Saturday, October 12, 2013

இருசக்கர வாகனங்களை பராமரிக்கும் முறையை விளக்கும், 'மெக்கானிக்' ராஜேஷ்


சில பராமரிப்பு வழிமுறைகளை பின்பற்றினாலே, தேவையற்ற பதற்றம் மற்றும் செலவுகளை குறைக்கலாம். 'ஸ்டார்ட்டிங் டிரபிள்' பிரச்னை ஏற்பட்டால், 'ஸ்பார்க் பிளக்'கை, 16 அல்லது 19 சைஸ் ஸ்பேனரால் கழற்றி, அதன் அழுக்கை சிறிய கம்பியால் சுத்தம் செய்ய வேண்டும். பின், அடாப்டரோடு, பிளக்கை இணைத்து, இன்ஜின் மேல் வைத்து, வண்டியை ஸ்டார்ட் செய்து, 'கரன்ட்' வருகிறதா என, 'செக்' செய்ய வேண்டும். இல்லையெனில், பிளக்கை மாற்றினால், பிரச்னை தீர்ந்துவிடும். 5,000 கி.மீ.,க்கு ஒரு முறை, 'ஏர் பில்டர், பிளக், கியர் பாக்சை' மாற்றுவதுடன், வாரம் ஒரு முறை, டயர்களில், 'ஏர் செக்' செய்தால், பெட்ரோல் செலவீனம் குறைந்து, 'மைலேஜ்' அதிகரிக்கும்.
பெண்கள் பயன்படுத்தும், 'வித் அவுட் கியர்' வண்டிகளில், 'பிரேக்' பிரச்னை அடிக்கடி வரும். ஏனெ னில், பிரேக் ராடிற்கு பதில், 'கேபிள் கம்பி'களே இருப்பதால், ஆறு மாதத்திற்கு ஒரு முறை, தரமான கேபிள் கம்பிகளை மாற்றுவது அவசியம். காலையில், 'செல்ப் ஸ்டார்டரை' பயன்படுத்தாமல், 'கிக்கர்'களை உதைத்து, 'ஸ்டார்ட்' செய்ய வேண்டும்.
அதிகம் தேங்கியுள்ள மழைநீரில் வண்டி ஓட்டும் போது, 'திராட்டில்' செய்தபடி கொஞ்சம் வேகமாகவும், அதே நேரத்தில் பிரேக்கை லேசாக பிடித்தபடி ஓட்டினால், 'சைலன்ச'ருக்குள் நீர் புகாது. வண்டியில், 'இன்ஜின் ஆயில்' குறைந்தால், சைலன்சரில் அதிகமாக புகை வரும். தொடர்ந்து பல கி.மீ., ஓட்டினால், இன்ஜின், 'சீஸ்' ஆகி, அதிக செலவு வைக்கும். எனவே, 1,500 கி.மீ.,க்கு ஒரு முறை, இன்ஜின் ஆயிலை மாற்றலாம்.

1 comment: