Sunday, September 15, 2013

IAS Coaching a culture

Purely residential areas once, Delhi's Mukherji Nagar and Old Rajinder Nagar suddenly turned into commercial hubs, spilling over with swanky spas, upscale gyms, unisex salons, branded stores, pool parlours and resto-bars . All of this catering to the thousands of IAS aspirants who flock here to realize their dreams, the economic activity fuelled by an insatiable and evergrowing coaching industry.

birds fish aquarium destination


Every Sunday, Maskan Chavady turns into a bazaar for birds and animals. PRINCE FREDERICK hangs around
Photos: Prince Frederick 
 
Chirps and chatters Scenes from Maskan Chavady
Traders at Maskan Chavady are wary of reporters. Three years ago, rooster-sellers went into silence at the sight of my scribble-pad. So this time around, I leave pen and paper behind but dress up for this special assignment. After my alarm clock duti fully wakes me at five in the morning, I get into a canary green polo-neck T-shirt with a block-printed image of a pigeon and catch what is probably the first morning bus in my neck of the woods. From Parry’s Corner, I hire an auto for a Sunday morning date with birds and beasts. Nobody gives me a second look, thanks to my canary green T-shirt. Good for me, the milling crowd thinks I am one of their own.
There are no shops here, but it is still a busy market. The commerce takes place on either side of a road that leads to what is called the Kozhi Market (a wholesale chicken market in Broadway). The area is known as Maskan Chavady. Standing and squatting, men and a sprinkling of women line the road selling ducks, pigeons, budgies, cockatiels, African love birds, roosters, puppies, kittens, white mice and rabbits. These are some of the more common creatures at Maskan Chavady, but pretty much any animal can be brought and sold at this Sunday market (from 6 a.m. to 11 a.m.).
Attempt at history
I show an interest in homing pigeons, offered by Ravi at Rs. 200 a pair. When I try to beat down the price, he says his price is fair. Apparently, he keeps pigeons as a hobby, selling some to maintain the rest. When he reduces the price to Rs. 100 a pair, I tell him I am not interested. That I am a journalist looking for a story.

Ravi introduces me to 71-year-old Mohan, touted as the best bet to throw light on the market’s origins. But Maskan Chavady existed even before Mohan began to sell pigeons as a 10-year-old. As it turns out, he is not very informed about the market’s history.
The bazaar is sustained by the passion of pet lovers. Many travel long distances to be here. The traders take a lot of trouble too. Duck-seller Kumar pedals from Vadakkarai (beyond Red Hills) after ingeniously piling cages high on his cycle carrier. However, Nakeeran tops the list for enthusiasm. He can’t use his legs and with a cycle made for the handicapped, he travels slowly from Old Washermanpet to sell rabbits. And there is always someone new entering the fold. Rajkumar is just knee high to a grasshopper. But this boy has come (escorted by 17-year-old Elvis, his neighbour and ‘anna’) to trade in white mice today (at Rs. 30 a pair).

It is 8.30 a.m. and two hours of chatting and walking around is beginning to tell on me. I am badly in need of my morning coffee and something to chew on. For small change, Nagoor offers me a cup from the steel can he carries around on a cycle. And I depend on Samikanu from Korukupet for breakfast – gruel made from ragi. As pet lovers and traders leave home early, these mobile eateries do brisk business till the last man leaves.
I decide to buy myself a memento from Maskan Chavady. There are bird cages, which I will require shortly for a mini-aviary I have been planning for my little son. The one I take a fancy for costs Rs. 900, more than what I carry with me to the market.
I sit on my haunches and inspect a pile of catapults spread out on a cardboard. I end up buying one for Rs. 15 from Kumar, a gypsy who makes them using rubber meant for surgical appliances.
As I leave the market with this keepsake tucked in my pocket, I can’t help thinking, “This is interesting! Nobody knows when it started. Nobody can lay claim to any space. It is not controlled by rules, yet there is order.”

