வாழை சாகுபடியில், புதிய நடவு முறையை கண்டு பிடித்து, நல்ல லாபம் ஈட்டி வரும் விவசாயி, எம்.பரமசிவம்: வாழையை, வழக்கமாக ஆழம் குறைவாக நடுவர். ஆனால் நான், ஜே.பி.சி., இயந்திரம் மூலம், 3 அடி ஆழம் தோண்டி, முக்கோண வடிவில் நடவு செய்தேன். வாழையின் வேர்கள் அதிக ஆழத்துடன் வளர்வதால், அதிக காற்றடித்தாலும் மரம் எளிதில் சாயாது என்பதால், பாதிப்பு மிக குறைவு. 'ரிப்பன்னிங் சாம்பர்' முறையில் வாழைக்காய்களை பழுக்க வைப்பதால், நல்ல சுவையுடன் நீண்ட நாட்கள் அழுகாமல் இருக்கும். எனவே, வாழை பழத்திற்கு நல்ல வரவேற்பு உள்ள, பிலிப்பைன்ஸ் மற்றும் அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். ஏக்கருக்கு, 1,200 வாழை மரம் நடவு செய்தால், முதல் அறுவடையின் போது, 3 லட்ச ரூபாயும், இரண்டாம் அறுவடையில், 2.5 லட்ச ரூபாய் வரை, லாபம் ஈட்டலாம். ஒரு வாழைத்தாருக்கு, 250 முதல், 300 காய்கள் காக்கும். தொடர்புக்கு: 93441 70103.
No comments:
Post a Comment