1. Take sangalpam at pond lakshmana thertham which is at
outer, thereafter go to (2) sethu samuthram ocean (Agni thertham) having 45
holy dips by couples (at least 3 times together) would remove all sin. Offering
water @ agni thertham to ancestor would satisfy forefathers and fetch blessings
from them. (3) Pour water on head from 22 thertham situated around temple. (4) Perform
dharpanam with the help of Brahmin. (5) Pray vishveshwara lingam brought by
hanuman, after that pray rama lingam made by beach sand by setha
Villundi thertham is near
thangachi matam sweet water in the well inside the ocean. This was
made by Sriraman for his wife sitha’s thirsty
which is 7kms away.
Spatika lingam can be worshiped in early morning.
Anjanaya made of Athi maram (tree) is having good vibration
Thiru pullani alias tharpasanathil sri ramar temple
Panjali Samadhi & natraj statue
Travel towards north for 3 kms from Ramasamy temple, and
locate higher sand deposition called as Kantha madhana barvatham in a school temple sri
Ramar Padham
Rameashwaram Thulasi babha Mutt, is having ramar rocks which
is floating
Punjab gurdudh vara @ meala
street, rameshwaram
At Ramalingam kudam
view movie of rameashwarm thala varalaru for 20minutes
Devi pattinam navagraha statue made of navabasham is
worshiped to eradicate sin & dosham.
Thiru uthira kosa mangaieel emerald nataraj statue
Ervadi darga & Chandra mudayanil ceniyapa darga
Sethu kadarkari (seashore) 4kms from rameshwaram jayavera hanuman
காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி (கடல்) தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி செல்ல வேண்டும்.
கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்த அபிஷேகம் செய்ய வேண்டும். அங்கிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு ராமேஸ்வரத்தில் துவங்கி ராமேஸ்வரத்தில்தான் தீர்த்த யாத்திரையை முடிக்க வேண்டும்.
சிலரால் இது முடிவதில்லை. காசி செல்ல முடியாதவர்களுக்கு வசதியாக, கோயிலிலேயே கங்கை தீர்த்தம் விற்கப்படுகிறது. மானசீகமாக காசி விஸ்வநாதரை வணங்கி, இந்த தீர்த்தத்தை ராமநாதருக்கு அபிஷேகம் செய்யக்கொடுக்கலாம்.http://temple.dinamalar.com/new.php?id=906
ராமேஸ்வரத்தில் உள்ள ஜோதிலிங்கம் வீபீணனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த லிங்கத்தின் பின்புறம் கற்பூர ஆரத்தி காண்பித்தால் முன்புறம் அந்த ஜோதியை விளக்கின் இளஞ்சிவப்பு நிறத்தை அப்படியே காணலாம்.
தலம், தீர்த்தம், மூர்த்தி என்ற முப்பெரும் சிறப்புக்களை உடையது ராமேஸ்வரம்.
ராமேசுவரம் கோவிலில் உள்ள
ஒவ்வொரு தீர்த்தத்திலும் ஜீவ சத்துக்கள், மின் காந்த அலைகள் உள்ளன.
தீர்த்தம் உங்கள் தலையில் நன்கு பட்டால்தான் அந்த சக்திகளை நீங்கள்
முழுமையாக பெற முடியும்.
காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி (கடல்) தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி செல்ல வேண்டும்.
கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்த அபிஷேகம் செய்ய வேண்டும். அங்கிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு ராமேஸ்வரத்தில் துவங்கி ராமேஸ்வரத்தில்தான் தீர்த்த யாத்திரையை முடிக்க வேண்டும்.
சிலரால் இது முடிவதில்லை. காசி செல்ல முடியாதவர்களுக்கு வசதியாக, கோயிலிலேயே கங்கை தீர்த்தம் விற்கப்படுகிறது. மானசீகமாக காசி விஸ்வநாதரை வணங்கி, இந்த தீர்த்தத்தை ராமநாதருக்கு அபிஷேகம் செய்யக்கொடுக்கலாம்.http://temple.dinamalar.com/new.php?id=906
ராமேஸ்வரத்தில் உள்ள ஜோதிலிங்கம் வீபீணனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த லிங்கத்தின் பின்புறம் கற்பூர ஆரத்தி காண்பித்தால் முன்புறம் அந்த ஜோதியை விளக்கின் இளஞ்சிவப்பு நிறத்தை அப்படியே காணலாம்.
பாரத நாட்டின் மிகுந்த புனிதத்
தலங்களாக நான்கு தலங்கள் மட்டும் கருதப்படுகின்றன. அவற்றுள் ஒன்று ராம்நாத்
என்ற ராமேசுவரம் எஞ்சிய மூன்று தலங்களும் வட நாட்டில் அமைந்து இருப்பன.
இவை துவாரகநாத், பத்ரிநாத், கேதாரிநாத் என்ற வைணவத் தலங்கள்.
ராமேஸ்வரம் கோவிலின் கருவறையில் ராமநாத சுவாமிக்கும் ஏனைய
இறைமேனிகளுக்கும் பூஜை, அபிஷேகம், நைவேத்தியம் ஆகிய தெய்வ கைங்கரியங்களில்
பல நூற்றாண்டுகளாக ஈடுபட்டு இருப்பவர்கள் மராட்டிய பிராமணர்கள் ஆவர். இது
தமிழக திருக்கோவில்களில் வழிபாட்டு நடை முறைகளுக்கு வேறுபட்ட ஒன்று ஆகும்.
ராமேசுவரத்தில் பூஜை செய்யும் மராட்டிய பிராமணர்கள் மொத்தம் 512 பேர்
என்பதும் அவர்கள் கி.பி. 14-ம் நூற்றாண்டு முதல் ராமேஸ்வரத்தில் இருந்து
வருவதும் தெரிய வருகிறது. இவர்களைப் பண்டாக்கள் என்று மக்கள்
குறிப்பிடுகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதர் கோவில் ராமபிரானால் எழுப்பப்பட்ட பெருமையுடையது.
காசி யாத்திரை சென்றவர்கள், ராமேஸ்வரத்திற்கு சென்று தனுஷ்கோடியில்
தீர்த்தமாடி ராமேஸ்வர லிங்கத்தை வழிபட்டால் தான் அக்காசியாத்திரை முழுமை
பெறும் என்பது இந்து சமயத்தவரின் கொள்கை- நம்பிக்கை.
கந்தமாதனம், தனுஷ்கோடி, தர்ப்பசயனம் ஆகிய மூன்றும் உள்ளதால் "முக்தி தரும்
சக்தி உடைய தலம்'' என்ற சிறப்பை ராமேசுவரம் பெற்றுள்ளது.
ராமபிரான் ராமேசுவரத்தில் மட்டுமல்ல வேதாரண்யம், பட்டீசுவரத்திலும் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார்.
ராமேஸ்வர சேதுக்கடல் தீர்த்தம் 2 லட்சம் மைல் சுற்றி, சுழன்று வருவதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடலின் கீழ் உள்ள மூலிகைகள் கடல் மேல்
மட்டத்துக்கு வந்து சேது கரையில் மட்டுமே ஒதுங்குவதையும் விஞ்ஞானிகள்
உறுதிபடுத்தியுள்ளனர்.
கயிலாய மலையில் உள்ள
மானசரோவர் தீர்த்தமும், சேது தீர்த்தமும் தனுஷ் கோடியில் சங்கமம் ஆவதாக நம்
முன்னோர்கள் குறிப்புகள் எழுதி வைத்துள்ளனர்.
ராமேசுவரத்துக்கு தீர்த்தமாட வருபவர்கள் அந்த காலத்தில் 36 நாட்கள் தங்கி
இருந்து தீர்த்தமாடி செல்வார்கள். அது மெல்ல, மெல்ல குறைந்து தற்போது
ராமேசுவரத்துக்கு ஒரே நாளில் சென்று விட்டு வந்து விடுகிறார்கள்.
ராமேஸ்வரம் தல யாத்திரையில் முக்கிய அங்கம் வகிக்கும் தேவிபட்டினம்.
சூரியனாக கருதப்படுகிறது. பாம்பன் பைரவராகவும், ராமேசுவரம் அம்பாளாகவும்,
தனுஷ்கோடி சேதுவாகவும், திரும்புல்லாணி மகா விஷ்ணுவாகவும், உத்தரகோடி மங்கை
நடராசர் ஆகவும் கருதப்படுகிறது.
ராமேசுவரம் கோவிலில் ஒரே சங்கினுள் அடுத்தடுத்து இரு சங்குகளை கொண்ட தெய்வீக திரிசங்கு உள்ளது.
ராமேசுவரம் கோவிலில் முழுக்க, முழுக்க மூலிகைகளால் உருவாக்கப்பட்ட
புதுமையான ஒரு லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்துக்கு வைணலிங்கம் என்றுபெயர்.
ராமேசுவரம் மூலவரை தொட்டு பூஜை செய்யும் உரிமை காஞ்சி பெரியவர்,
சிருங்கேரி மகா சன்னிதானம்,நேபாள நாட்டு மன்னர் ஆகிய 3 பேருக்கும் மட்டுமே
உண்டு.
ராமபிரான் சூரிய குலத்தை சேர்ந்தவர்.
அந்த குலத்தின் நேரடி வாரிசாக நேபாள மன்னர் குடும்பம் கருதப்படுகிறது. எனவே
நேபாள மன்னர்களின் குல தெய்வமாக ராமேசுவரம் தலம் திகழ்கிறது.
ராமனுக்கு உதவிய குகன் பற்றி
உங்களுக்குத் தெரிந்து இருக்கும். அந்த குகனின் வழித் தோன்றல்கள் தான்
சேதுபதி மன்னர்கள் என்று கருதப்படுகிறது.
ராமேசுவரம் ராமநாதரை நேபாள மன்னர்கள் மட்டுமின்றி தாய்லாந்து, மைசூர், திருவிதாங்கூர் மன்னர்களும் வழிபட்டு பலன் பெற்றுள்ளனர்.
ராமேசுவரம் தலத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் இன்னும் பதஞ்சலி முனிவரின்
ஜீவ சமாதியில் நெய் ஊற்றி விளக்கை எரிய வைத்தால் ராகு-கேது தோஷம் நீங்கும்.
80. ராமேசுவரம் கோவிலில் வைணவ ஆலயங்களில் கொடுப்பது போல தீர்த்தம்
பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.
நேபாள நாட்டு பக்தர் ஒருவர் ஒரு லட்சம் ருத்ரங்களால் ஆன ருத்ராட்ச பந்தல் ஒன்றை இத்தலத்தில் அனைத்து கொடுத்துள்ளார்.
ஐதீகப்படி ராமேசுவரத்தில் வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும்.
முத்துப்பேட்டைக்கு அருகில் திருவான்மியூரிலும் ராமன் இலங்கை போகும்போது
இறைவனை வணங்கி வழி கேட்டிருக்கிறான். அந்த இடம் திருஉசாத்தானம் என்று
அழைக்கப்படுகிறது.
காசியிலும், சிதம்பரத்திலும்
பத்து மாதம் தங்கிய பலனையும், நைமிசாரண்யம், திருப்பதி, ஸ்ரீபர்வதம்,
மதுரை, ஸ்ரீரங்கம், திருவானைக்கா, குடந்தை, திருவிடைமருதூர், மயிலாடுதுறை,
வேதாரண்யம், திருவாரூர், திருவெண்காடு, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில்,
திருமுதுகுன்றம், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, திருக்காளத்தி ஆகிய
பகுதிகளில் ஓராண்டு தங்கிய பலனையும் தனுஷ்கோடியில் நீராடி ராமநாதரை வணங்கி
மூன்றே நாளில் பெறலாம்.
காசியில் இறப்பது முக்தி
தரும், பாணலிங்கம் பல திரளும், நர்மதையில் விரதம் இருப்பது முக்தி தரும்,
பொறாமையால் போர்க்களமாகிய குருசேத்திரத்தில் பிறருக்குத் தானம் செய்வதே
முக்தி தரும் அந்த மூன்று பலனையும் ஒன்றாக்கித் தரும் பெருமை
ராமேசுவரத்திற்கே உண்டு.
புத்திரகாரகனாகிய குருவுக்குப் பகையான கிரகம் சுக்கிரன்.
புத்திரஸ்தானத்தில் விரோதமானதாகக் கருதப்படுபவர் சூரியனும் செவ்வாயும்
ஆவர். எனவே மகப்பேறு விரும்பியவர்கள் மேற்கூறிய கிரகங்களுக்குரிய ஞாயிறு,
செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் நீராடுவது கூடாது என்று விலக்கினார்கள்.
என்றாலும் சேதுவில் இக்காரணத்திற்காக இந்த நாட்களில் நீராடினால் தவறில்லை
என்று கூறப்பட்டுள்ளது.
