2013-12-11 இயற்கை
எழில் கொஞ்சும் பசுமையான சூழ்நிலையில், நடுநாயகமாக அமைந்துள்ள சிறிய
குன்றின் மீது பத்மாவதி சமேத வெங்கடாஜலபதி பெரும £ளுக்கு அழகிய
திருக்கோயில் அமைந்துள்ளது. அருகேயே கல்யாண லட்சுமி நாராயணப் பெருமாளும்
அருள்பாலிக்கிறார். தென் திருப்பதி என்று சொல்லும் அளவிற்கு இக்கோயில்
பக்தர்களிடையே பிரபலமாகி வருகிறது. சுமார் 250 ஆண்டுகள் பழமை மிக்கதாகக்
கருதப்படும் இந்த ஆயத்திலும் திருப்பதி போன்றே வேங்கடவன் நின்ற கோலத்தில்,
சகலவித அலங்காரங்களுடன் காட்சி தருகிறார்.
இந்த சிறிய குன்றின்மீது சுமார் 200 மீட்டர் நடந்து சென்றால் பன்னிரண்டு அடி உயரமுள்ள விஸ்வரூப வீர அஞ்சலி ஹஸ்த ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். சகல தோஷங்களையும் நீக்கும் சக்தி இந்த அனுமனுக்கு இருப்பதால் இங்கு நிறைய பக்தர்கள் அனுதினமும் வருகிறார்கள். இந்த அனுமனுக்கு வடைமாலை சார்த்தி வழிபட ராகுகேது தோஷங்கள் விலகி ஓடும் என்பது நம்பிக்கை. ஆஞ்சநேயருக்கு எதிரே கம்பீரமாகக் காணப்படும் ஆலயத்தில் கல்யாண லட்சுமி நாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கி தரிசனம் அளிக்கிறார். இம்மலைக்கு வரும் பக்தர்களை நோக்கி வணங்கி வரவேற்கும் தோரணையோடு பக்தியையும் வெங்கடேசப் பெருமாளின் அருளையும் பரஸ்பரம் பரிமாறி வைக்கும் அரும் சேவையை ஆற்றி வருகிறார். காரமடையில் பெருமாள் லிங்கவடிவில் சுயம்புவாக வெளிப்பட்டது போல, இத்தலத்திலும் இறைவன் சுயம்புவாகத் தானே தோன்றி, தனது வலதுபுறத்தில் தாயார் சேவை சாதிக்க, திருமண் கல்யாண லட்சுமி நாராயணராக அருட்காட்சி தருகின்றார். திருமண்ணால் (திருமண் என்றால் ந £மக்கட்டி) இங்கே எழுந்தருளியிருக்கும் இறைவன், இறைவியைத் தினசரி அலங்கரித்து விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன. முதல்நாளில் சுவ £மியை அலங்கரித்த திருமண்ணையே பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குகிறார்கள். அக்காலத்தே யானைகள் இம்மலைப் பகுதிகளிலும் காட்டுப் பகுதிகளிலும் இருந்து வந்ததன் பொருட்டு ஆனைக்கரட்டுப் பெருமாள் என்றும் இவ்விறைவன் அழைக்கப்படுகிறார். ஒரு சில சமயங்களில், பிரதோஷ காலத்தில் இவ்வாலய இறைவன் உக்கிரமாகி, நரசிம்மராக மாறுவதாகச் சொல்லப்படுகிறது. திருமண்ணால் அலங்கரிக்கப்பட்ட திரும £லின் முகத்தில் சீரிய வெடிப்புகள் ஏற்படும். அப்போது அவர் உக்கிர நரசிம்ம மூர்த்தியாக மாறுகிறார் என்கிறார்கள். தனது வலது புறத்தில் அன்னை பத்மாவதி தாயாரோடு இறைவன் திருமணக் கோலத்தில் காட்சி தருவதால், இங்கே திருமணம் ஆகாதவர்கள் வந்து தங்களது ஜாதக நகலை பெருமாளிடம் வைத்து பிரார்தித்துச் செல்கிறார்கள். அப்படி ஜாதகத்தை வைத்து