Showing posts with label ancestral rituals customs. Show all posts
Showing posts with label ancestral rituals customs. Show all posts

Thursday, September 11, 2014

ancesrtol prayer tharpanam

பித்ருக்களை வழிபடும் திருநாள்
புரட்டாசி மாதத்தில் முன்னோர்களை வழிபடக் கூடிய மஹாளய பட்சம் என்ற 15 தினங்கள் இம்மாத பவுர்ணமி திதி முதல் தொடங்கி அமாவாசையில் நிறைவு பெறுகிறது.
மஹாளய பட்ச அமாவாசையில் எல்லா மூதாதையர்களும் சூரிய சந்திர உலகத்துக்கு வருவதால் அனைத்து உறவினர்களுடைய சந்திப்பும் நிகழ்கிறது. அன்று செய்கின்ற தர்ப்பணத்தில் விடுகின்ற எள் மற்றும் தண்ணீரை ஸ்வேதா தேவி என்பவள் மிக எளிதாக இறந்தவர்களது கையில் சேர்த்துவிடுகிறாள்.
மஹாளய தர்ப்பணத்தின் அவசியம்
மறந்துவிட்டதை மஹாளயத்தில் விடு என்பார்கள் பெரியவர்கள். நாம் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய திதி நாளை விட்டுவிட்டால் இந்தப் புண்ணிய தினத்தில் செய்துவிடலாம்.
பெற்றோர்கள் ஐம்பூத உடல் எனப்படும் உடலை விட்டு விண்ணுலகம் சென்ற பிறகு பித்ருக்கள், வைவஸ்வசன் ஆதி என்ற தலைவனின் கட்டுப்பாட்டில் வசிக்கிறார்கள். சொர்க்க பூமி என்ற போதிலும் அவர்களுக்கு வேண்டிய உணவு வகைகளைத் தாங்களே எடுத்துக்கொள்ள முடியாது.
தங்கள் பிள்ளைகளுக்குச் சேர்த்து வைத்த சொத்துகளுக்கு கைம்மாறு வேண்டும் என்று கேட்டனர். இதனால் பித்ருக்கள் மீது பரிதாபப்பட்ட எமதர்மராஜன், அவர்களுக்கு 15 தினங்கள் விடுமுறை கொடுத்து பிள்ளைகளின் கையால் வயிறாரச் சாப்பிடச் சொல்லி மண்ணுலகிற்கு அனுப்பினான். அந்தக் காலமே மஹாளய பட்சம்.
பித்ருக்களுக்கு உற்சவ காலம் என்று கருதப்படுவதால் இந்த தினங்களில் அவரவர் தந்தை, தாய் இறந்த திதியில் எள் தர்ப்பணம் செய்து பிண்டம் சமர்ப்பிக்க வேண்டும்.
நம்மை உயர்த்திய பெற்றோர்களுக்குத் திதி கொடுப்பது நமது கடமை. மஹாளயம் என்பதற்குச் சுப காரியம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. மஹாளய பட்ச நாட்களில் சிரார்த்தம் செய்வதால் நமது முன்னோர்களும் சிறு வயதில் இறந்தவர்களும் பிறந்த உடன் இறந்த குழந்தைகளும், துர்மரணம் அடைந்தவர்களும் நல்ல கதி அடைவார்கள்.
மஹாளய பட்ச திதிகளின் பலன்கள்
