'ஏர்ஹோஸ்டஸ்' எனும் விமான பணிப்பெண் வேலைவாய்ப்புக்கான, பயிற்சி வகுப்புகள் பற்றி கூறும், வசந்தி: நான், இந்தி யன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில், விமான பணிப்பெண்ணாக பணியாற்றி ஓய்வு பெற்றவள். 1973 முதல், 2003 வரை, 30 ஆண்டு பணியாற்றிய அனுபவம் உள்ளது. தினமும் புது புது மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு, இலவச விமான சுற்றுப்பயணம் என, ஜாலியான வேலையாக பலரால் கருதப்பட்டாலும், இவ்வேலைக்கும் பல திறமைகள் அவசியம். பதினேழு வயது நிரம்பிய, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, அடிப்படை ஆங்கில அறிவுள்ள எவரும், ஏர்ஹோஸ்டஸ் பயிற்சி பெறலாம். ஆண்களுக்கு, 171 செ.மீ., உயரமும், பெண்களுக்கு, 154 செ.மீ., உயரமும் அவசியம். தற்போது தமிழகத்தின் பல இடங்களிலும், இதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. முதல், மூன்று மாதங்களுக்கு பயிற்சி வகுப்புகளும், அதன் பின் நேரடி பயிற்சியும் வழங்கப்படும். இப்பயிற்சியில், விமான பணியாளருக்கு தேவையான அடிப்படை பயிற்சிகளான, தகவல் தொடர்பு, முதலுதவி, உபசரிப்புகள், ஆபத்துகளை எதிர்கொள்ளும் சூழல் உள்ளிட்ட, பல வகை அம்சங்கள் கற்றுத்தரப்படும். பயிற்சி கட்டணமாக, 50 ஆயிரம் முதல், 80 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஏர்ஹோஸ்டஸ்க்கான தேவை, உலக அளவில் அதிகம். மேலும், பயிற்சி முடிந்ததும், சம்பந்தப்பட்ட பயிற்சி மையமே, விமான நிறுவனங்கள் உதவிஉடன், 99 சதவீதம் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. திறமையுடன், நல்ல உடற்திறனும், எடுப்பான தோற்ற மும் இருப்பவர்கள், 30 ஆயிரம் முதல், 1 லட்சம் ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டலாம். இரவு, பகல் என, நேரம் காலமின்றி பணி செய்ய வேண்டிஇருப்பதால், திருமணமான சில பெண்களால் தொடர்ந்து பணியாற்ற முடிவதுஇல்லை. சில ஆண்டுகள் தொடர்ச்சியாக பணிபுரிந்தால், டிக்கெட் பரிசோதகர் முதல் 'சீனியர் பிளைட் அட்டெண்டன்ட்' என, பல வகையான பணி உயர்வும் கிடைக்கும். மற்ற துறைகளை போல் பணி ஓய்வு பெற்றாலும், இத்துறை சார்ந்த பல பணிகளில் தொடர்ந்து வேலை செய்யலாம்.
No comments:
Post a Comment