வேண்டிக் கொண்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்குத் தடைகள் அகன்று அவர்களது திருமணம் இனிதே நடந்தேறி இருப்பதற்கு இங்கே கருவறை அருகே குவிந்து கிடக்கும் கல்யாணப் பத்திரிகைகளே சான்று. இவ்வாலயத்தின் பலி பீடம் அற்புதமான சக்திகளை கொண்டது என்று பக்தர்கள் சொல்கிறார்கள். பேய், பிசாசு, பில்லி சூன்யம் இவற்றை அகற்றும் அற்புத சக்தியை இப்பலிபீடம் கொண்டுள்ளதாம். நோய்வாய்ப்பட்டு துன்புறுபவர்கள் இவ்வாலயத்திற்கு வந்து வழிபாடு செய்து தங்களது இன்னல்களை தீர்த்துக் கொள்கின்றனர். பெருமாளின் கருணையைப் பெறுவதற்காக சுத்தமான கம்பு, அரிசியினை விரதம் இருந்து அரைத்து பனைவெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து, சிறிது ஏலப்பொடியும் கலந்து, வெள்ளைத் துணியில் முடிந்து இவ்வாலயத்தில் வேண்டுதலாக கொடுக்கிறார்கள். இந்த வழக்கம் நூறாண்டு காலமாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தப் பெருமாளுக்குப் பிடித்தமான நைவேத்தியம் இதுவே. இம்மலை அருகே கிடைத்த ஒரு பழங்காலக் கல்வெட்டில், ‘பொரிமாவும் பெருமாளும்.....’ என்ற வாசகம் காணப்படுகிறது. இம்மலைக்கு வரும் பக்தர்களுக்கு அர்ச்சகர் கொடுக்கும் குங்குமம், துளசித் தீர்த்தம் தவிர, இம்மலையின் மண்ணையே பிரசாதமாகவும் கொ டுப்பதும் உண்டு. இந்தப் பிரசாத மண் பலவிதமான நோய்களையும் நீக்குவதாகக் கூறப்படுகிறது. கால்நடைகளின் நோய் தீர்க்கவும் இந்தமண் பிரசாதத்தை வாங்கிப் போகிறார்கள். திருப்பதி ஏழுமலையானுக்கு நேர்த்திக் கடன் செய்வதாக வேண்டிக் கொண்டவர்களால் திருப்பதி செல்ல முடியவில்லையெனில் அதற்குப் பதிலாக இங்கு வந்து தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இத்தல பெருமாளை ஆதிசேஷன் பூஜித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் பாம்பு உருவில் வந்து தேவர்கள் இவரை தரிசித்ததாக வரலாறு உள்ளது. ஆலயத்தில் வடமேற்குப் பகுதியில் மிகப் பெரிய பாம்புப் புற்று ஒன்று இன்றும் காணப்படுகிறது. கருடசேவை முக்கியத் திருவிழாவாக இங்கே கொண்டாடப்படுகிறது. உற்சவமூர்த்தி கருட வாகனத்தில் தேவியரோடு உலா வரும் காட்சி அற்புதமானது. புரட்டாசி மாதத்தில் இவ்விழா நடத்தப்படுகிறது. அம்மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையன்று சமாராதனை என அழைக்கப்படும் அன்னதானம் வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த ஆலயம் ஈரோட்டிலிருந்து 35 கி.மீ. தொலைவில், பவானிக்கு அருகே பருவாச்சி செல்லும் வழியில், ஒட்டபாளையம் என்ற இடத்தில் அமை ந்துள்ளது. பேருந்து, மினி பஸ் வசதிகள் உண்டு. |
Wednesday, October 29, 2014
பொரிமாவும், பெருமாளும்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment