Sunday, November 5, 2017

நட்சத்திர தலங்களுக்கு செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டியவை !


🌟 நீங்கள் பிறந்த ஒவ்வொரு நட்சத்திற்கும் ஒவ்வொரு அதிதேவதை உண்டு. நட்சத்திரக்காரர்கள் அவர்களுக்குரிய அதிதேவதையை வழிபடுவதன் மூலம் தீய சக்திகளிடமிருந்தும், உங்கள் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றும் வல்லமை படைத்தது.

நட்சத்திர தலங்கள் :

🌟 27 நட்சத்திரங்களில், அவரவர்கள் பிறந்த நட்சத்திரத்தன்று நட்சத்திர தலங்களுக்கு சென்று, அவரவர்க்குரிய நட்சத்திர தல தெய்வங்களை வணங்கினால் வேண்டிய பலன் கிடைக்கும்.

🌟 நீங்கள் பரிகார தலங்களுக்கு கொண்டு செல்லும் நைவேத்யங்களை தக்க விதத்தில் நிவேதனம் செய்து கடவுளின் அருளை பெறலாம்.

🌟 தாங்கள் கொண்டு செல்லும் நிவேதனங்களை நீங்களும், உங்கள் குடும்பத்தாரும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

நட்சத்திர தலங்களுக்கு செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டியவை :

🌟 ஆலயங்களுக்கு செல்லும்போது முடிந்தவரை இறை சிந்தனையோடு செல்ல வேண்டும். வீண் பேச்சுகளையும், தேவையற்ற விவாதங்களையும் தவிர்க்க வேண்டும்.

🌟 இறைவன் திருவுருவங்களை தொட்டு வணங்கக் கூடாது. இரு கை கூப்பி தான் வணங்க வேண்டும்.

🌟 கொடி மரத்தின் கீழ் விழுந்து வணங்க வேண்டும். கோவிலின் உள்ளே விழுந்து வணங்க கூடாது.

🌟 தரிசனம் செய்யும் போது அவசரம் கூடாது.

🌟 விபு+தி, குங்குமம் போன்ற அத்தியாவசிய பொருட்களை கோவிலுக்கு வாங்கி கொடுக்கலாம்.

🌟 கோவிலை சுத்தத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். குப்பைகள் ஏதாவது கோவிலில் இருந்தால் அதை சுத்தப்படுத்துவதன் மூலம் புண்ணியங்களை பெறலாம்.

🌟 கோவில் அர்ச்சகரிடம் உங்களது பிரச்சனைகளை எடுத்துக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

🌟 கோவில் பிரகாரங்களை சுற்றி வரும்போது மனஅமைதியுடன் சுற்றி வர வேண்டும். உடன் வருபவர்களிடம் பேசிக் கொண்டு செல்லுதல் கூடாது.

🌟 கோவில்களுக்கு சென்று வழிபடும்போது, தங்களது ராசியையும் கூறி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.

🌟 உங்களது ராசிக்குரிய விருட்சத்தை(மரத்தை) உங்கள் வீட்டு தோட்டத்திலோ அல்லது கோவிலிலோ வைத்து வணங்கி வருவதன் மூலம் துன்பங்கள் நீங்கும்.

🌟 அவரவர் பிறந்த நட்சத்திரங்கள் அன்று அவரவர் நட்சத்திர தலங்களுக்கு சென்று வணங்கினால் வாழ்வில் சகல நன்மைகளையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

உங்கள் நட்சத்திரத்திற்கேற்ற அபிஷேகம் இதுதான்..!

நட்சத்திரத்திற்குரிய அபிஷேகமும்..! உயர்வுபெறும் வாழ்க்கையும்..!
அபிஷேகங்களை செய்வதன் மூலம் வாழ்க்கையில் ஆன்மிக நலன்கள் வந்து சேருவதாக நம்பிக்கை உண்டு. நட்சத்திரத்திற்குரிய தெய்வ மூர்த்தங்களுக்கு அபிஷேகம் செய்ய இயலாத பட்சத்தில், தங்களது குலதெய்வங்களுக்கு அதை செய்வதன் மூலம் பலன் பெறலாம்.

அஸ்வினி :
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சரஸ்வதி தேவிக்கு அஸ்வினி நட்சத்திரம் வருகின்ற நாளில் சந்தன எண்ணெய் அபிஷேகம் செய்தால் செல்வ வளம் உண்டாகும்.

பரணி :
பரணியில் பிறந்தவர்கள், பரணி நட்சத்திரம் வரும் நாளன்று அதிகாலையில் பச்சரிசி மாவினால் துர்க்கைக்கு அபிஷேகம் செய்வது விசேஷமாகும்.

கார்த்திகை : 
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நெல்லிக்காய் பொடியால் அக்னியின் அம்சமாக உள்ள அக்னீஸ்வரருக்கு கார்த்திகை நட்சத்திரத்தன்று அபிஷேகம் செய்வது நல்லது.

ரோகிணி :
ரோகிணியில் பிறந்தவர்கள் மஞ்சள்பொடியில் ரோகிணி நட்சத்திரத்தன்று பிரம்மாவுக்கு அபிஷேகம் செய்தால் நன்மை உண்டாகும்.

மிருகசீரிஷம் :
மிருகசீரிஷத்தில் பிறந்தவர்கள் வாசனை திரவியங்கள் கலந்த மஞ்சள் பொடியால் சந்திரனுக்கு மிருகசீரிஷ நட்சத்திரத்தன்று அபிஷேகம் செய்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

திருவாதிரை :
திருவாதிரையில் பிறந்தவர்கள் தங்கள் ஜென்ம நட்சத்திரம் வரக்கூடிய நாளன்று சிவலிங்கத்துக்கு பஞ்சகவ்யம் கொண்டு அபிஷேகம் செய்வது சிறப்பானது.

புனர்பு+சம் :
புனர்பு+சத்தில் பிறந்தவர்கள் தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று ஸ்ரீராமருடைய திருமேனிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் சிறப்பு.

பு+சம் :
பு+ச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று பசும்பாலால் குரு பகவானுக்கு அபிஷேகம் செய்யலாம்.

ஆயில்யம் :
ஆயில்யத்தில் பிறந்தவர்கள் ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளன்று ஆதிசேஷன் அல்லது நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்தால் நன்மை உண்டாகும்.

மகம் :
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பசு நெய் கொண்டு வெள்ளிக்கிழமைகளில் சு+ரிய நாராயணனுக்கு அபிஷேகம் செய்யலாம்.

பு+ரம் :
பு+ர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பு+ரம் வரக்கூடிய நாளன்று வீட்டில் தயாரிக்கப்பட்ட பசும் தயிர் கொண்டு அன்னை பார்வதிக்கு அபிஷேகம் செய்யலாம்.

உத்திரம் :
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீமகாலட்சுமிக்கு, உத்திரம் வரும் நாளன்று தேன் மற்றும் கல்கண்டு கொண்டு அபிஷேகம் செய்வது சிறப்பாகும்.


வீட்டில் வளர்க்கும் பிராணிகள் நமக்குவரும் ஆபத்தை உணர்த்துமா?


✴ நாம் பசுவை வளர்க்கின்றோம் என்றால், கிட்டத்தட்ட நாம் புண்ணியம் பெற்றவர்களாக ஆகிவிடுகிறோம். ஏனென்றால் பசு தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்வதில்லை, அனைவருக்கும் கொடுக்கக்கூடியது. தாயில்லா குழந்தைகளுக்கும் தன் உணவு மூலம் தாயாகிறது. 

✴ பசுவின் முழு உருவத்திலும் தேவர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், சிவன், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்ட மூவர்களும் குடிகொண்டிருப்பதாக ஐதீகம். பசுவின் பின்புறம் லட்சுமி குடிகொண்டிருப்பதாக ஐதீகம். அதனால்தான் அனைவரும் பசுவின் பின்னால் தொட்டுக் கும்பிடுவார்கள். 

✴ ஒரு குடும்பத் தலைவனுக்கோ, அல்லது குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ வரக்கூடியதை உடனடியாக கண்டுபிடித்து, அந்தப் பிரச்சனையில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எச்சரிக்கை விடுக்கக்கூடிய சக்தி பசுவிற்கு உண்டு. குடும்பத்தில் ஒரு பிரச்சனையோ, துர்மரணமோ அல்லது பொருள் இழப்போ அல்லது களவோ நடக்கயிருந்தால் பசுவின் கண்ணில் இருந்து தண்ணீர் வர ஆரம்பிக்கும். 

✴ இடது கண்ணில் இருந்து தண்ணீர் வந்தால் உடனடியாகப் பிரச்சனை வரும் என்று அர்த்தம். வலது கண்ணில் இருந்து கண்ணீர் வந்தால் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் பிரச்சனை வரப்போகிறது என்று அர்த்தம். இதிலிருந்து பசு நமக்கு ஏதோ தெரிவிக்கிறது என்று புரிந்துகொள்ளலாம். 

✴ வீட்டில் ஏதோ பெரும் சண்டை நிகழலாம் அல்லது திடீர் தற்கொலை நிகழலாம் அல்லது பேரிழப்பு உண்டாகும் என்பதை அது அறிவுறுத்தும். மேலும், தொழுவத்தை விட்டு ஓடுனாலோ அல்லது தொழுவத்திற்கே வரமறுக்கிறது என்றால் நில அதிர்வு வரப்போகிறது என்று அர்த்தம்.

✴ அதேபோல, நாய் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு ஊளையிட்டால் கண்டிப்பாக யாரோ இறக்கப் போகிறார்கள் என்று அர்த்தம். அதிலும், காலையில் சு+ரியன் உதிப்பதற்கு முன்பு, பிறகு மதியம் உச்சி வேளை, அதன்பிறகு சாயங்காலம், அதற்கடுத்து நள்ளிரவு என்று தொடர்ந்து ஊளையிட்டால் பெரிய மரணம், திடீர் மரணம் நிகழப்போகிறது என்று சொல்லலாம்.

✴ அதேபோல, பு+னை அலறிக் கொண்டு கத்தும், அதுபோல செய்தால் வீட்டில் ஏதோ பாதிப்பு வரப்போகிறது அல்லது விபத்து வரப்போகிறது என்று அர்த்தம். கூட்டுக் குடும்பமாக இருப்பவர்கள் பிரியப் போகிறார்கள் என்றும் அர்த்தம். இதுப்போல நம் வீட்டில் உள்ள வளர்ப்பு பிராணிகள் நமக்கு ஆபத்து காலங்களில் எச்சரிக்கை கொடுக்கும்

spiritual Q & A


1. கண் புருவம் கூடி இருந்தால் நன்மையா? தீமையா?

✳ கூட்டு புருவம் குடும்பத்திற்கு ஆகாது.

✳ மேலும், இவர்களால் குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடு தோன்றும்.

2. பல்லியை கொன்றால் பரிகாரம் உண்டா?

✳ கொல்லாமை என்பது ஆன்மிகம் காட்டும் நெறி ஆகும்.

✳ பல்லியை கொன்றால் காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாளை வணங்குவது மாற்றங்களை தரும்.

3. வீட்டின் எந்த திசையில் என்ன மரம் வைக்க வேண்டும்?

✳ வீட்டின் மேற்கு மற்றும் தெற்கு திசையில் உயரமான மரங்களை வைக்க வேண்டும்.

✳ வடமேற்கு திசையில் பவளமல்லி செடியை வைக்கலாம்.

4. கோவிலுக்கு சென்று காலணியை தொலைத்தால் நல்லதா? கெட்டதா?

✳ கோவிலுக்கு சென்று காலணியை தொலைத்தால் நல்லது.

✳ காலணி தொலைந்தது முதல் உங்கள் துன்பம் நீங்கியது என்று அர்த்தம்.

5. கடவுளை எந்த திசையை நோக்கி வணங்க வேண்டும்?

✳ கடவுளை கிழக்கு மற்றும் வடக்கு திசையை நோக்கி வணங்க வேண்டும்.

6. மாலை சுற்றி பிறந்த குழந்தையால் என்ன நடக்கும்?

✳ மாலை சுற்றி பிறந்த குழந்தையால் தாய் மாமனுக்கு ஆகாது.

✳ தாய்மாமன் குழந்தையை முதன்முதலில் நல்லெண்ணெயில் பார்த்த பின்பே நேரடியாக பார்க்க வேண்டும்.

7. திருமணம் தடை நீங்க செல்ல வேண்டிய கோவில்கள் மற்றும் பரிகாரங்கள் யாவை?

✳ ஸ்ரீரங்கத்தில் உள்ள பெருமாளை வணங்க வேண்டும்.

✳ மேலும், ஜாதக ரீதியாக திருமண பாவகத்திற்கு உரிய கடவுளை வணங்க வேண்டும். !

நிறம் மாறிக்கொண்டே இருக்கும் அதிசய கோவில் குளம்!! Kashmir


வெவ்வேறு நிறங்களில் மாறும் ஒரு அதிசய கோவில் குளத்தை பற்றி பார்ப்போம்...

🌊 காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலிருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படும் இடம் கீர் பவானி கோவில். இக்கோவிலை சுற்றியுள்ள மரங்களும், சுனையும் பார்ப்பவரை கவர்ந்திழுக்கும். 

🌊 இக்கோவிலில் பக்தர்கள் காணிக்கை அளிக்கும் கீர் என்ற இனிப்பு பதார்த்தத்தையும், பாலையும் கொண்டு இக்கோவில் இப்பெயரை பெற்றது. இந்த கோவிலில் பவானி அம்மன் சிவனோடு அருள்பாலிக்கிறார். 

🌊 இந்த கோவிலில் உள்ள குளத்தின் நீரில் பக்தர்கள் அபிஷேகம் செய்வது வழக்கம். இந்த குளத்தில் இருக்கும் நீரானது பச்சை, இளஞ்சிவப்பு, கறுப்பு, நீலம் என பல்வேறு நிறங்களில் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கிறது.

🌊 எந்த நிறத்தில் நீர் மாறினாலும் பிரச்சனை இல்லை. ஆனால் குளத்தின் நீர் கறுப்பு நிறத்தில் மட்டும் மாறவே கூடாது என்கிறார்கள். குளத்தின் நீர் கறுப்பு நிறத்தில் மாறினால் அது அழிவிற்கான அறிகுறியாம். 

🌊 ஆகையால், நீர் கறுப்பு நிறத்தில் மாறும் அறிகுறி தெரிந்தாலே சுவாமிக்கு விசேஷ பு+ஜைகள் நடத்தப்படுமாம். எவ்வளவு பெரிய ஆபத்தையும் முன்கூட்டியே உணர்த்தும் ஒரு அதிசய குளமாகவே இது பார்க்கப்படுகிறது. 

கண் திருஷ்டி:evil eye

கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது  இது நம்முன்னோர்களின் அனுபவ மொழி. கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி. இதற்கு கண்ணேறு என்றும் ஒரு பெயர் உண்டு. 

நமக்கோ அல்லது நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ திருஷ்டி தோஷங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை பல நிகழ்ச்சிகள் மூலமும், சில அறிகுறிகள் மூலமும் தெரிந்து கொள்ளலாம். திருஷ்டி, தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும். ஒரு சிக்கல் தீருவதற்குள் அடுத்த பிரச்னை காத்துக் கொண்டு இருக்கும். பெண்களுக்கு உடல் சோர்வு, மனச்சோர்வு, இல்லாத ஒன்றை கற்பனை செய்து பயப்படுதல், கணவன்-மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்னைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, சுபநிகழ்ச்சிகளில் தடை, ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படுதல், சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, அடிக்கடி கொட்டாவி விடுவது, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவை உண்டாகும். இதன்மூலம் கண் திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

இதற்கு பரிஹாரங்கள்:

1. வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம். 

2. மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம். 

3. கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். 

4. மிக மெல்லிய வாத்ய இசை, மந்திரங்களை ஒலிக்க விடலாம்.

5.  வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம். 

6. ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.

7. வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.

8. வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.

9. வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.

10. அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.

11. சென்னையை அடுத்த மகாபலிபுரம் போகும் வழியில் உள்ள திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் உள்ள உற்சவ மூர்த்திகளான பெருமாளுக்கும், தாயாருக்கும் தாடையில் திருஷ்டி பொட்டு இயற்கையாகவே அமைந்துள்ளது. இது திருஷ்டி நீக்கும் ஸ்தலமாகும். இங்கு சென்று வழிபடுவதன் மூலம் பொறாமை குணங்கள் மறையும். 

12. ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை தரிசித்து குங்கும அர்ச்சனை செய்து அங்குள்ள கண்ணாடி மாளிகையில் தெரியும் உங்கள் உருவத்தை பார்க்கலாம்.

Friday, November 3, 2017

நளதமயந்தி / நளசரிதம்

ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கினான். தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள். சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர்.

துறவி அன்னப்பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பறவையைக் கண்டான். நளனின் அழகைக் கண்ட பறவை, “”உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன்,” என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.

இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நளனும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர். தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்யமாட்டார். அதே நேரம், கடமையில் சிறுகுற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை. ஒருமுறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. “”இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?” என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.

இதன் பின், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி,குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான். பின், மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டில் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றியது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினான். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான். அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான். அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள்.

 நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான். திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்தபோது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். “”சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது” என வரம் கேட்டான். சனிபகவானும் அருள் புரிந்தார்.

நளன் கதை படிப்பவர்களுக்கு சனியினால் ஏற்படும் பாதிப்புக்கள் வெகுவாக குறையும் என்பது ஐதீகம்.