Showing posts with label rent. Show all posts
Showing posts with label rent. Show all posts

Monday, May 4, 2015

இழந்ததை அடைய, கிரிவலத்தின் துதி

12 வருடங்களாக எங்கள் வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கிறார்கள் அடாவடி பேர்வழியினர். கோர்ட்டில் எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தும் அவர்கள் வெளியேற மறுக்கிறார்கள். பரிகாரம் கூறுங்கள். 

உங்கள் தரப்பில் நியாயம் இருக்கும் பட்சத்தில் கீழே சொன்னவற்றைச் செய்யுங்கள்.  வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் புவனேஸ்வரி படம் வைத்து அலங்கரித்து, தேன் நிவேதனம் செய்து, ‘வாஞ்சி தார்த்த ப்ரதாயின்யை நமஹ’ என 336 தடவை சொல்லி முடித்து, அந்தத் தேனை  ஏதேனும் பெண் குழந்தைக்குக் கொடுங்கள்.  ஒரு மாதம் முழுவதும் செய்யுங்கள். இழந்ததை அடைவீர்கள்.  
 ****
தெய்வ காரியங்களை ஆலயத்தில் செய்ய முடியாது போனால் வீட்டிலும், அதுவும் முடியாது போனால் நாவினாலும் மனதினாலும் இறை பூஜை செய்யுங்கள் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனாலும், தொடர்ந்து கிரிவலம் வருவதற்கு உனது அருள் வேண்டும் என்று அருணாசலேஸ்வரரை பிரார்த்தனை செய்யுங்கள். பௌர்ணமியன்று கீழ்க் காணும் துதிகளை மனமுருக சொல்லுங்கள். கிரிவலத்தின் பலன் நிச்சயம் கிட்டும்.

லோகஸ்ய பாபானி வினாசயந்தம்
மகோததிம் சாபி ஸமேதயந்தம்
பூதாநி ஸர்வாணி விராஜயந்தம்
ததர்ச சீதாம்சு மதாபியாந்தம்

****

கறுப்பு நூலால் கட்டப்பட்ட பொம்மைகளை பார்த்தோம். யாரோ சூன்யம் வைத்திருப்பதாக அஞ்சுகிறோம். என்ன செய்வது?வீட்டிற்குள் சில காரியங்களைச் செய்யக் கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது: தலைமுடி உதிர்த்தல், நகம் வெட்டிப் போடுதல் அல்லது கடித்துத் துப்புதல், தலைமுடியிலிருந்து ஈரம் சொட்டச் சொட்ட வருவது, வீட்டை பெருக்கியபின் துடைப்பத்தின் புழுதிகளை அப்படியே விட்டு வைப்பது.

இதெல்லாம் கெட்ட சக்திகளை எளிதாக வீட்டினுள் வரச் செய்யும். குங்குமத்துக்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வது. மங்கல நாட்களில் கருப்பு ஆடை அணிவது, வீட்டில் காலையில் விளக்கேற்றாமல் அலுவலகங்களுக்கும், வெளியிலும் செல்வது.

மாலையில் விளக்கேற்றாமல் இருப்பது போன்ற விஷயங்களை சரி செய்துகொள்ள வேண்டும்.

பகளாமுகி என்ற சக்தி வடிவத்துக்கு தீய  சக்திகளை ஒடுக்கும் ஆற்றல் உள்ளதால், ‘ஸ்தம்பினீ’ என்ற பெயரும் இவளுக்கு உண்டு. கீழ்க்காணும் ஸ்லோகத்தை தினசரி 28 தடவை சொல்லுங்கள். தூய மனதோடு, இறைவன் மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கு தடையை களையும் திறன் தானாகவே கிடைத்துவிடும்.

க்ஷுத்ராரி ரோக பயதுக்க பிசாசம்ருத்யு
பூதாபவாத நரகார்ணவ பாத கேப்ய:
த்ராணாய மே பவ பயாதபி விச்வமாத:
ப்ரத்யங்கிரே ஸபதி தேஹி கராவலம்பம்!
           http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=115

****

நல்ல நிறுவனத்தில், நல்ல பதவியில் உள்ள என்னை 3 வருடங்களுக்கு மேலாகியும் பணி நிரந்தரம் செய்ய  வேண்டும்?

சாஸ்தா படத்தை அலங்கரித்து கீழ்க்காணும் ஸ்லோகத்தை தினசரி 18 முறை படியுங்கள்.

ஆச்யாம கோமள விசால
தனும் விசித்ர
வாஸோ வஸானம்
அருணோத் பலதாம ஹஸ்தம்
உத்துங்க ரத்ன மகுடம்
குடிலாக்ர கேசம்
சாஸ்தாரம் இஷ்டவரதம் சரணம் ப்ரபத்யே!

****

நிலத்தின் உரிமையாளர் தானே வந்து எங்களிடம் விற்பதற்கு சம்மதித்து அட்வான்ஸ் தொகையைப் பெற்றுக் கொண்டார். பின் மனம் மாறி சாஸனம் செய்துதர மறுக்கிறார். வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. எங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க என்ன பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டும்?


உங்கள் பக்கத்தில் நியாயம் இருக்குமானால் கீழ்க்கண்ட வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். வெற்றி கிட்டும்.

மலையை தூக்கியபடி ஆகாயத்தில் பறக்கும் அனுமனது படத்தை துளசி மாலை, வெண்ணெய், வடை மாலைகளால் அலங்கரித்து, கிழக்கு திசைநோக்கி வைத்து 108 முறை கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.

அதேசமயம் சீர்காழிக்கு அருகேயுள்ள திருவெண்காடு தலத்தில் ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள புதன் பகவானையும், அகோர மூர்த்தியையும் வணங்குங்கள்.

மார்க்கடேச மகாத்ஸாஹ
ஸர்வபீதி வினாசக!
சத்ரூன் ஸம்ஹார மாம்ரக்ஷ
ச்ரியம் தாஸாய தேஹிமே!

****

மகனால் நிம்மதியில்லை. ஒரு அமாவாசையன்று ஏதோ ஓர் உருவம் என்னை அழுத்துவது போல உணர்ந்தேன். அடுத்து பௌர்ணமியிலும் என் உடல் சித்ரவதை அடைகிறது. டாக்டரிடம் காட்டினேன். உடல் ரீதியான உபாதை எதுவும் இல்லை என்கிறார். எனக்கு பரிகாரம் கூறவும்.

நீங்களாக எதுவோ அழுத்தும் பிரமையில் ஆழ்ந்துவிடாதீர்கள். ஏதேனும் உடல்நலக் கோளாறுடன், மன அழுத்தம், மன உளைச்சல் இருந்தால் இப்படி ஆகும்.

மனதை லேசாக்கிக் கொள்ளுங்கள். உங்களின் நிம்மதியின்மைக்கு ஒன்று, நீங்கள் பிடிவாதம் பிடிக்கும் விஷயத்தில் தோல்வியுற்றிருக்க வேண்டும். அல்லது எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் இருந்திருக்கக் கூடும்.

உங்கள் மகன் மிகவும் சிரமப்படுத்தியதாகவும், அதனால் பிரச்னைகள் அதிகமாகியது என்றும் நீங்களே எழுதியிருக்கிறீர்கள். உடல்நிலை சரியில்லாமல் போனது என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.

இதைவிட வேறெந்த காரணமும் உங்களது இப்போதைய நிலைக்கு வேண்டாம். அதனால், நிம்மதியாக இருக்கும் வழியை நீங்களாக கண்டுபிடிக்க முடியும். எந்தப் பிரச்னைக்கும் உடனடியாகத் தீர்வு காண்பது மனித இயல்பு.

ஆனால், பல சமயங்களில் அப்படி நிகழ்வதில்லை. நம்மால் தீர்வு காண முடியாத விஷயங்களுக்கெல்லாம் பெரியவர்களின் அறிவுரையை கேட்போம்.
வேதமறிந்தோரை அணுகி, ‘தில ஹோமம் செய்ய முடியுமா?’ என்று கேட்டுப் பாருங்கள்.

வில்வ மரத்தடியில் புரோகிதரை அழைத்துப் போய் ஆடிமாதப் பிறப்பு, தைமாதப் பிறப்பு நாட்களில் முன்னோர்கள் அனைவருக்கும் தனித்தனியாக எள் நீரைக் கொண்டு தர்ப்பணம் செய்து முடியுங்கள்.

சிவன் கோயிலில் வழிபாடு செய்யுங்கள். மூன்று மாதம் வரை தொடர்ந்து காக்கைக்கு எள் சாதம் போடுங்கள். அமாவாசைதோறும் ஆற்றிலோ, குளத்திலோ கறுப்பு எள்ளை மீன்களுக்குப் போடுங்கள். எல்லாம் சரியாகும்.