பிரேதத்திற்கு
நீர்க்கடன் செய்யாதவன், கருவுற்ற மனைவியை உடையவன் வேறு தீர்த்தங்களில்
நீராடுவதற்கு உரிமை இல்லை. ஆனால் சேதுவில் நீராடுவதற்கு இவர்களுக்கு
தடையுமில்லை. காரணம் நீர்க்கடனுக்குரிய காசியின் பலனை சேது தரும். மேலும்
மகப்பேறு தருவதில் இத்தலம் சிறந்திருக்கிறது.
தீர்த்தமே தெய்வமாயிருப்பதால் கடல் நீராட்டிற்கு விதிக்கப்பட்ட திதி,
கிழமை, நட்சத்திரம் முதலிய நியமங்களை மீறியும் இங்கே என்றும் எப்போதும்
ஆடலாம். பாதி உதயம், முழு உதயம் என்றெல்லாம் பார்க்காமல் நீராடலாம்.
பலதீபிகை என்னும் சோதிட நூல் கர்ம நாசத்துக்கு நாகப்பிரதிட்டை செய்வதற்குச் சேது உரியது என்று கூறுகிறது.
புத்திரதோஷம் எதுவாயினும் சேதுவில் நீராடினால், மறையும்.
காசிக்கு மட்டும் போய் வந்தால் போதாதாம். முதலில் ராமேசுவரம் சென்று
நீராடி வணங்கிக் கடலில் மண் எடுத்துக் காசிக்குப் போய், கங்கையில் அதனைக்
கொட்டி காசியிலிருந்து மீண்டும் வந்து மறுமுறையும் ராமேசுவரம் போய்,
காசியிலிருந்து கொண்டு வந்த கங்கை நீரால் ராமநாதருக்கு அபிஷேகம்
செய்தால்தான் காசியின் பலன் பூர்த்தியாகக் கிடைக்கும். இந்த மரபு தவறி
காசிக்கு மட்டும் போய் வந்தால் பயனில்லை. இதைத்தான் காசிக்குப் போனாலும்
கருமம் தொலையாது என்ற பழமொழி கூறுகிறது.
காசி
முக்திக்குச் சிறப்புடையது. அதனால்தான் உயிரை உடனே விட விரும்பாமல் வேறு
எதையாவது விட்டுவிட்டு வருகிறார்கள். ராமேசுவரமோ உரிய காலத்தில் முக்தியும்
பிற்காலத்தில் போகமும் அருளும் பாக்கியமுடையதாகும்.
மிகுந்த சிறப்புடையது ராமேசுவரம் என்றாலும் தனுஷ்கோடிக்குப் போய் விட்டுத்தான் பிறகு ராமேசுவரம் வர வேண்டும்.
தனுஷ்கோடிக்குப் போனாலும் போகாவிட்டாலும் ராமேசுவரத்தில் உறுதியாக அக்னி
தீர்த்திற்க்குப் போய் நீராடாமல் எந்த யாத்திரிகரும் திரும்ப மாட்டார்.
இன்றைய நிலையில் அக்னி தீர்த்தத்தில் நீராடுவதே நடைமுறையில் அதிகமாகி
உள்ளது.
கீழ்க் கோபுரம் கட்டிய தேவகோட்டை ஜமீன்தார் ஏ.எல்.ஏ.ஆர். செட்டியார்
குடும்பத்தினரும் 128 அடி உயரமாக அதே போல் கருங்கல்லாய்க் கட்டி
விட்டார்கள். இக்கீழ்க்கோபுரம் 1649-ல் சேதுபதியால் தொடங்கப்பட்டுக்
கைவிடப்பட்டதால், 1879 முதல் 1904-க்குள் ஜமீன்தார் இதைக்
கட்டியிருக்கிறார். இலங்கை வடகரையில் நெடுந்தீவில் நின்று பார்த்தால்
இக்கோபுரம் தெரியும்.
ராமன் நிறுவிய லிங்கம்,
அனுமன் லிங்கம், விசாலாட்சி, பருவதவர்த்தினி, நடராசர் ஆகிய ஐவர்க்கும் தனி
விமானங்கள் உள்ளன. கோவில் பதினைந்து ஏக்கர் பரப்புள்ளது. நீளம் 865 அடியும்
அகலம் 657 அடியும் உள்ள கோவில் இதுவாகும். சில உத்திரங்கள் 49 அடி நீளம்
உடையவை ஒரே கல்லால் ஆகியவை.