நாம் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு முதலில் பித்ருக்களைத் திருப்தி அடையச் செய்தல் வேண்டும். மஹாளய பட்சத் திதி நாட்களில் பிரதமை முதல் அமாவாசை வரை ஏதேனும் ஒரு கோயிலில் உள்ள புனித தீர்த்தம், நதிக்கரை, குளக்கரைகளில் அமர்ந்து தர்ப்பணம் செய்துவிடுவதால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து நேரடியாக நாம் தருவதை ஏற்று ஆசி வழங்குவார்கள்.
தர்ப்பணம் செய்யும் இடங்கள்
இந்திய மண்ணில் பல பித்ரு தோஷ நிவர்த்தி ஸ்தலங்கள் காணப்படுகின்றன. அவற்றில் ராமேஸ்வரம் கடற்கரை, கோடியக்கரை, பவானி கூடுதுறை, குமரி முறை, திருஆலங்காடு, தில தர்ப்பண புரி, திருவள்ளூர், மன்னார்குடி அருகே திருராமேஸ்வரம், ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபம், திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்திக் கட்டம், கன்னியாகுமரி, பூம்புகார், வேதாரண்யம், திருப்பூந்துருத்தி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
ஆலயங்களுக்குள் பித்ரு தோஷ நிவர்த்தி தர்ப்பணத்தைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அங்குள்ள புனித தீர்த்தக்கரைகளில் செய்துவிட்டு ஆலயத்தில் தீபம் ஏற்றிவிட்டு வருவதே முறையான வழிபாடு.
மகத்துவம் நிறைந்த மணிகர்ணிகா கட்டங்கள்
பெற்றோர் உயிர்நீத்த பின்னர் அவர்கள் நற்கதி அடைய ஒரு முறையாவது காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராடி அங்கே மணிகர்ணிகா காட் என்ற படித்துறையில் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
அங்கே பிண்டம் சமர்ப்பித்து காசி விஸ்வநாதரை தரிசித்து மற்ற சன்னதிகளையும் தரிசனம் செய்தபின் கயா சென்று 16 பிண்டங்களை சமர்ப்பித்து விஷ்ணுபாத தரிசனம் செய்வது வழக்கம்.
காசி தவிர வேதாரண்யத்தில் மணிகர்ணிகா கங்கை, மதுரையில் திருப்பூவனம் மணிகர்ணிகா குளம், திருச்சியில் உள்ள திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் கோயிலில் உள்ள வராக மணுகர்ணிகை, பல்லாவரம் அருகில் உள்ள திருநீர்மலை ரங்கநாதர் கோயில் எதிரில் உள்ள மணிகர்ணிகா புஷ்கரணி ஆகியவை மஹாளய தர்ப்பண வழிபாடு செய்யவும் பித்ரு தோஷங்கள் அகலவும் உகந்த மதிப்புமிக்க இடங்களாக விளங்குகின்றன. 

மஹாளய பட்சம்கடவுள்கள் செய்த தர்ப்பணம்

இல்லத்தில் உள்ள பெரியோர்களின் ஆசி என்பது மிக உயரிய சொத்து. இது பல தலைமுறைகளைக் காக்கும் என்பதால் ராமர், கிருஷ்ணர் ஆகிய விஷ்ணு அவதாரங்கள்கூட இந்த நாளில் தர்ப்பணம் செய்தார்களாம். அவர்களோ ஆதிமுதலான தெய்வங்கள் அவர்களுக்கு எங்கே முன்னோர்கள் என்று தோன்றலாம்.
அவர்கள் விஷ்ணுவாக இருக்கும்போது, தர்ப்பணம் செய்ய வேண்டிய தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் மனித உருவெடுத்துப் பிறந்த இல்லங்களில் முன்னோர்கள் உண்டல்லவா? அம்முன்னோர்களைத் திருப்திபடுத்தவே, ஆராதிக்கவே ராமரும், கிருஷ்ணரும் தர்ப்பணம் செய்தார்கள் என்பது குறிப்பிட்டு நோக்கத்தக்கது.
பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் வல்லமை கொண்ட அவதாரங்களே தர்ப்பணம் பண்ண வேண்டுமென்றால், மனிதர்கள் எம்மாத்திரம்? பித்ருக்களின் ஆசீர்வாதம் குலத்தைக் காக்கும் என்பார்கள். மனித குலத்தைக் காக்கவே அவர்களும் தர்ப்பணம் செய்தார்கள் போலும்.
தர்ப்பணம்
உடல் நிலை சரியில்லாதவர்கள் தர்ப்பணத்தை இல்லத்திலும் அளிக்கலாம். ஆனால் தீர்த்தத் தலங்களுக்கு சென்று தர்ப்பணத்தை எள், நீர் தெளித்துச் செய்தால் பலன் பல மடங்கு கூடும் என்பது ஐதீகம்.
தர்ப்பணங்களில் எள் பித்ருக்களுக்கு உரித்தானதாக இருக்கிறது. இந்தத் தர்ப்பணத்தால் பித்ருக்களுக்கு பசியும், தாகமும் தீரும் என்பது சாஸ்திரம். இதனால் வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் என்பது ஐதீகம்.
மகாளய புண்ணிய காலம்
தம் குலக் கொழுந்துகள் நன்றாக இருக்கின்றனரா என்று காண வரும் முன்னோர்கள் மனம் மகிழும்படி இக்காலகட்டத்தில் இல்லத்தைத் தூய்மையாக வைத்திருத்தல் அவசியம். சண்டை சச்சரவுகள் இன்றி, இல்லம் அமைதியாக இருப்பது அவர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்குமாம்.
இந்த மஹாளய பட்ச நாட்களைக் குறித்து கருட புராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் ஆகியவற்றில் சிறப்பித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாட்களில் காகத்துக்கு அன்னமிடுதலும், பசுவுக்கு அகத்திக் கீரை அளித்தலும் பல நற்பலன்களை அளிக்கும்.
பலன்
பித்ருக்கள் ஒருபோதும் தன் குலத்தைச் சபிக்கப்போவது இல்லைதான். ஆனால் அவர்கள் மனம் மகிழ்வடையும்பொழுது, வழங்கும் ஆசிகள் இல்லத்தில் கவலை அளிக்கக்கூடிய, திருமணத் தடை, புத்திரப் பேறின்மை, கடன் தொல்லை, மனக் கவலை, நவக்கிரக தோஷங்கள் ஆகியவற்றை நீக்கி மன அமைதியையும் நிம்மதியையும் அளிக்கும் என்பது நம்பிக்கை.இந்த நன்னாட்களில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை எனச் சில விஷயங்கள் உண்டு.
செய்ய வேண்டியவை
இல்லத்தில் உள்ள பெரியவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ பசியால் வாடிவிடாமல் காக்க வேண்டும். இருக்கும்போதும், இறந்த பின்னும் முன்னோரைக் காப்போம், வழிபடுவோம்.
தர்ப்பணத்திற்குப் பின்னரே இல்லத்துப் பூஜைகள் செய்ய வேண்டும்.தர்ப்பணம் செய்ய வேண்டிய இம்மாதத்தில் திவச நாள் முடிந்த பின்னரே இல்லத்து மங்கள நிகழ்ச்சிகளை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பன்றும் பித்ருக்களை வணங்கிச் சூரியனை வழிபடலாம்.ஆண்டொன்றுக்குத் தொண்ணூற்றாறு தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்ற கணக்கொன்று உண்டு.மகா புண்ணியத்தை அளிக்கக்கூடியது தாய், தந்தையருக்கு இடைவிடாமல் செய்யும் திவசமே.
தவிர்க்க வேண்டியவை
கர்த்தா என்ற தர்ப்பணம் செய்பவர் தனது பெயரை இந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு எந்தப் பூஜையிலும் சங்கல்பம் செய்துகொள்ளக் கூடாது. 

வளமெல்லாம் தரும் தேவி பாகவதம்

எல்லாச் செயல்களுக்கும் பலன் எதிர்பார்ப்பது மனித குணம். இறைவனிடம் பக்தி கொள்வதுகூடக் காரண, காரியத்துடனேயே செய்யப்படுகிறது.
பலர் வேண்டுதல் நிமித்தமாகவே கோயில்களுக்குச் செல்கிறார்கள். அனைத்து வளங்களையும் பெறவே மனிதர்கள் ஆசைப்படுகிறார்கள். இதனை நிறைவேற்றித் தருபவள் சக்தி. பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூவரும் தியானித்து இருப்பதும் அந்த தேவியையே என்று தேவி பாகவதத்தில் விஷ்ணு குறிப்பிடுகிறார்.
தேவி பாகவதத்தைப் படிப்பதால், கிடைக்கும் நற்பலன்கள் அதிலேயே கூறப்பட்டுள்ளன. அதன்படி இதனை பாராயணம் செய்தால் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடையலாம். இப்புராணத்தைப் புத்தகமாகத் தானம் செய்தால், புத்திர பாக்கியம், தனம், கல்வி ஆகியன கிடைக்கும் என்பது ஐதீகம். தேவி பாகவதத்தை வைத்துப் பூஜித்தால், லஷ்மியும், சரஸ்வதியும் நீங்காத செல்வமாய் நிறைந்து இல்லத்தில் இருப்பார்கள். வேதாளம், பேய், பிசாசுகள் இல்லத்தை அண்டாது என்று தேவி பாகவதம் கூறுகிறது.
இதனை நவராத்திரியில் பாராயணம் செய்தால், வேண்டுதல் பன்மடங்கு பலிக்கும் என்றும், யார் பூஜித்தாலும் பேதமின்றி வரங்களை அள்ளிக் கொடுப்பவள் என்றும் தேவி பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவி பாகவதம் எழுவதற்கான காரணமே ஒரு சுவையான கதைதான். வியாச முனிவர் வழக்கம்போல் ஒரு நாள் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது இரண்டு ஊர்க்குருவிகள் ஆனந்தமாக விளையாடிக்கொண்டிருந்ததைக் கண்டார். குருவிகள்கூட ஆண், பெண்ணாய் இணைந்து இன்பமுற முடியுமா என்ற ஆச்சரியக் கேள்வி அவருள் எழுந்தது.
இதற்குள் பெண் குருவி கருவுற்றது. ஆண் குருவி கூடு கட்டித் தயாராக வைத்தது. குறித்த காலத்தில் பெண் குருவி முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தது. கீச், கீச் என்று குஞ்சுகள் சப்தமிட்டுத் தன் தாய், தந்தையருடன் கொஞ்சி விளையாடின. தந்தைக் குருவி, எங்கோ சென்று கஷ்டப்பட்டு உணவை எடுத்து வந்து குஞ்சுகளுக்கு அன்புடன் ஊட்டியது.
இதனைக் கண்ட வியாசருக்கு ஆச்சரியம். இந்தக் குஞ்சுகள் பெரியவர்களாகி இக்குருவிகளைக் காப்பது வழக்கத்தில் இல்லை. பெரிய குருவிகள் இறந்தால், பிள்ளை என்ற முறையில் தர்ப்பணம் முதலானவற்றைச் செய்யப் போவதுமில்லை. ஆனால் இருந்தும் இந்தப் பெற்றோர் குருவிகள், எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் அன்பு பாராட்டும் காரணம் என்ன என ஆராயத் தொடங்கினார் வியாசர்.
அனைத்து உயிரினங்களும் `புத்` என்ற நரகத்தில் வீழாமல் இருக்க புத்திரன் தேவை என்பதை ஆய்வின் பலனாகக் கண்டார் வியாசர். தவசீலரான அவருக்கும் புத்திரன் வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. உத்தமமான ஞானவானாக அப்புத்திரன் இருக்க வேண்டும் என அவர் விரும்பினார். மேரு மலைக்குச் சென்று தவமியற்றி இப்பேறு பெற விரும்பினார்.
எந்தத் தெய்வத்தைக் குறித்து தியானித்தால் பலன்முழுமையாகக் கிடைக்கும் என்று வியாசர் யோசித்தார். அங்கு வந்த நாரதர், விஷ்ணு தியானிப்பதும் அந்த பராசக்தியைதான் என்று கூறி, பராசக்தியைத் தியானிக்கும்படி கூறினார். வியாசரும் அவ்வாறே தியானித்தார். தேவியைக் குறித்து தியானம் செய்ததால் இவருக்கு பிள்ளையாய் பிறந்தவர் கிளி முகம் கொண்ட அதி அற்புதமான ஞானி சுகர்.
எல்லாம் துறந்த முனிவருக்கே புத்திர பாக்கியம் கிடைக்கச் செய்தது தேவி உபாசனை என்றால், மனித குலம் முழுமைக்கும் ஆனந்தத்தை அளிப்பது தேவி பாகவத பாராயணம் என்று பாராயண பலனைச் சொல்லும் சுலோகத்தில் விளக்கப் பட்டுள்ளது.
இப்படிப் பாராயணம் செய்வதற்கான சிறந்த நாட்களாக நவராத்திரித் திருநாட்கள் கருதப்படுகின்றன.

Saturday, May 24, 2014

பிதுர் தர்ப்பணத்தின் முக்கியத்துவம்

தோஷ நிவர்த்தி தலங்ள்

சூரியன் வணங்கி வழிபட்ட, சென்னை-செங்குன்றத்திற்கு அருகில் உள்ள ஞாயிறு கோயிலில் அருளும் புஷ்பரதேஸ்வரரை தரிசித்தால் சூரியகிரக தோஷங்கள் நீங்கும்.

திருவையாறு-கும்பகோணம் பாதையில் திருவையாற்றிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது, திங்களூர். இத்தல சந்திரபகவானை வணங்க, சந்திரகிரக தோஷங்கள் விலகும்.

மதுரையிலிருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ள குருவித்துறையில் குரு பகவானை வழிபட, தோஷங்கள் நீங்கி குதூகல வாழ்வு கிட்டும்.

கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள பட்டீஸ்வரத்தில் அருளும் த்ரிபங்க நிலையில் உள்ள துர்க்காம்பிகையை உளமாற வழிபட்டால் ராகு தோஷங்கள் நீங்கிவிடும்.

64 திருவிளையாடல்களை நிகழ்த்திக் காட்டிய மதுரை சொக்கநாதப் பெருமாளை தரிசித்தால் புத கிரக தோஷங்கள் விலகும்.

சென்னை-மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலயத்திலுள்ள சரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபட பில்லி, சூன்யங்கள்  தவிடுபொடியாகும்.

ஸ்ரீரங்கத்தில் அருளாட்சி புரியும் ரங்கநாதப் பெருமானை வணங்க சுக்கிர கிரக தோஷங்கள் நீங்கி  மகிழ்ச்சியான வாழ்வு கிட்டும்.

காஞ்சிபுரத்திலுள்ள சித்ரகுப்த சுவாமியை வேண்ட, கேது கிரக தோஷங்கள் மறையும்.

திருவாரூருக்கு அருகேயுள்ள திருக்கொள்ளிக்காட்டில் அருளும் சனிபகவானை வணங்க, சனி தோஷங்கள் மறைந்தோடும்.

சென்னை-அரக்கோணத்திற்கு அருகே பள்ளூரில் அருளும் வாராஹியை வணங்க, செவ்வாய் தோஷங்கள் தொலைந்தோடும்.

சென்னை - கும்மிடிப்பூண்டி சாலையில் செங்குன்றத்தை அடுத்துள்ள பஞ்சேஷ்டியில் ஆனந்தவல்லியம்மன் பாதத்தில் உள்ள சப்தசதி மகாயந்திரத்தை அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்துள்ளார். இந்த யந்திரத்தில் எலுமிச்சம் கனிகள் வைத்து வணங்க, திருமண தோஷங்கள் நீங்குகின்றன.

கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள ஐயாவாடி பிரத்யங்கிரா தேவிக்கு அமாவாசை தினத்தன்று செய்யப்படும் மிளகாய் வத்தல் யாகத்தில் கலந்து கொண்டால் மாந்தி, குளிகன் போன்றவர்களால் ஏற்பட்ட தோஷங்கள் அகலும்.

சென்னை-தாம்பரம் அருகே படப்பை-காஞ்சிபுரம் சாலையில் உள்ள கண்டிகை கிராமத்தில் மாமேரு, மாதங்கி, வாராஹி, திதிநித்யா தேவிகள் யந்திர உருவில் அருள்கின்றனர். தொடர்ந்து  9 வாரங்கள் இவர்களை தரிசிக்க சகல தோஷங்களும் நீங்குகின்றன.

கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகையும் முல்லை வனநாதரும் கர்ப்பத் தடை  தோஷங்களை நிவர்த்தி செய்கிறார்கள்.

சென்னை, ரத்னமங்கலத்தில் உள்ள லட்சுமி குபேரனை வெள்ளிக்கிழமைகளில் வணங்க, தரித்திர தோஷம் நீங்கும்.

திண்டிவனத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள பெரமண்டூர் அணியாத அழகர் கோயிலில் அருளும் தர்மதேவிக்கு 9 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விளக்கேற்ற, தோஷங்கள் தொலைகின்றன.

ராமநாதபுரம், தேவிபட்டணத்தில் ராமரால் நவபாஷாணத்தால் செய்யப்பட்டு கடல்நடுவே அருளும் நவகிரகங்கள் சகல விதமான தோஷங்களையும் தகர்த்தெறிவார்கள்.

காஞ்சிபுரம் திருப்புட்குழி விஜயராகவப் பெருமாளையும் திருவள்ளூர் வைத்ய வீரராகவப் பெருமாளையும் தரிசிக்க மறைந்த பித்ரு தோஷங்கள் தொலையும்.

ஈரோடு திருப்பாண்டிக் கொடுமுடியில் உள்ள கொடுமுடிநாதர் தலம் மும்மூர்த்தித் தலமாகவும் சகல தோஷ பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. இங்கு வன்னி மரத்தின் கீழ் அமர்ந்த நான்முகனுக்கு மூன்று முகங்கள் மட்டுமே உண்டு. வன்னிமரமே நான்காவது முகமாகக் கருதப்படுகிறது.

