Sunday, July 7, 2013

Guru temples

The seven Jupiter (Guru) deities, Dakshinamurthy for Shiva, Varadaraja for Vishnu, Guru Brahmma, Shakti Guru Soundarya Nayaki, Gnana Guru Subramanya, Deva Guru Jupiter, Demon Guru Shukra are worshipped with special abhishek and pujas, hence the temple has the reputation of being adored as Saptha Guru (Seven Gurus) Sthala-place.
Sri Uthamar Kovil - Sri Pichandar Kovil – 621 216. Manachanallur Taluk, Trichy district.
+91- 431 - 2591 466, 2591 040. http://temple.dinamalar.com/en/new_en.php?id=169

பாடி, திருவலிதாயம், சென்னை: குருதலம், வியாழன், தான் செய்த தவறால் தனது தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரை சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி, இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால், பாவம் நீங்கி மோட்சம் கிட்டும் என்றார். அதன்படி இங்கு வந்த வியாழன், புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி அருள் பெற்றார். இத்தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கிட தோஷங்கள் நீங்கும், குருபகவானை வணங்கினால் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. திருவலிதாயதித்திலுள்ள கிணற்று  நீருடன் கங்கை  நீரை கலந்து ஒரு மண்டலம் குரு ஹொரையில் அருந்த  குருவருளால் நோய்கல் நீங்கும்

அருள்மிகு சித்திர ரத வல்லபபெருமாள் கோயில், சோழவந்தான் வழி,குருவித்துறை, மதுரை மாவட்டம். இங்கு குருபகவான், சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். இங்கு பெருமாள் தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம். இத்தலத்தில் நவக்கிரகத்தில் வியாழன் கிரகம் யோக குருவாக அருள்பாலிக்கிறார். காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் 5.30மணி வரை திறந்திருக்கும்.+91- 98425 06568 +91 94439 61948, 97902 95795

Thenkudi Thittai – Raja Guru Vasishteswaraswamy temple முருகன் சிறப்பு. மூலஸ்தான வசிஷ்டேஸ்வரர் திருமேனியில் விமானத்தில் இருந்து 20 நிமிடத்திற்கு ஒருமுறை நீர் சொட்டு சொட்டாக இதுவரை விழுந்து கொண்டுள்ளது அதிசயமாகும்.  நவக்கிரகத்தில் உள்ள வியாழன் (குரு) தனி சன்னதியில் சிவனுக்கும் அம்பாளுக்கும் நடுவில் நின்றகோலத்தில் ராஜகுருவாக அருள்பாலிக்கிறார். இங்கே வந்து தன்னை வேண்டுவோருக்கு உடனடியாக சென்று உதவ வேண்டும் என்பதற்காக குருபகவான் நின்ற நிலையிலேயே அருள்பாலிக்கிறார் என்கின்றனர். நின்ற நிலையிலுள்ள குருவை வழிபட்டால் மேடைப் பேச்சில் பயம் இருக்காது என்பது நம்பிக்கை.

ஞானக் கடவுள் தெட்சிணாமூர்த்திக்கு தனிக் கோயில் தேனி அருகே உள்ள வேதபுரியில் அமைந் துள்ளது. இத்தலம் பல சிறப்புகளைக் கொண் டுள்ளது. மூலவர் பிரஜ்ஞா தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பக்தர்களால் எழுதப்பட்ட கோடிக்கணக்கான மூலமந்திரங் கள் அஸ்திவாரத்தின் கீழ் முறைப்படி வைக் கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment