Monday, May 12, 2014

இந்தியாவில் அறிவுஜீவியாகப் பிறக்கக் கூடாது! - இயக்குநர் ஞான. ராஜசேகரன் பேட்டி

http://tamil.thehindu.com/cinema/cinema-May 9, 2014

‘பாரதி’, ‘பெரியார்’ ஆகியோரின் வாழ்க்கையை மையப்படுத்திய படங்களை இயக்கிக் கவனம் பெற்றவர் ஞான. ராஜசேகரன் இ.ஆ.ப. தற்போது கணித மேதை ராமானுஜத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படமொன்றை ‘ராமானுஜன்’ என்ற தலைப்பிலேயே இயக்கி முடித்திருக்கிறார். சுயசரிதைப் படங்கள், ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு, தமிழ்த் திரையுலகம் போன்ற பல விஷயங்கள் குறித்து அவரிடம் உரையாடியதிலிருந்து...
ராமானுஜன் வாழ்க்கையைப் படமாக்க என்ன காரணம்?
குட்வில் ஹன்டிங் (Goodwill Hunting) என்ற ஹாலிவுட் படம் பார்த்தேன். அந்தப் படத்துல ஒரு கதாபாத்திரம், இன்னொரு கதாபாத்திரம் கிட்ட “நீ என்ன பெரிய ராமானுஜன்னு நினைப்பா?”ன்னு சொல்லுது. “உனக்கு என்ன பெரிய ஜீனியஸ்னு நினைப்பா..” அப்படிங்கிறதுக்குப் பதிலா “நீ என்ன பெரிய ராமானுஜன்னு நினைப்பா?”ன்னு சொல்றாங்க. தமிழ்நாட்டுல பிறந்த ஒருத்தனைப் பத்தி ஹாலிவுட்ல வசனம் இருக்கு. ராமானுஜன் பற்றி அமெரிக்காவுல ஒரு புத்தகம் வெளியாச்சு. அதோட 15-வது பதிப்பு இப்போ வித்துகிட்டு இருக்கு.
ராமானுஜன் கண்டுபிடித்த ‘ஈக்குவேஷன்’ல (Equation) இன்னும் ஒரு 30% கண்டுபிடிக்கப்படாம இருக்கு. முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. அப்படிப்பட்ட ராமானுஜனைப் பற்றி நம்மோட பாடப் புத்தகத்தில் இருக்கா? நாம யாராவது அவரைப் படிச்சிருக்கோமா? அவரை இளைய தலைமுறை தெரிஞ்சுக்கணும்ங்கிற நோக்கத்துக்காகப் பண்ணியிருக்க படம் ‘ராமானுஜன்'.
ராமானுஜத்தோட வாழ்க்கையைப் படிச்சப்போ உங்கள் பார்வையில எதெல்லாம் புதுசா பட்டுது?
ஒருத்தரோட வாழ்க்கைச் சரிதத்தை நினைச்ச உடனே படமா எடுக்க முடியாது. அதுல ஒரு சினிமா இருக்கணும். அவரைப் பற்றிப் படிக்க ஆரம்பிச்சப்போ நிறைய விஷயங்கள் புதுமையாவும், புதுசாவும் இருந்தது. ராமானுஜன் வெளிநாட்டுல 5 வருஷம் இருந்தாரு. அங்கே அவரை காச நோய் தாக்கிடுச்சு. இங்க வந்து 32 வயசுல இறந்துட்டாரு. அவரோட மருத்துவக் குறிப்புகளைப் பற்றி ஒரு பெரிய புத்தகமே ஆங்கிலத்துல இருக்கு. ராமானுஜன் எப்படிச் செத்தார், அது காச நோய்தானா, அவரு சாப்பிட்ட மருந்துகள் என்ன... இப்படி நிறைய விஷயங்கள் அந்தப் புத்தகத்துல இருக்கு.
அப்புறம் இந்தியாவுல அறிவுஜீவியா பிறந்தா அவங்க படுற பாடு இருக்கே, அதைச் சொல்லி முடியாது. ஒருவனோ இல்ல ஒருத்தியோ ஜீனியஸ்னு தெரிஞ்சா அவங்க குடும்பம், சமூகம் முதற்கொண்டு பஞ்சர் பண்ணத்தான் பாக்குறாங்க. நீ ஒரு ஜீனியஸ் கிடையாதுடா, பைத்தியக்காரன்டா, மத்தவங்கள மாதிரி ஏன் இருக்க மாட்டேங்குறன்னு சொல்றாங்க. ஒரு சராசரி மனிதனைத்தான் எல்லாருக்குமே பிடிக்குது. இல்லைன்னா ஜீனியஸா இருக்குறவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுட்டா சரியா ஆயிடுவாங்கன்னு பேச ஆரம்பிச்சுடுவாங்க. இப்போ இந்த 2014-ல கூட ராமானுஜன் மாதிரியான ஜீனியஸ் நம்ம மத்தியில வாழ்ந்தாக்கூட இந்த நிலைமைதான். கொஞ்ச நாளே வாழ்ந்த அந்த அறிஞன் வாழ்க்கையைப் பத்திப் பேச இப்படி நிறைய இருக்கு......

