Showing posts with label advice. Show all posts
Showing posts with label advice. Show all posts

Friday, July 10, 2015

கர்ப்ப கால உறவு பற்றி சில ஆலோசனை


கர்ப்ப காலத்தின் போது அனைத்து தம்பதிகளுக்கும் தோன்றும் கேள்வி கர்ப்பத்தின் போது உறவு வைத்து கொள்ளலாமா ,வைத்து கொண்டால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா என பல சந்தேகங்கள் தோன்றுகிறது. கர்ப்ப காலத்தின் போது பெரும்பாலான தம்பதியர் மருத்துவரிடம் தயங்கி தயங்கி கேட்கும் கேள்விகளில் ஒன்று உண்டு. அது உறவு கொள்வது நல்லதா என்பதுதான். பொதுவாகவே கர்ப்ப கால உறவு என்பது பல தம்பதிகளும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.

கர்ப்பகால உறவு நல்லது

கர்ப்பகாலத்தின் போது தம்பதியர் உறவில் ஈடுபடுவதால் ஒரு சில நன்மைகளும் இருக்கிறதாம். உறவினால் தாயின் உடலில் ஹார்மோன் சுரப்பது அதிகரித்து அதனால் சேய்க்கு நன்மை ஏற்படுகிறதாம். அதனால் கர்ப்பகாலத்தில் தாய்க்கு எழும் எதிர்மறை உணர்வுகள் படிப்படியாக குறைகிறதாம். உறவின் மூலம் ஆணிடம் இருந்து வெளியாகும் prostaglandin ஹார்மோன் பெண் உறுப்பினை மென்மையாக்குகிறதாம். 

இதனால் எளிதில் பிரசவமாகிறது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். பிரசவத்திற்கு சில வாரங்களுக்கு அல்லது சில நாட்களுக்கு முன்பு தம்பதியர் பாதுகாப்பாக உறவு கொள்வதனால் பெண்ணுக்கு ஏற்படும் ஆர்கஸம் பிரசவத்தை எளிதாக்குகிறது என்றும் தகவல் தெரிவித்துள்ளனர்.

உறுதித்தன்மை குறைவு

ஒரு பெண் தான் தாய்மை அடைந்திருப்பதை உறுதி செய்த உடன் மருத்துவர் கூறும் முதல் அறிவுரை முதல் மூன்று மாதங்களுக்கு எதுவும் கூடாது. ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதுதான். ஏனெனில் முதல் மூன்று மாதம்தான் கர்ப்பத்தின் முக்கிய காலக்கட்டமாகும். இந்த சமயத்தில் கர்ப்பத்தின் உறுதித்தன்மை குறைவு. ஆகையால்தான் முதல் மூன்று மாத காலத்திற்கு உடலுறவு வேண்டாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள்.

எச்சரிக்கையான உடலுறவு அவசியம்

முதல் மூன்று மாதத்திற்குப் பின் பெண் சம்மதித்தால் உறவில் ஈடுபடலாம் அதில் தவறு ஏதும் இல்லை என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு உறவில் ஈடுபடுவதில் ஆர்வம் குறைந்தே காணப்படும். ஆனால் மிகவும் எச்சரிக்கையாக உடலுறவு கொள்ள வேண்டும். முன்பு உறவு கொண்ட மாதிரி முரட்டுத்தனமாக இருக்கக் கூடாது. 

பெண்களின் வசதிகளுக்கேற்ப மிகவும் வசதியான நிலையில் இருக்கும் போது உடலுறவு கொள்ளல் வேண்டும். ஆணின் உடல் எடை எந்த வகையிலும் பெண்ணை அழுத்தக் கூடாது ஏனெனில், அந்த அழுத்தம் வயிற்றில் இருக்கும் சிசுவை பாதிக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதிக உணர்ச்சிவயப்படுதலோ, அதிக நேரம் உடலுறவு கொள்வதோ பெண்ணை சீக்கிரம் களைப்படையச் செய்து விடும். அதனையும் கவனத்தில் கொள்வது மிக அவசியம்

பாதுகாப்பு அவசியம்

சில பெண்கள் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ள அச்சப்படுவார்கள். பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் உடல் மற்றும் மன அளவில் தயாராக இருக்கும் வரை உறவில் ஈடுபடலாம். உறவிற்கு முன்பும், பின்பும் இருவருமே உறுப்புகளை சரியாக சுத்தம் செய்ய வேண்டும். 