திருமங்கலக்குடியில் அருளும் மங்களாம்பிகை மாங்கல்ய தோஷங்களை நீக்குவதில் நிகரற்றவளாக பக்தர்களால் போற்றப்படுகிறாள்.  

விபத்தில் இறந்து விட்டான். முதலாம் ஆண்டு திதியை ஒரு வருடம் நிறைவு பெறுவதற்குள் செய்ய வேண்டுமென்று ஜோதிடர் கூறுகிறார். எப்போது கொடுப்பது? early death pariharam
எந்த தமிழ் மாதத்தில் எந்த திதியன்று இறந்தார் என்று பார்த்து, அன்றே முதல் வருடத்திய திதியை கொடுக்க வேண்டும். இப்படி 36 வயதில் ஒருவர் இறப்பதை அகால மரணம் என்பார்கள். இது குடும்பத்தில் அனைவரையும் பாதிக்கலாம் என்பதால்  கொஞ்சம் பெரிய பரிகாரமாக செய்து விடுங்கள். அதுதான் நல்லது. உங்கள் மகனின் உயிர் பிரிந்த திதியன்று அதாவது ஒவ்வொரு தமிழ் மாதமும் அந்தக் குறிப்பிட்ட திதியன்று  எள்ளு சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் மூன்றையும் சிவாலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு நிறைய கொடுங்கள். அப்படி விநியோகம் செய்யும்போது ‘ஸர்வேசா துர்ம்ருதி தோஷம் நிவாரய நிவாரய’ என்று சொல்லியபடியே கொடுங்கள்.

நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் ஆலய தலவிருட்சம், மாமரம். இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளுடன் பழங்கள் தரும் அதிசய  மரம்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் ஆலயத்தின் பிரதான மண்டபத்தில் நந்தியம் பெருமான் கொலுவிருக்கிறார். இவர் ‘கர்ஜிப்பாரா’னால் அப்போது கலியுகம் முடியும் என்பது நம்பிக்கை.

கும்பகோணம், தாராசுரம் ஐராவதேஸ்வரர் ஆலயத்தில் பலிபீடமும் ஏழு படிகளும் சங்கீதமயமானவை. ஆமாம், அவற்றைத் தட்டினால் இனிய ஒலி  எழுகிறது; ஏழு ஸ்வரங்களையும் கேட்க முடிகிறது.

திருவாரூர், செதிலபதியில் விநாயகர் மனித முகத்துடன் காட்சியளிக்கிறார். அதே கோயிலில், தட்சிணாமூர்த்தியும், சனகாதி முனிவர் நால்வர் மற்றும் இரண்டு அணில்களோடு காட்சி தருகிறார்.

ஈரோடு, கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்திலுள்ள வன்னிமரம், பிரம்மனின் அடையாளமாகப் போற்றப்படுகிறது. இந்த மரத்தில் முள், பூ, காய்  போன்றவை இல்லை.

ஈரோடு- சத்யமங்கலம், புஞ்சை புளியம்பட்டி சௌடேஸ்வரி அன்னையின் திருவிழாவின் மூன்றாம் நாளன்று அன்னையே சப்பரத்தில் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்குகிறாள்.

திருக்கண்ணபுரம் கருவறை விமானத்தில் முனிவர்கள் திருமாலை நோக்கித் தவம் இருப்பதாக ஐதீகம். எனவே அந்த உத்பலாவதக விமானத்தை  யாரும் தரிசிக்க முடியாதபடி மதிற்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜப் பெருமான் கோயிலில் நான்கு வாயில்களும் தனித்தனி சிறப்பு பெற்றவை. பெருமானைத் தரிசிக்க சம்பந்தர் தென்வாயில் வழியா கவும் நாவுக்கரசர் கிழக்கு வாயில் வழியாகவும் சுந்தரர் வடக்கு வாயில் வழியாகவும் மாணிக்கவாசகர் மேற்கு வாயில் வழியாகவும் நுழைந்திருக்கிறார் கள்.

கும்பகோணம், அழகாபுத்தூரில் இந்திர மயிலின் மீது அமர்ந்து கல்யாணசுந்தர ஷண்முகசுப்ரமண்யர் தன் தேவியருடன் காட்சி தருகிறார். இவரது  திருவாசி ஓம் வடிவிலிருக்கிறது. திருக்கரங்கள்  சங்கு-சக்கரம் ஏந்தியுள்ளன.

காரைக்குடி, பாதரகுடியில் 10 அடி உயரத்தில் நின்ற நிலையில் சந்தோஷிமாதாவை தரிசிக்கலாம். ஒவ்வொரு வெள்ளியன்றும் முந்திரி பாயசம்   நிவேதிக்கப்படுகிறது.

தேனி, கம்பம், சாமாண்டிபுரத்தில் அம்பிகை புற்று வடிவில் வயல் நடுவில் அருள்கிறாள். வழக்கமாக வடக்கு நோக்கும் அம்பிகை இங்கே தெற்கு நோக்கியிருக்கிறாள். இங்கு வளையலே பிரசாதம்.

திருவாரூர் திருமஞ்சன வீதியில் சிம்மத்தின் மேல் அமர்ந்து தலையில் சந்திர கலை தரித்து மும்மூர்த்தி அம்சத்துடன் ஜெயதுர்க்காவை தரிசிக்கலாம்.  ராமபிரான் வழிபட்ட துர்க்கை இவள்.

திருவண்ணாமலையில் சம்பந்தாசுரனை அழித்து, அவன் ரத்தத்தைப் பூசிக்கொண்ட  செந்தூர விநாயகருக்கு, வருடத்தில் நான்கு முறை செந்தூரம்  சாத்தப்படுகிறது.

சென்னை-திருவொற்றியூர் தியாகராஜர் ஆலயம் இரட்டைச் சிறப்புகள் கொண்டது. இங்கே, ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர் என இரு சிவ சந்நதிகள்; வடிவுடை, வட்டப்பாறை என இரு அம்பிகை சந்நதிகள்; அத்தி, மகிழம் என இரு தல விருட்சங்கள்; பிரம்ம, அத்தி என இரு தீர்த்தங்கள்; காரணம், காமீ கம் என இரு ஆகம பூஜைகள்! பைரவர் நாய் இல்லாமலும் துர்க்கை மகிஷன் இல்லாமலும் தரிசனம் தருவது மேலும் வித்தியாசமான அமைப்பு.

அம்பிகை உபாசகரான உப்புராயர் உருவாக்கிய உப்பு லிங்கத்தை இப்போதும் ராமேஸ்வரம் ராமநாதர் சந்நதிக்கு பின்புறம் தரிசிக்கலாம். உப்பின்  சொரசொரப்பை அந்த லிங்கம் காட்டுகிறது.

நாகப்பட்டினம், திருநல்லாடையில் அக்னீஸ்வரர், நெருப்பு வடிவமாக உள்ளதால் அவரின் வெப்பத்தைத் தணிக்க, கருவறையின் தாழ்வான பகுதியில்  எப்போதும் தண்ணீர் ஊற்றப்படுகிறது.

மான், மழு ஏந்தி யோகபட்டை, சின்முத்திரையுடனான தட்சிணாமூர்த்தி வாணியம்பாடி, அதிதீஸ்வரர் கோயிலில் உள்ளார்.

சிவகங்கை, கீழப்பூங்குடி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் ஆடத் தயாரான நிலையில், அள்ளிமுடிந்த ஜடாமுடியுடன் நடராஜரை தரிசிக்கலாம்.

தஞ்சாவூர், விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் ஆலயத்தில் சனிபகவான் தெற்கு நோக்கி, மந்தா-ஜேஷ்டா  சமேதராக திருமணக் கோலத்தில்  காட்சி தரு கிறார்.

தஞ்சாவூர்-அதிராம்பட்டினம் அபயவரதீஸ்வரர் ஆலய சுந்தரநாயகி தெற்கே கடலைப் பார்த்தபடி அருள்வதால் கடல் பார்த்த நாயகி என்றழைக்கப்  படுகிறாள்.
- See more at: http://m.dinakaran.com/aDetail.asp?Nid=899#sthash.OnuNd2hn.dpuf

- See more at: http://m.dinakaran.com/aDetail.asp?Nid=899#sthash.OnuNd2hn.dpu
ஆலயங்களில் வித்தியாசத் தகவல்கள்
ஆலயங்களில் வித்தியாசத் தகவல்கள்