தமிழர்கள் எந்த அளவுக்கு யோக்கியஸ்தர்கள்?

ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவர் என்று கூறிக்கொள்ளும் ஒரு கட்சித் தலைவரின் குடும்பம் ஆசிய அளவில் பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாக மாறியிருப்பதையும்; ஒரு கட்சித் தலைவியின் காலில் அத்தனை அமைச்சர்களும், பார்க்கும் இடங்களிளெல்லாம் படபடவென்று விழுவதையும் உலகம் எப்படிப் பார்க்கும்? தமிழ்நாட்டிலிருந்து மந்திரியானவர்கள் யாருக்கும் நல்ல பெயர் இல்லை. கொஞ்சநஞ்சம் நம்மாட்கள் ஏதாவது துறை சார்ந்து திட்டங்கள் கொண்டுவந்தால்கூட அதைத் தங்கள் ஊருக்குக் கொண்டுபோய்விடுகிறார்கள்; நாடு முழுமைக்கும் இவர்கள் சிந்திப்பது இல்லை என்று நினைக்கிறார்கள்."
"அரசியல்வாதிகள்தான் என்று இல்லை; எல்லாத் துறைகளிலும் இதுதான் நிலை. தமிழர்களிடம் கட்டுமானப் பணியை நம்பிக் கொடுக்கவே அஞ்சுவார்கள். ஒரு பஞ்சாபியிடம் வீட்டு வேலையைக் கொடுத்தால், கூலியோடு வாங்கும் சாமான்களில் கிடைக்கும் கமிஷன் அடிப்பார்; தமிழரிடம் வேலையைக் கொடுத்தால் கூலி, கமிஷன் தவிர வாங்கும் பொருட்களிலும் போலியைக் கலப்பார்; வேலையையும் இழுத்துவிடுவார் என்பார்கள். ஒரு அசாமியத் தொழிலாளியிடம் வேலையைச் சொல்லிவிட்டு சாயங்காலம் நீங்கள் சென்றால், முழு வேலையும் முடிந்திருக்கும்; நம்மாட்களுக்கோ வேலை கொடுப்பவர்கூடவே நின்றாலும் பாதி வேலை மிச்சம் இருக்கும் என்பார்கள். முடிந்த மட்டும் காசு பார்ப்பதை நம்மாட்கள் சாமர்த்தியமாக நினைக் கிறார்கள். மற்றவர்களுக்கு அது ஏமாற்றுதானே? தமிழ் நாட்டுக்கு இங்கிருந்து கூலி வேலைக்கு வரும் வட மாநிலத் தொழிலாளிகளை நம்மாட்கள் எப்படி நடத்து கிறார்கள்? கொத்தடிமைகளைப் போலத்தானே நடத்துகிறார்கள்! மும்பையிலும் கொல்கத்தாவிலும் இருபது இருபத்தைந்து ரூபாய்க்கும் நாம் டாக்ஸியிலேயே ஏறலாம். சென்னையில் ஆட்டோக்காரர்கள் தொடங்குவதே நாற்பது ஐம்பது ரூபாயில்தான். இதையெல்லாம் பார்க்கும் ஒரு வெளியூர்க்காரருக்குத் தமிழர்கள் மீது என்ன சித்திரம் வரும்? நீங்கள் இப்போதுதானே இந்தியாவைச் சுற்ற ஆரம்பித்திருக்கிறீர்கள்? முழுவதும் ஒரு சுற்று சுற்றிவிட்டுப் பாருங்கள். நம் ஆட்கள் ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு அசிங்கமாகப் பேர் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியவரும்."
இது வெறும் சோற்றுப் பிரச்சினையல்ல
நண்பர்கள் சொன்னதில் உள்ள உண்மை வெகு விரைவிலேயே எனக்கு நேரடியாக உரைக்கத் தொடங்கியது. பல விஷயங்கள். முக்கியமாக, சாப்பாட்டு விஷயத்தை மட்டும் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டைத் தாண்டிச் செல்பவர்களுக்கு நம்மூர் உணவு கிடைப்பது இப்போது சிரமம் அல்ல. அநேகமாக எல்லாப் பெருநகரங்களிலும் நம்மூர் உணவு கிடைக்கிறது. ஆனால், அதற்கு நம்மாட்கள் நிர்ணயிக்கும் விலை இருக்கிறதே… கொஞ்சமும் நியாயம் அற்றது.
