Wednesday, October 12, 2016

kitchen treatment

நெஞ்சு சளி : தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி ;  ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.                         

தொண்டை கரகரப்பு : சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.


தொடர் விக்கல் : நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.   

வாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தை தான் சமைப்பது வழக்கம். அதற்காக மற்ற வகை வாழைக்காய்களை சாப்பிடக் கூடாது என்பது கிடையாது. அவைகள் பரவலாக கிடைப்பதில்லை. 
மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து இருக்கிறது. இதனால் உடல் பருக்கும். உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். பசியை அடக்கும். இதனுடன் மிளகு சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. வாயால் ரத்தம் கக்குபவர்களுக்கும், கிராணி, நீரழிவு உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக் கச்சல் பயன்படும். 


வாழைக்காயைச் சமைக்கும்போது மேல் தோலை மெல்லியதாகச் சீவியெடுத்தால் போதும். உள்தோலுடன் சமைப்பதே சிறந்தது. சிலர் இதுபோன்று சீவியெடுத்த தோலை நறுக்கி வதக்கி, புளி, மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். பொதுவாக கேரளத்தில் இந்தப் பழக்கம் அதிகம் இருக்கிறது. 

இப்படி துவையலாக செய்து சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், பலமும் உண்டாகும். வாழைக்காய் சாப்பிடு வதால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் ஆகியவையும் நீங்கும். ஆனால் வாய்வு மிகும். அதுபோல வாழைப்பிஞ்சு சாப்பிடுவது பத்தியத்திற்கு ஏற்றதுதான் என்றாலும் மலத்தை இறுக்கி விடும். 

பச்சை வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில்; உலர்த்தி மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.                                                                                    

🍀 வாயு தொல்லை:  வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.


வயிற்று வலி : வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.                                                                       

🍀  நெஞ்சு சளி: தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.


தலைவலி : ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.                         

🍀 தொண்டை கரகரப்பு : சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.


தொடர் விக்கல் 
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.                                                                                   

🍀 அஜீரணம் : ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். 


அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.                         

🍀 சரும நோய் ; கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும். 

மூக்கடைப்பு : ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.                         

No comments:

Post a Comment