கூடுமானவரை பாதுகாப்புடன் உறவு கொள்வது பிறக்கப் போகும் குழந்தையின் உடல் நலத்தை பாதுகாக்க வழி செய்யும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், உறவின் போது பெண்ணின் கர்ப்ப வாயில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தற்போது மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். 

மருத்துவரின் ஆலோசனை

8 அல்லது 9வது மாதங்களில் உடலுறவுக் கொள்ளும் போதுதான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கர்ப்பத்தின் 8 அல்லது 9வது மாதத்தில் உடலுறவுக் கொள்வது உடலுறுப்புக்களை தளர்த்தியாக வைக்க உதவுகிறது.

எனினும், சிலருக்கு கர்ப்பப் பை பலவீனமாக இருப்பதாகவும், சிலர் படுத்த நிலையிலேயே கர்ப்ப காலத்தைக் கழிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தால் அவர்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பின்னரே உறவில் ஈடுபடவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும் http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=1058&Cat=501

30 வயதுக்கு மேல் குழந்தை பெறுவோர் கவனத்துக்கு...

குறைகள் இல்லாத குழந்தைகளைப் பெற்றெடுப்பதே எல்லா பெற்றோரின் விருப்பமும். ஆனாலும், பிறப்பதற்கு முன்பே குழந்தைக்கு ஏதேனும் குறைகள் இருக்குமா என்பதைத் தெரிந்து கொள்ள எளிமையான வழிகள் இருந்தாலும் அவற்றை அலட்சியப்படுத்துகிறவர்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என பாரபட்சமே இருப்பதில்லை. ‘30 வயதுக்கு மேல் கருத்தரிப்பவர்களுக்கும், முதல் முறை கருத்தரிப்பவர்களுக்கும் இது பற்றிய விழிப்புணர்வு மிக மிக அவசியம்’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் கவிதா கவுதம்.

‘‘30 வயதுக்கு மேல் குழந்தை பெறுகிற பெண்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்து வருகிறது. தாமதமான குழந்தைப் பேறு தருகிற சிக்கல்கள் ஒரு பக்கம் என்றால், குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது அதைவிட சிக்கல். முதல் முறை கர்ப்பம் தரிக்கிறவர்களும், 30 வயதுக்கு மேல் கர்ப்பமாகிறவர்களும் கர்ப்பத்தின் 3வது மாதத்தில் என்.டி. ஸ்கேன் (Nuchal Translucency scan) செய்வதன் மூலம் கருவிலுள்ள குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் உள்ளிட்ட பிறவிக் கோளாறுகள்  உள்ளனவா என்பதைக் கண்டுபிடிக்கலாம். 

குணப்படுத்தவே முடியாத பிரச்னைகள் என்றால் முன்கூட்டியே தெரிந்து கொண்டு அந்தக் கருவைக் கலைத்து விடுவார்கள் மருத்துவர்கள். மாதங்கள் கடந்துவிட்டால், கருவைக் கலைப்பதும் சிரமம். குறையுள்ள குழந்தையைப் பெற்றெடுத்து வளர்ப்பதும் பிரச்னை. இந்த என்.டி. ஸ்கேனை யார் வேண்டுமா னாலும் செய்துவிட முடியாது. அதில் திறமை உள்ள சிறப்பு மருத்துவர்கள் மட்டுமே செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து மீண்டும் 5வது மாதம் ‘டார்கெட்’ என்கிற இன்னொரு சோதனையையும் கர்ப்பிணிகள் மேற்கொள்ள வேண்டும். 

5வது மாதத்துக்குள் குழந்தையின் எல்லா உறுப்புகளும் உருவாகி முடிந்திருக்கும். குறிப்பாக சிறுநீர் பை. இந்த டார்கெட் சோதனையின் மூலம் அதை உறுதிப்படுத்திக் கொள்வதுடன், அனைத்து உறுப்புகளும் சரியாக இயங்குகின்றனவா என்பதையும் அறிந்து கொள்ளலாம். சில குழந்தைகளுக்குக் கால்கள் நேராக இல்லாமல் வளைந்திருக்கலாம். ஒரு கையே இல்லாமலிருக்கலாம். இதயத்தில் ஓட்டை இருக்கலாம். குடலில் ஏதேனும் பாதிப்பு இருக்கலாம். இந்தப் பிரச்னைகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டால், சிலவற்றுக்கு குழந்தை பிறந்த உடனேயே அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழு. 

உதாரணத்துக்கு பாத வளைவுப் பிரச்னையான சிஜிணிக்ஷிக்கு குழந்தை பிறந்ததும் ஆபரேஷன் செய்தோ, மாவுக்கட்டு போட்டோ சரி செய்யப்படும். இந்தப் பிரச்னைக்காக கருவைக் கலைக்க வேண்டியிருக்காது. இதயத்தில் சின்ன துளை இருந்தால், அதையும் குழந்தை பிறந்த ஒரு வருடத்துக்குள் ஆபரேஷன் மூலம் அடைக்க முடியும். முதுகுத்தண்டு வளைந்தோ, சரியாக உருவாகாமலோ இருப்பது, மெனிங்கோசீல் எனப்படுகிற முதுகுத்தண்டு பிரச்னை, கிட்னி இல்லாத நிலை, நுரையீரல் சரியாக உருவாகாதது, வயிறு ஊதி இருத்தல், மூளையில் நீர் கோர்த்திருப்பது போன்ற பிரச்னைகள் இருந்தால் அந்தக் குழந்தையைப் பிழைக்க வைப்பது சிரமம். அந்த நிலையில் கருவைக் கலைப்பதுதான் தீர்வு...’’


http://tamil.boldsky.com/pregnancy-parenting/pre-natal/2013/20-ways-make-your-unborn-baby-healthy-003282.html

http://tamil.boldsky.com/health/wellness/2015/it-is-possible-women-pee-like-men-008120.html#slide43730
http://tamil.boldsky.com/health/wellness/2015/seven-scientific-reasons-why-sleeping-naked-is-really-good-007799.html#slide41296


Saturday, April 4, 2015

இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்

* இடது கையால் ஆசனம் போட்டால், ஆயுள் குறைவும்; எண்ணெய் தேய்த்தால், புத்திர நாசமும் ஏற்படும்; சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்; படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.
* ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியோருக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும்; இது, மிகவும் புண்ணியம்.
* சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.
* அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.
* பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவை எதிரில் செல்ல நேரும் போது, வலது புறம் சுற்றிச் செல்ல வேண்டும்.
* குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ளக் கூடாது. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடவோ, துணியில்லாமல் குளிக்கவோ, சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கவோ கூடாது.
* கன்றுக்குட்டியின் கயிறை தாண்டவோ, மழை பெய்யும்போது ஓடவோ, தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கவோ கூடாது.
* நெருப்பை வாயால் ஊதக் கூடாது.
* கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.
* எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்துவிட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கி குளித்தால் தோஷம் நீங்கும்.
* திருமணம் ஆகாமல் ஒரு பெண்ணுடன் வாழ்பவனை, சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.
* சாப்பிடும்போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின், நீர் அருந்த வேண்டும்.
* சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.
* கோவணமின்றி, வீட்டின் நிலைப் படியை தாண்டக் கூடாது.
* இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும்போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி, அதன் பின்பே சாப்பிட வேண்டும்.
* சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.
* சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.
* மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் வெற்றிலை மடித்துத் தரக் கூடாது.
* குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரியை பார்க்கச் செல்லும் போதும், ஆலயம் செல்லும்போதும் வெறுங்கையுடன் செல்லக் கூடாது.
* தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டுமே சொறிய வேண்டும்; இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.
* இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி, தலையில் தேய்க்க வேண்டும்.
* தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.
* வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.
* மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.
* பேசும்போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.
* ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.
* வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது; நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.
* ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.
* தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு, காலால் தேய்க்கக் கூடாது; பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.
* பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.
* பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவியை கூடுதல் இவை மூன்றுமே பிராய சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.
* அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையில் உள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக்காட்டி பேசக்கூடாது.
* ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களை பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.
* பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.
* பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.
* பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.
* பசு மாட்டை, கோமாதாவாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.
* தூங்குபவரை திடீரென்று எழுப்பவோ, தூங்குபவரை உற்றுப் பார்க்கவோ கூடாது.
* பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.
* தலை, முகம் இவற்றில், முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.
* அண்ணன் தம்பி; அக்காள் தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் மனைவி; குழந்தை - தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.
* வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.
* நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.
— என, சொல்லி முடித்தார் குப்பண்ணா.
இவற்றில் சில அறிவுரைகளை இக்காலத்தில் பின்பற்ற முடியுமா என்பது சந்தேகம் தான். சில, மூட நம்பிக்கையாகவும் தெரிகிறது. வாசகர்கள் தெரிந்து கொள்வதற்காக எழுதி விட்டேன் இனி, அவரவர் விருப்பம்!                                              http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24546&ncat=2