வைணவத்தில்
கருடசேவையும் சைவத்தில் ரிஷபவாகன காட்சியும் முக்தி தரும் என்பார்கள்.
அதுவும் கோபுர தரிசனமாகும்போது தான் இக்காட்சிகள் மிகவும்
சிறப்புக்குரியதாகக் கருதப்படும். அதற்கு ஏற்ப மண்டப உச்சியில் ரிஷபவாகனக்
காட்சியும் பின்புறம் கீழைக் கோபுரம் இருப்பதும் முக்திதரும் தலத்தில்
சிறந்த ராமேசுவரத்திற்கு மிகவும் உரியதாய் விளங்குகின்றன. http://www.maalaimalar.com/2013/01/12115219/rameswaram-120.html
இலங்கையில் சீதையை மீட்டு, ராமபிரான் திரும்பும் போது, அவர்
எய்த அம்பு விழுந்த இடம் தான் தனுஷ்(வில், அம்பு)கோடி என ராமாணயத்தில்
குறிப்பிட்டுள்ளது. தமிழத்தின் தென்கிழக்கு திசையில், ராமேஸ்வரத்தில்
இருந்து 18 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள இந்நகரம், நூறு ஆண்டுக்கு முன்பு,
புனித தலமாகவும், ஆங்கிலேயர் ஆட்சியில், வணிக நகரமாகவும் விளங்கியது.
தனுஷ்கோடி இருகடலும் சங்கமிக்கும் இந்த இடத்தில், சூரிய
நமஸ்காரத்துடன் புனித நீராடினால், "பாவம் நீங்கி, புண்ணியம் சேரும் என்பது
இந்துக்களின் நம்பிக்கை.
தமிழகத்தின் சிறந்த துறைமுகமாகவும் விளங்கிய தனுஷ்கோடி, தமிழகத்திற்கு
வருவாய் ஈட்டி தரும், முக்கிய நகரமாகவும் இருந்தது. இரண்டாம் உலக போரில்,
இந்தியாவின் தென்கடல் எல்லையில், சிறந்த பாதுகாப்பு அரணாக விளங்கிய
இந்நகரை, சிலநிமிடங்களில், கடல் அலைகள் புரட்டி போட்டு, நகரையே காணாமல்
செய்து விட்ட சம்பவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இதே நாளில் அதாவது,
1964 டிச., 22 ல், நள்ளிரவு 12.30 மணிக்கு ஏற்பட்ட புயலால், எழுந்த ராட்சத
அலைகள் தனுஷ்கோடியை தாக்கியது. தூக்கத்தில் இருந்த மீனவர்கள், பாம்பனில்
இருந்து தனுஷ்கோடிக்கு, ரயிலில் சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள், பயணிகள்,
பக்தர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பலரும் இறந்தனர். சில நிமிடங்களில், புயல்
தனுஷ்கோடியில் இருந்த பள்ளிக் கூடம், மருத்துவமனை, தபால் நிலையம்,
கோயில்களை சேதப்படுத்தி, "மென்று துப்பிய எலும்பு துண்டு போல்
ஆக்கிவிட்டது.
கட்டடங்கள் சின்னபின்னமாக சிதைந்தன. டிச., 24 ல் காலை, புயலின் கோர
தாண்டவத்தின் அடையாளமாக, எங்கு பார்த்தாலும் கிடந்த பிணக்குவியல்களை
அடையாளம் காணவும், கணக்கிடவும் முடியாமல் அதிகாரிகள் திணறினர்.
இச்சம்பவத்தை "தேசிய பேரிழப்பு என மத்திய அரசு அறிவித்தது. புயல்
தாக்கியபோது, அங்கிருந்த சில மீனவர்கள், ரயில்வே ஸ்டேஷன் கட்டடம், மணல்
திட்டுகள் மேல் நின்று, உயிர் தப்பியதாக கூறுகின்றனர். 48 ஆண்டிற்கு
பிறகும், இன்றும் சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு உருக்குலைந்த
கட்டடங்கள், புயல் தாண்டவத்தின் சுவடாய், புராதான சின்னமாக
காட்சியளிக்கின்றன. இங்கு சாலை, மின்சாரம், குடிநீர் உட்பட கட்டமைப்பு
வசதி
No comments:
Post a Comment