தான் செய்யாத தவறுக்கா இப்படி
துன்பத்தை அனுபவிப்பதை விட உயிரவிட்டுவிடலாம் என்று எண்ணி விட்டை விட்டு வெளியில்
வந்தவள் வழியில் மரகதவிநாயகரை கண்டு வழிபட்டு தனது குறைகளை அழுது கொட்டி முறையிட்டால்
பின் இங்கு விநாயகர் சன்னதியில் உண்ணாநோன்பிருந்து தன் உயிரை விட முடிவெடுத்தால்
.அப்படி அவள் செய்ய முற்படும் பொது தெய்வானையின் தந்தை செய்தி அறிந்து தன் மகளை
சமாதானம் செய்து அழைத்து செல்ல முற்பட்டார் .கோயில் குருக்களும் சேர்ந்து சமாதானம்
செய்து பார்த்தார் . தெய்வானை தொலைந்த மோதிரம் கிடைக்கும் வரை நன் உண்ணாமல் நோன்பு
இருப்பேன் இங்கிருந்து வரமாட்டேன் என்று அழுத்தமாக இருந்தால் . சரி நான் தினமும்
விநாயகருக்கும் பூசை வைக்க வரும்போது வீட்டில் இருந்து சிறிது தினையும் தேனும்
உடன் நெய்யும் கொண்டுவருகிறேன் அதை மட்டுமாவது உண் என்றார் குருக்கள்.சரியென்று
சம்மதித்தால் தெய்வானை.குருக்கள் தேன் ,திணை ,நெய் கொண்டுவந்து கொடுத்தார்
தினமும் பூசைக்கு வரும்போது காலையில் தெய்வானையிடம் தருவார் .தெய்வானை தினமும்
விநாயகரின் வேட்டியில் இருந்து தினம் ஒரு நூலாக எடுத்து திரியாக திரித்து
விளக்கேற்றிவைத்து குருக்கள் கொடுத்த நெய் ,தினையும் தேனையும் கலந்து விநாயகருக்கும் படைத்தது வழிபட்டு பின் உண்டால்
இப்படியே 21நாட்கள் சென்றன அன்று மாலை
விநாயகர் சன்னதியில் இருந்து கருப்பு எறும்பு (பிள்ளையார் எறும்பு ) சாரைசாரையாக
வெளியில் வந்தன .இவற்றை கண்டு குருக்கள் பின் தொடர்ந்தார் .அப்போது அவை
தெய்வானையின் வீட்டுக்குள் சென்ற இவற்றை செட்டியாரும் பார்த்து பின் சென்றார் .
எறும்புகள் இரண்டாம் கட்டுக்குள் தெய்வானையின் சின்னதா நகைகள் கழற்றி வைத் தூண்
அருகே துளையிட்டு உள்ளே சென்ற இதை கண்ட செட்டியார் .அங்கு வேலையாளை விட்டு
தோண்டச்சொன்னார் அப்போது அங்கிருந்து சில எலிகள் ஓடின பின் சற்று தொண்டிபார்தல்
அங்கு காணாமல் போன மோதிரம் இருந்தது.இதை கண்ட செட்டியார்,தெய்வானையின் சின்னதா,குருக்கள் மூவரும் அதிசயித்து
மெய்மரந்தனர். சின்னதா தான் செய்த தவறை நினைத்து மனம்திருந்தி கண் கலங்கி அழுதால்
. பின் வீட்டில் இருந்த மூவரும் கோவிலை நோக்கி சென்றனர் . உடன் இந்த செய்து
அங்கிருந்த மக்கள் மத்தியில் பரவி அவர்களும் அந்த பெண்ணை பார்க்க சென்றனர் .
தெய்வானையை பார்த்தது அவளுது சின்னதா ஓடி வந்து கட்டிக்கொண்டு அழுதால் தான் செய்த
தவறை மன்னிக்கசொல்லி கேட்டால் தெய்வானையை தன் மகளாகா நினைத்து தனக்கு பிள்ளை இல்லை
என்ற குறையில் இருந்து விடுப்பது தெய்வானையை சொந்தமகளாகவே நினைத்து வீட்டுக்
அழைத்து சென்றால் . இதை கண்ட மக்களும் சாதாரண ஒரு பெண் இப்படி நோன்பிருந்து இதை
நாட்கள வழிபட்டு இத்தகைய பலனை பெற்றதை பார்த்து அவர்களும் தங்கள் இல்லங்களில் இந்த
நோன்பை அனுசரித்து வழிபட்டனர்.இப்படி அவர்கள் வழிபட அவர்களுக்கும் தாங்கள்
எண்ணியது ஈடேறி குடும்ப ஒற்றுமை மேலோங்கியது . தெய்வானை அனுசரித்த அந்த 21 நாட்கள் திருக்கார்த்திகையில் இருந்து 21 அதாவது சஷ்டியும் சதயமும் கூடும் நாளில் தொலைந்த வைரமோதிரம் கிடைத்தது. இதையே
இன்று நாம் கொண்டாடும் பிள்ளயார் நோன்பு.
இங்கு சில நாட்கள் முன்பு
பிள்ளையார் நோன்பு பற்றி இளையதலைமுறைகும்கூறுவோம் என்று எழுதிய பதிவு , 6௦ ஆண்டுகள் முன்பு பிள்ளயார் நோன்பு கொண்டாடிய விதம் பற்றிய பதிவுகள் செய்திருந்தோம்
அதன் தொடர்சியாக சிலர் பிள்ளயார் நோன்பு உருவான காரணம் பற்றி வினவினர் .
பிள்ளையார் நோன்பு குறித்து கூறப்படுகிற மூன்று விதமான வாய்மொழியாக சொல்லப்படும்
வராலாற்று கதைகள் இவையே.
No comments:
Post a Comment