அது டெல்லியோ, கொல்கத்தாவோ, மும்பையோ… எங்கு சென்றாலும் நூறு ரூபாய் இருந்தால் நல்ல பஞ்சாபி அல்லது குஜராத்தி அல்லது மராத்தி சாப்பாடு வயிறு நிறையச் சாப்பிட்டுவிடலாம். ஆனால், தமிழ் உணவு சாப்பிட்டால், பாதி வயிற்றுக்குத்தான் அது அடங்கும். ஒரு கொடுமையான உதாரணம், டெல்லியில் உள்ள நம்மூர் பிரபல பவன் உணவகச் சாப்பாடு. உடன் வந்த நண்பருக்குச் சின்னக் கிண்ணத் தில் வைக்கப்பட்ட கூட்டு போதவில்லை. கொஞ்சம் கூட்டு கிடைக்குமா என்று கேட்டார். கிடைக்கும்; ஆனால், அதற்குக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்றார்கள். சாதாரணச் சாப்பாடுதான். விலை எவ்வளவு தெரியுமா? ரூ. 210.
நான் இங்கு நம்மூர் சாப்பாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது, தென்னிந்தியச் சாப்பாடு என்று குறிப்பிடாமல், தமிழ்ச் சாப்பாடு என்று குறிப்பிடக் காரணம் இருக்கிறது. நம்மாட்கள் கடையில் சாப்பிடும்போதுதான் இப்படி யானை விலை, குதிரை விலை. ஆந்திர மெஸ்களில் இந்த நிலை இல்லை. நியாயமாக வாங்கிக்கொண்டு, வயிறும் மனதும் நிறையப் பரிமாறு கிறார்கள். உடுப்பி உணவகங்களிலும் இதே நிலைதான்.
இந்தப் பயணத்தில் தமிழ்ச் சாப்பாடு கிடைத்த இடங்களில் ஒரே மரியாதைக்குரிய உணவகம் மும்பை மாதுங்கா பகுதியில் இருக்கும் ‘மணீஸ் லஞ்ச் ஹோம்'. நியாயமான விலை, நல்ல தரம், ருசிக்குப் பேர்போன இந்த உணவகம் 1937-ல் தொடங்கப்பட்டது; சாப்பிடுவது சாப்பாடோ, தோசையோ, பொங்கலோ எதுவானாலும் வயிறாரப் பரிமாறு கிறார்கள். கடை நிர்வாகி கே.எஸ். நாராயணசாமியிடம் பேசிக்கொண்டிருந்தேன். "ஒருகாலத்தில் சாப்பாட்டுக்குக் காசு வாங்குவதே பாவம் என்பார்கள். ஏதோ காலச் சூழல். இதுவும் ஒரு தொழிலாகிவிட்டது. காசையும் வாங்கிக் கொண்டு வயிற்றையும் நிரப்பாமல் அனுப்புவது மகா பாவம் இல்லையா? எனக்கே சொல்லச் சங்கடமாக இருக்கிறது. நம்மாட்கள் இங்கும் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள். ஏன் இப்படி மாறினார்கள் என்று புரியவில்லை" என்பவர், "உண்மையில் கடவுள் நமக்கு வேலை கொடுப்பவர் மூலமாகத் தான் நம்மை வாழவைக்கிறார். அவர்களை ஏமாற்றிவிட்டு எந்தத் தர்மம் பேசுவதிலும் புண்ணியம் இல்லை" என்கிறார்.
நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதை விடவும் முக்கியம் அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது. எல்லாச் சமூகங்களிலுமே நியாயவான்களும் அநியாயக்காரர்களும் அடங்கியிருக் கிறார்கள். பணத்துக்காகப் பண்பு மாறுவது எல்லாச் சமூகங்களிலுமே நடக்கிறது. ஆனால் இந்த நியாயங்கள் நம் தவறுகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள உதவுமா?

http://tamil.thehindu.com/opinion/columns/08/05-2014

Sunday, May 11, 2014

சந்தோசத்தை நாளும் வழங்கும் சனி பகவான் கவசம்

கருநிறக் காகம் ஏறி
காசினி தன்னை காக்கும்
ஒரு பெரும் கிரகமான
ஒப்பற்ற சனியே! உந்தன்
அருள் கேட்டு வணங்குகின்றேன்
ஆதரித் தெம்மை காப்பாய்!
பொருளோடு பொன்னை அள்ளி
பூவுலகில் எமக்குத் தாராய்!
 --------- (1)
சனியெனும் கிழமை கொண்டாய்
சங்கடம் விலக வைப்பாய்
அணிதிகழ் அனுஷம் , பூசம்
ஆன்றதோர் உத்ரட்டாதி.
இனிதே உன் விண்மீ னாகும்
எழில் நீலா மனைவியாவாள்
பணியாக உனக்கு ஆண்டு
பத்தொன்போதென்று சொல்வார்!
 --------- (5)

ஏழரை சனியாய் வந்தும்.
எட்டினில் இடம் பிடித்தும்.
கோளாறு நான்கில் தந்தும்.
கொண்டதோர் கண்ட கத்தில்
ஏழினில் நின்ற போதும்
இன்னல்கள் தாரா வண்ணம்
ஞாலட்தில் எம்மைக் காக்க
நம்பியே தொழுகின்றேன் நான்! --------- (2)
குளிகனை மகனாய் பெற்றாய்!
குறைகளை அகல வைப்பாய்!
எழிலான சூரியன் உன்
இணையற்ற தந்தை யாவார்
விழிபார்த்து பிடித்து கொள்வாய்!
விநாயகர், அனுமன் தன்னை
தொழுதாலோ விலகிச் செல்வாய்
துணையாகி அருளை தாராய்! 
 --------- (6)

பன்னிறு ராசி கட்கும்
பாரினில் நன்மை கிட்ட
எண்ணிய எண்ணம் எல்லாம்
ஈடேறி வழிகள் காட்ட
எண்ணெயில் குளிக்கும் நல்ல
ஈசனே உனைத்துதித்தேன்
புண்ணியம் எனக்கு தந்தே
புகழ்கூட்ட வேண்டும் நீயே!
 --------- (3)

அன்னதானத்தின் மீது
அளவிலா பிரியம் வைத்த
மன்னனே!  சனியே!  உன்னை
மனதார  போற்றுகின்றோம்!
உன்னையே சரணடைந்தோம்!
உயர்வெல்லாம் எமக்குத்தந்தே.
மன்னர் போல் வாழ்வதற்கே
மணியான வழிவகுப்பாய்! 
 ---------  (7)
கருப்பினில் ஆடை ஏற்றாய்!
காகத்தில் ஏறி நின்றாய்!
இரும்பினை உலோகமாக்கி
எள்தனில் பிரியம் வைத்தாய்!
அரும்பினில் நீல வண்ணம்
அணிவித்தால் மகிழ்ச்சி கொள்வாய்!
பெரும் பொருள் வழங்கும் ஈசா
பேரருள் தருக நீயே! --------- (4)
மந்தனாம் காரி , நீலா
மணியான மகர வாசா!
தந்ததோர் கவசம் கேட்டே
சனியென்னும் எங்கள் ஈசா
வந்திடும் துயரம் நீக்கு
வாழ்வினை வசந்தம் ஆக்கு!
எந்த நாள் வந்த போதும்
இனிய நாள் ஆக மாற்று! --------- (8)
ஸ்ரீ சனீஸ்வர பகவான் மந்த்ராஸ்
மோல மந்த்ரா :
ஹரிம் ஸ்ரீம் க்ரஹா சக்ர வர்தினே சனிச்சராய கலீம் இம் சஹா ஸ்வாஹா
புரானிக் மந்த்ரா :
நீலாஞ்சன சமாபாசம்
ரவிபுத்ரம் யமாக்ராஜம்
சஹாயா மார்தாண்ட சம்பூதம்
தம நமாமி ஷனய்ஷ்ச்சரம்
வேதிக் மந்த்ரா :
ஓம் சாம் நோ தேவீர் அபிஷ்டாய
ஆபோ பவந்து பீடையே
சாம் யோரபிய் சரவண்டு நாஹ்
சனி காயத்ரி : 
கஹட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மண்டாஹ் பிரசொடையத்
அல்டேர்ணடே காயத்ரி : 
சனிச்சராய வித்மஹி
சாய புத்ராய தேமாஹி
தானோ மந்த பிரசொடையத்

Friday, May 9, 2014

சிதம்பரம் நடராஜர் கோயில்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்குள் தனிக்கோயிலாக அமைந்துள்ள ஸ்ரீபாண்டிய நாயகர் கோயிலில், காஞ்சி சங்கர மடம் சார்பில் ரூ.4 கோடி செலவில் திருப்பணி செய்து குடமுழுக்கு செய்யப்படும் என காஞ்சிமட பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.

ஸ்ரீபாண்டிய நாயகர் கோயில் என்கிற வள்ளி தெய்வானை உடனாகிய மயில் மீதமர்ந்த சண்முகர் கோயிலுக்குச் சென்று, கோயில் திருப்பணி செய்வது குறித்து பார்வையிட்டார். பின்னர் வள்ளி, தெய்வானை சமேத சண்முகரை தரிசனம் செய்தார். தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில், சிவகாமிஅம்மன் கோயில் ஆகியவற்றுக்குச் சென்று சுவாமி தரிசனம.

 http://tamil.thehindu.com/tamilnadu January 25, 2014

Thursday, May 8, 2014

சூரிய மின் உற்பத்தி என்பது ஒரு மாயை

பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டல் உத்தி
தாராளமயக் கொள்கையின் நோக்கங்களில் ஒன்று, மின்சாரத்தைத் தனியார்மயமாக்குவது. அதன் ஓர் அம்சமே சூரிய மின் உற்பத்தித் திட்டத்தை இந்தியாவில் புகுத்தியது. 1980-களின் இறுதியில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், சீனா, தென் கொரியா, இத்தாலி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் தொடங்கிய சூரிய மின் உற்பத்தித் திட்டம், 2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தோல்வி யடைந்தன. தொழிலில் முன்னணி யில் இருந்த வால்மார்ட் - ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனம், மான்சாண்டோ எலெக்ட்ரானிக் மெட்டீரியல்ஸ் நிறுவனம் உள்ளிட்டவை கடும் பின்னடைவைச் சந்தித்தன.

