Showing posts with label Mental. Show all posts
Showing posts with label Mental. Show all posts

Wednesday, October 12, 2016

மன நிலையை நாமே சரி செய்ய ஒரு கருவி நரம்பணுவியலையும் தொழில்நுட்பத்தையும் இணைத்து `Thync’

மனச் சோர்வு, மன அழுத்தம், கோபம், பதற்றம், வெறுமை போன்றவை ஏற்படும்பொழுது அதிலிருந்து மீள்வது சற்றுக் கடினமான விஷயமாக இருக்கும். நம் மன நிலையை நாமே சரி செய்துகொண்டு, புத்துணர்ச்சி பெற்றுக்கொள்வதற்கு ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நரம்பணுவியலையும் தொழில்நுட்பத்தையும் இணைத்து `Thync’ என்ற கருவி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருவியை முன் தலையில் மாட்டிக்கொண்டால் மனநிலை வேகமாக மாறும். சந்தோஷமாக இருக்க வேண்டுமா, புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டுமா, தீவிரமாகச் சிந்திக்க வேண்டுமா என்பதை நீங்கள் முடிவு செய்துகொண்டு, கருவியை அதற்கேற்றவாறு மாற்றிக்கொண்டால் போதும்.
நீங்கள் விரும்பிய மனநிலைக்குத் திரும்பிவிடுவீர்கள். ஸ்மார்ட் போன் மூலம் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்துகொண்டு கருவியை இயக்கிக்கொள்ளலாம். நிம்மதி தேடுகிறேன், துக்கத்தை மறக்க நினைக்கிறேன் என்று கூறிக்கொண்டு மது, போதைப் பொருட்களுக்கு அடிமையாக வேண்டிய அவசியமில்லை. இந்தச் சின்னக் கருவியே துக்கத்திலிருந்து விடுவித்து, சந்தோஷமான மனநிலைக்கு மாற்றிவிடுகிறது. ஹார்வார்டைச் சேர்ந்த பொறியியல் நிபுணர்களும் நரம்பணுவியல் நிபுணர்களும் இணைந்து இதை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சிக்காக 95 கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது. 3,700 மனிதர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அனைவராலும் வரவேற்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் விற்பனைக்கு வந்து, அமோக வரவேற்பைப் பெற்றிருக்கிறது Thync.

Saturday, April 11, 2015

சீக்கிரம் மனநோய் தீர வழி

எனது வயது 91. ஐந்து மகன்கள். இதில் ஒருவன் பி.ஏ. படித்து அரசு பணியில் இருந்தான். 27 வயதில் திடீரென மனநோயால் பாதிக்கப்பட்டு வேலையை இழந்தான். ஏராளமான மருத்துவம் பார்த்தும் யாதொரு பயனும் இல்லை. மனநோய் முற்றிப்போய் அனைவருக்கும் மனக்கஷ்டத்தை கொடுத்து வருகிறான். கண்ணுக்கெதிரே என் மகன் படும் கஷ்டங்களை பார்த்து வருத்தப்படுகிறேன். தாங்கள்தான் நல்ல பரிகாரம் சொல்லி உதவ வேண்டும்.

உங்கள் மகனுக்கு வெகு சீக்கிரம் மனநோய் தீர வழி சொல்கிறேன், கவலைப்படாதீர்கள். எல்லா தேவதைகளாலும் அஞ்சப்படும் சிவனை வணங்குங்கள். இருளோடி இருக்கும் மனதில் வெளிச்சம் உண்டாகும்.

தங்கள் மகனை கும்பகோணத்திற்கு அருகே திருவிடைமருதூர் தலத்தில் அருள்பாலிக்கும் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். ஐந்து முகம் கொண்ட ருத்ராட்ச மாலையை 108 என்ற எண்ணிக்கையில் செய்து ஈஸ்வரனின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்யச் சொல்லுங்கள்.

பிறகு, அதை வாங்கி தங்கள் மகன் கழுத்தில் போட்டு அபிஷேக தீர்த்தம் உட்கொள்ளச் சொல்லுங்கள். கோயில் பிராகாரத்தை ஒரு நாளில் மூன்று முறை வலம் வரச் சொல்லுங்கள்.

முடிந்தால் மூன்று நாட்கள் அந்த தலத்தில் தங்குங்கள். இன்னொரு முக்கிய விஷயம், வீட்டில் எப்போதும் சுகந்தமான மணம் கமழும் ஊதுவத்தியை ஏற்றி வையுங்கள். தீங்கு செய்யும் துர்தேவதைகளின் நடமாட்டம் குறையும்.

அழுக்குத் துணிகள் நிறைய வீட்டில் இருந்தால் அகற்றிவிடுங்கள். துர்நாற்றம் அதிகமிருக்கும் இடங்களில் துர்தேவதைகள் நடமாட்டம் இருக்குமென சாத்திரங்கள் சொல்கின்றன.

தந்தையாக ஒரு மகனுக்கு உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள். கப்பலில் பிரயாணம் செய்வது நம் பொறுப்பு. அதை கரை சேர்க்க வேண்டியது பகவான் பொறுப்பு.

உங்கள் மகனுக்காக ‘ஸர்வபூத தமனாய நமஹ’ என்னும் திருநாமத்தை விடாது ஜபித்து சிவனை பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் மகன் தெளிவு பெறுவான்.http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=39