Monday, August 1, 2016

உங்கள் குழந்தையின் ஸ்கூல் டிபன் பாக்ஸில் இருக்க வேண்டிய உணவுகள் இவை...!

பள்ளிக் குழந்தைகளில் பெரும்பாலானோர், குறிப்பாக நகர்ப்புற குழந்தைகள் விளம்பரங்களில் காட்டப்படும்  சத்தில்லா உணவுகளையே அதிகம் விரும்புகிறார்கள். வீட்டில் அம்மா சமைக்கும் உணவைக்கூட விரும்புவதில்லை. மேலும் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் காலை உணவை சரிவர சாப்பிடுவதில்லை.
இந்நிலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எது சத்தான உணவு... என்னென்ன உணவுகளை அவர்கள் சாப்பிட வேண்டும் என்பதை சொல்கிறார், டாக்டர் ஷீலா பால்.
காலை உணவு:
*இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் இவற்றில் ஏதாவது ஒன்றை காலை உணவாகக் கொள்ளலாம்.
*10 வகையான தானியங்களைச் சேர்த்து அரைத்த மாவில் அல்லது  பருப்பு வகைகளின் மாவில் செய்த தோசையை கொடுக்கலாம். சுவையாகவும் சத்துள்ளதாகவும் இருக்கும்.
*அரிசி மாவோடு கேரட், பீட்ரூட், தேங்காய் என காய்கறிகளையும் அரைத்துக் கலந்து,  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஒரு தோசை செய்து கொடுக்கலாம்.
*புதினா, கொத்தமல்லியில் சட்னி செய்தால் சுவையாக இருக்கும்.
பள்ளி இடைவேளை நேரத்தில்:

* கடலைமிட்டாய், பாதாம் பருப்பு ஆகியவை சாப்பிட்டால் சக்தி கிடைக்கும்; சோர்வு, தூக்கம் வராது.
*பழங்கள், காய்கறி சாலட்கள்  சாப்பிடலாம்.
* தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

மதியம்:
* கீரை சாதம், புளி சாதம், வெண்டைக்காய்ப் பொரியல் கலந்த சாதம், கேரட் பொரியல் கலந்த சாதம் சத்தானவை. அதோடு பருப்பு, நெய் கலந்தால், கூடுதல் சுவை, சத்துகள் கிடைக்கும்.
மாலை:
* கொண்டைக்கடலை, பாசிப்பயறு, காராமணி, மொச்சை, கடலைப் பருப்பு சுண்டல் சாப்பிட வேண்டும்.
* காய்கறி சூப்  குடிக்கலாம்.
* அந்தந்த பருவகாலங்களில் விளையும் காய்கறிகள், பழங்களை அவசியம் சாப்பிட வேண்டும்.


செய்யக் கூடாதவை:
* பழங்களை ஜூஸாகக்  குடிக்கக் கூடாது.
* நூடுல்ஸ், மைதா கலந்த உணவுகளைத்  தவிர்க்கவும்.
*  சர்க்கரை, உப்பு, எண்ணெய் குறைவாகச் சேர்த்துக்கொள்ளவும்.
*  எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிடக் கூடாது.
*  ஊறுகாய், அப்பளம் தவிக்கவும்.
*  பாக்கெட்டுகளில் அடைத்து வரும்  சிப்ஸ், பர்கர், டிரிங்ஸ்,மிக்ஸர் போன்றவற்றை உட்கொள்ளக் கூடாது.
அவசியம் செய்ய வேண்டியவை.
* காலையில் சீக்கிரமே எழ வேண்டும்.
* சாப்பிடாமல் பள்ளிக்குப் போகக் கூடாது. இதனால்,பாடத்தின் மீது கவனம் ஏற்படாது.
*  டி.வி பார்த்துக்கொண்டே சாப்பிடக் கூடாது.
*  வெளி உணவுகளை அடிக்கடி சாப்பிடக் கூடாது.
*  ஒரே விதமான உணவைத் தினமும் சாப்பிடக் கூடாது.
*  ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு உணவு தயாரிக்காமல், எல்லோருக்கும் ஒரே உணவையே சமைக்க வேண்டும்.
* வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்தே சாப்பிட வேண்டும்.
இவற்றை எல்லாம் குழந்தைப் பருவம் முதலே கடைப்பிடித்தால், நோய்கள் நம்மை நெருங்காது.  -கே.ஆர்.ராஜமாணிக்கம்

No comments:

Post a Comment