சுற்றுச்சூழல் சிக்கல்கள் என்ன?
தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் சா. காந்தி சொல்கிறார், “சூரிய ஒளி மின் உற்பத்தி வேண்டாம் என்று சொல்ல வில்லை. தற்போதைய சூரிய மின் உற்பத்தித் தொழில் நுட்பம் ஆபத்தானது. மேலும், அது 2020-க்குள் காலாவதியாகிவிடும். ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள், சூரிய ஒளியிலிருந்து ஒரு தாவரம் சக்தியைப் பெறும் இயற்கையான தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான சூரிய மின் உற்பத்தி குறித்து ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன. ஆனால், இங்கு பழைய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இன்னும் 20 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுவருகின்றனர். இது நஷ்டத்தையே ஏற்படுத்தும். சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி செய்யப் பயன்படும் வேதிப் பொருளான கேட்மியம் டெல்லுரைடு வெளிப்படுத்தும் கதிர்வீச்சால் காசநோய், சில வகைப் புற்றுநோய்கள், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் நோய்கள் ஏற்படும். பல்வேறு மேற்கத்திய நாடுகள் சூரிய மின் உற்பத்திக்குத் தடைவிதித்துவிட்டன. ஜெர்மனியில் கேட்மியம் டெல்லுரைடைப் பயன்படுத்தக் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. ஜப்பானில் பெரும் பாதிப்பை உண்டாக்கிய ‘இட்டாய் இட்டாய்' நோய்க்குக் காரணம் கேட்மியம். மெல்லிய ஃபிலிம் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் செலினியம் என்னும் வேதிப் பொருள் புற்றுநோய்களை உருவாக்கும். இதனைப் பல நாடுகள் தடைசெய்துள்ளன.”
பற்றாக்குறை நிலவும் இந்த நேரத்தில், கூடுதல் மின் உற்பத்தி மிகவும் அத்தியாவசியம்தான். ஆனால், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது. என்ன செய்யப்போகிறோம் நாம்?
- டி.எல்.சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@kslmedia.in
thanks to http://tamil.thehindu.com/opinion/columns

யாரிடம் சூரியசக்தி மின் உற்பத்தி உபகரணங்களை வாங்குவது?  பட்டியல் வெளியிட்டது தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை

வீட்டுக் கூரை மீது அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பு அமைப்பு. 

வீட்டுக் கூரை மீது அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பு அமைப்பு.

தமிழக முதல்வரின் மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டத்தில், அனுமதிக்கப்பட்ட சூரியசக்தி உபகரணம் அமைக்கும் நிறுவனங்களின் பட்டியலை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா) வெளியிட்டுள்ளது.

மரபுசாரா எரிசக்தியான சூரிய சக்தி, காற்றாலை மற்றும் உயிரித் தொழில்நுட்ப  மின்சக்தியை அதி கரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில், தமிழகத்தில் புதிய சூரியசக்தி மின் கொள்கையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, மேற்கூரை சூரியசக்தி திட்டம் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தில் ஒரு கிலோவாட் சூரிய மின்சக்தி திட்டத்துக்கு, மத்திய அரசு 30 சதவீதம் மானியம் வழங்கும். இத்துடன் கூடுதலாக 20 சதவீத மானியத்தை தமிழக அரசு வழங்கும்.

அதாவது, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு கிலோவாட் சூரியசக்தி திட்டத்துக்கு, மத்திய அரசு ரூ.30 ஆயிரமும், தமிழக அரசு ரூ.20 ஆயிரமும் மானியமாக வழங்கும்.

இந்த திட்டத்தின் கீழ், சூரியசக்தி உபகரணங்கள் அமைக்கும் நிறுவனங்களை தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை தேர்ந்தெடுத்துள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியுடன் தகுதியான நிறுவனங்களை எரிசக்தி முகமை தேர்வு செய்து, அதற்கான பட்டியலை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

மொத்தம் எட்டு விதமான பிரிவுகளில் இந்த நிறுவனங்களின் பெயர்கள், முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒரு கிலோவாட், இரண்டு கிலோவாட், ஐந்து கிலோவாட் மற்றும் 10 கிலோவாட் ஆகியவற்றுக்கான உபகரணங்களை ஐந்து வருட வாரண்டி மற்றும் ஐந்தாண்டு பராமரிப்புடன் அமைக்கும் நிறுவனங்களின் பட்டியலை, www.teda.in என்ற இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.21/02/2014

தானம்

ஒரு எளியவருக்கு தானம் அளிக்கும் போது நாம் மனதில் சற்றும் அகந்தையில்லாமல் அவரை பணிவுடன் வணங்கிப் பரிவுடனும் தாழ்மையுடன் பிட்சை வழங்க வேண்டும்.. ஒரு நற்செயல் செய்யும் வாய்ப்பை நமக்கு நல்கிய அந்த நல்லவருக்கு நாம் கடன் பெற்றிருப்பதை நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். 

பிச்சைக்காரர் பார்வையற்றவராக இருக்கிறார்... நான் வணங்குவதும் பணிவதும் அவர் கண்டு உணர வாய்ப்பில்லை.என்னுடைய பணிவான பாவனை எதுவும் அவருக்கு எந்த வித நெகிழ்ச்சியையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை. அதனால் அது தேவையில்லை என்றான் இந்த பதிலைக்கேட்டு குரு தீவிரமாக அவனைப் பார்த்து விட்டு ஆழ்ந்தக் குரலில் சொன்னார்.

“சீடனே இங்கே நீ இரண்டு விஷயத்தை ஊகிக்கத் தவறிவிட்டாய்.
ஒன்று, அந்தப் பிச்சைக்காரன் நிஜமாக அப்படி இல்லாமல் குருடனைப் போல் வெறுமனே பாவனை செய்து கொண்டிருக்கலாம்!
இரண்டு, அவன் பார்வையற்றவனாக இருந்தாலும் கடமையை ஆற்றுவதில் நீ நேர்மையற்றவனாக இருக்கக் கூடாது. அப்போது அதன் பயனை நீ இழந்து விடுவாய் அல்லவா?”
சீடன் திகைப்பும் வியப்புமாக குருவைப் பார்த்து நின்றான்.
அவர் சொன்ன வரிகளின் அர்த்தங்கள் அவனுக்குள் வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

நரசிம்ம ஜெயந்தி


வைகாசி மாதம் வளர்பிறை சதுர்தசி திதியில்தான் வைகுண்டவாசன் நரசிம்மராக அவதாரம் எடுத்தார். அந்த நாளைத்தான் பக்தர்கள் நரசிம்ம ஜெயந்தியாக வழிபட்டு மகிழ்கின்றனர். அன்றைய தினம் நரசிம்மரைத் தரிசித்து, வழிபட்டால் பகையை வெல்லலாம் என்பது ஐதீகம்.

அகோபில தரிசனம்
நரசிம்ம ஜெயந்தியன்று நரசிம்மர் தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்த ஆந்திர மாநிலத்தில் உள்ள அகோபிலத்துக்குத் தனிச் சிறப்பு உண்டு. அங்கே நரசிம்மர் வெளிப்பட்ட தூண், உக்கிர ஸ்தம்பம் என்னும் பெயரில் இருக்கிறது. இரணியன் ஆண்ட இடம், பிரகலாதன் கல்வி கற்ற இடம், நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்த இடம் ஆகியவை இங்கே இருப்பதால் நரசிம்ம ஜெயந்தியன்று தரிசிக்க உகந்த இடங்களில் ஒன்றாக அகோபிலம் விளங்குகிறது.