R. Narayanan, 50, sacrifices his weekends for work. He hardly spends time with his wife and children. A resident of Poonamallee, a western suburb, he travels as far as Vellore and Villupuram to pick up iron tools — nuts, bolts, knives, pickaxes, shovels and the like.
Every Friday morning, he comes to Old Trunk Road in Pallavaram, where he sells his wares collected during the past week at the vaara sandhai or weekly market, more popularly known as the Friday shandy (a corruption of sandhai). It has been a ritual for Narayanan for the past two decades to arrive early on Friday morning to the shandy, but the shandy itself has been in existence for 177 years now.
Started in 1836 during the Mughal era, the Friday shandy attracts farmers, sellers of old clothes, used home appliances and horticulturists from near and far, as much as buyers from all over the city and suburbs.
“I have been visiting the shandy for more than five years. Even if I do not get the flower saplings of my choice this week, the vendors make sure that I get it next week,” said T. Bhami, an architect. The range of goods on sale is mind boggling. From nails that come nearly free of cost to refrigerators, music amplifiers and even dentures — the shandy has something for everybody.
G. Selvam (30) and his wife Poongodi (25) sell catapults and ‘disco mani maalais’. While the maalais — or necklaces — come for Rs. 20 a piece, the catapults are priced between Rs. 30 and Rs. 40. The shandy attracts many members from the ‘narikuravar’ (gypsy) community, who sell bead necklaces and hair oil.
A huge hit among visitors is the large variety of ornamental and flowering plants. The horticulturists mostly come from Padappai, about 15 km from Tambaram. Used cycles in running condition can be bought for Rs. 800. Used cloth merchants are the first to come but wind up by 10 a.m. as migrant workers buy shirts and trousers at throwaway prices.
“The shandy originated during the Mughal Era when goat and cattle rearers came here to sell the animals to cater to the needs of the soldiers. Over the years, it diversified and now, a host of products are sold,” says S.P. Gandhi of Pallavaram Small Merchants’ Association.
The weekly shandy was functioning earlier along the Shandy Road near Cantonment Pallavaram High School. Owing to traffic regulations and other developments, the merchants were forced to shift to Old Trunk Road running parallel to the railway lines between Tirusulam and Pallavaram railway stations.
The merchants pay a paltry sum to contractors engaged by St. Thomas-cum-Pallavaram Cantonment Board for their shops, each of which occupies not more than 100 sq. ft. The atmosphere has to be experienced: if you have not visited the Friday shandy yet, you are missing something.
fish aquarium accessory : Lilly PAM Shopping Complex, New More Market, Railway Reservation Building, Park Town (Parrys) & Rettaiaeri Bus Stop, Kolathur, 

அறிவியல்ஆர்வத்தைஏற்படுத்தினேன்!



வீணான பொருட்களை விளையாட்டு பொருட்களாக மாற்றி, குழந்தைகளிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும், அரவிந்த் குப்தா:  என் பெற்றோர், படிப்பறிவு அற்றவர்கள். எனவே, வறுமையிலும் என்னை, ஐ.ஐ.டி., வரை படிக்க வைத்தனர். 1970ல் கான்பூர் ஐ.ஐ.டி., யில், "எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்' படித்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினேன். மேற்கொண்டு படிக்க, ஓராண்டு விடுமுறை எடுத்து, மத்திய பிரதேச மாநிலம் சென்றேன்.அங்கு, குழந்தைகளுக்கு அறிவியலை கற்றுத் தருவது குறித்த திட்டத்தில் பங்கேற்றேன். கிராம பள்ளிகளில், அறிவியல் சோதனையை செய்து காட்ட, உபகரணங்கள் இருக்காது. எனவே, "வேஸ்ட்' என, பலராலும் தூக்கி எறியப்படும் பழைய செய்தித் தாள், பாட்டில்கள், சைக்கிள் டியூப், மேக்னட், பென்சில், பேட்டரி, தீக்குச்சிகள் மூலம், பல அறிவியல் விளையாட்டு பொருட்களை, குழந்தைகளிடம் நேரடியாக உருவாக்கி காட்டி, அவர்களையும் உருவாக்க செய்தேன்.

இச்செய்முறை சோதனைகள் மூலம், குழந்தைகளிடம் அறிவியலை எளிதாக புரிய வைத்தேன். இப்பணியே, பிற்காலத்தில் முழு நேரமாக மாறி கடந்த, 30 ஆண்டுகளாக எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், செய்து வருகிறேன். குழந்தைகளுக்காக உருவாக்கிய ஒவ்வொரு விளையாட்டிலும், ஒரு அறிவியல் கோட்பாடு இருக்கும்.இதை என், "வெப்சைட்'டிலிருந்து இலவசமாக, "டவுண்லோடு' செய்யலாம். தற்போது புனேயில் உள்ள, "இன்டர் யுனிவர்சிட்டி சென்டர் பார் அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோ பிசிக்ஸ்' அமைப்பின், குழந்தைகள் அறிவியல் மையத்தில் பணியாற்றுகிறேன்.கிராமத்து குழந்தைகளிடம், அறிவியலை பிரபலப் படுத்தியதற்காக, 1988ல் தேசிய விருதும்; 2001ல் ஐ.ஐ.டி.,யின் சிறந்த முன்னாள் மாணவர் விருதும்; 2008ல் இந்தியன் நேஷனல் சயின்ஸ் அகடமியின், "இந்திரா காந்தி' விருதும் கிடைத்தது. எனினும், பரிசுக்கும், பாராட்டுக்கும் அப்பாற்பட்டு, தொடர்ந்து இச்சேவையில், ஈடுபட்டு வருகிறேன். தொடர்புக்கு:www.aravindguptatoys.com.

வாழை நாரில் பை, கயிறு, பெட்ஷீட், பாய், ஜன்னல் திரை

முருகேசன், 2008 முதல், வாழை நாரில் பை, கயிறு, பெட்ஷீட், பாய், ஜன்னல் திரை தயார் செய்கிறார். இதற்காக, வாழை பட்டையை மெல்லியதாக உரிக்கும் கருவியை, அவரே தயாரித்து, 40 பேர் வரை, பணியில் அமர்த்தி உள்ளார். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, இப்பொருட்களை குறைந்தபட்சம், 20 முதல், 2,000 ரூபாய் வரையில் விற்கிறார். வாழைநார் திரிக்கும் கருவி: சைக்கிளில் உள்ள சக்கரத்தினைப் பயன்படுத்தி கயிறு திரிக்கும் சாதனத்தை உருவாக்கியுள்ளார் விவசாயி. இதன்மூலம் அவருக்கு சராசரியாக 15,000 மீட்டர் அளவிற்கு கயிறு உற்பத்தி செய்ய முடிந்துள்ளது. 40 கூலியாட்கள் மூலம் இரண்டு தொழில்நுட்ப கூடங்களை அமைத்தார். இன்று அவர் தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு அவர் தயாரிக்கும் கைவினைப் பொருட்களை (வாழைநார் பைகள், கயிறு) எடுத்துச்சென்று வியாபாரம் செய்கிறார். மத்திய அரசு விவசாயியைக் கவுரவித்து 2 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது என்று கூறும் விவசாயியின் தொடர்பு முகவரி: பி.எம்.முருகேசன், மேலக்கால் கிராமம், திருமங்கலம், மதுரை. 93605 97884.

உழவர் கண்டுபிடிப்பு - ராஜராஜன் 1000க்கு நடவு குறியீட்டுக்கருவி: விவசாயி தன்னுடைய நிலத்தில் களிமண் பாங்கு அதிகம் இருப்பதால் நடவு குறியீட்டுக் கருவியினை பரிந்துரைப்படி கடைபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார். எனவே தானே ஒரு குறியீட்டுக் கருவியினை உருவாக்கினார். அதாவது மூன்றேமுக்கால் அடி நீளத்தில் 11' பிவிசி அளவுள்ள உருளையில் எடை குறைந்த, எளிதில் உபயோகிக்கக்கூடிய குறியீட்டுக் கருவியை தயாரித்துள்ளார். இக்கருவி உபயோகத்தால் தனக்கு ஒரு ஏக்கர் நடவிற்கு 12 பணியாட்களுக்குப் பதிலாக 6 நபர்களே தேவைப்பட்டனர். இதன் பயன்பாடு தற்பொழுது 980 எக்டர் நிலத்தில் உள்ளது என்று கூறுகிறார் விவசாயி. மற்ற உழவர்கள் இதனை பயன்படுத்தி நன்றாக இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள். இதன் பயன்பாடு நேரடி நெல் விதைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.350/-தான். இதனை பயன்படுத்தினால் விதை அளவு குறைந்து கோனோ களைக்கருவி உபயோகத்திற்கு ஏற்றதாக இருக்கிறது என்று கூறுகிறார் விவசாயி. தொடர்புக்கு: பாலகுரு, கருணாவூர் கிராமம், மன்னார்குடி தாலுகா, திருவாரூர். 94425 25236.


நெல்லில் சக்கர உருளை வடிவ களைக்கருவி: சுமார் 10 கிலோ எடையுள்ள இக்கருவியை வடிவமைத்த விவசாயி கூறுவது: இக்கருவி களைகளை சுலபமாக அகற்றி மண்ணில் அமிழ்த்திவிடுவதால் தனக்கு களை மேலாண்மை உர மேலாண்மையில் வெற்றி கிட்டியது என்கிறார். இக்களைக்கருவியினை மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையத்தின் ஆலோசனையின்படி பிற உழவர்களுக்கு விலைக்கு கொடுப்பதில் சராசரியாக ரூ.15,000 வருமானம் கிடைக்கிறது என்று கூறும் விவசாயியின் தொடர்பு முகவரி: சண்முகசுந்தரம், கல்லேரிப்பட்டி, ஆத்தூர், சேலம். 94427 82142.

30 நாள் 30 வகை ராகி சமையல்! ரெசிப்பிஸ்

ரெசிப்பிஸ் ரகளையான சுவைகளில்.. 30 வகை ராகி சமையல்! ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமான உணவு வகைகளில் முக்கியமானது ராகி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்த தானியம் இது. கால்சியம் நிறைந்திருக்கும் இது, சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது. ராகியில் களி, கூழ் என்றே சாப்பிட்டு பழகிய நமக்கு, அதில் அதிரசம் முதல் அடை வரை அட்டகாசமான ரெசிபிகளை செய்ய முடியும் என சொன்னதோடு, அவற்றுக்கான குறிப்புகளையும் எழுதி அனுப்பியிருந்தார். இனி ஒவ்வொரு நாளையும் கேழ்வரகு உணவோடு கொண்டாடுங்கள்! -------------------------------------------------------------- ராகி அதிரசம் தேவையானவை: ராகி மாவு - இரண்டரை கப், உருண்டை வெல்லம் - 2 கப், நெய் - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: உருண்டை வெல்லத்தை மெழுகு பதத்தில் பாகு காய்ச்சி ராகி மாவில் ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும். மாவு இளஞ்சூடாக இருக்கும் போது 2 கரண்டி நெய் சேர்த்து கலந்து கொள்ளவும். மாவு ஆறியதும் அதிரசங்களாக தட்டி எண்ணெயில் பொரித்-தெடுக்கவும். ----------------------------------------------------------- ராகி லட்டு தேவையானவை: வறுத்த ராகி மாவு - ஒரு கப், சர்க்கரைத்தூள் - ஒண்ணேகால் கப், நெய் - கால் கப்புக்கும் சிறிது குறைவாக, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, ஒன்றிரண்டாக பொடித்த முந்திரி - தேவையான அளவு. செய்முறை: வறுத்த ராகி மாவு, சர்க்கரைத்தூள், முந்திரி, ஏலக்காய்த்தூள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, நெய்யை சூடாக்கி ஊற்றி உருண்டைகளாக பிடிக்கவும். முந்திரிக்கு பதிலாக வறுத்து உடைத்த வேர்க்கடலையையும் சேர்க்கலாம். ------------------------------------------------------------------ ராகி கார கொழுக்கட்டை தேவையானவை: ராகி மாவு - ஒரு கப், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், துருவிய கேரட் - கால் கப், நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சைமிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன். செய்முறை: ராகி மாவை இளஞ்சூடாக வறுத்துக் கொள்ளவும். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கேரட், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். இதில் உப்பு போட்டு, வறுத்த மாவில் சேர்த்து வைக்கவும். தண்ணீரை கொதிக்க வைத்து, 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மாவை கிளறவும். கொழுக்கட்டைகளாக பிடித்து துணி போட்ட இட்லி தட்டில் வேக வைக்கவும். ராகி மாவை வாசனை வரும்வரை வறுக்கத் தேவையில்லை. லேசாக வறுத்தாலே போதும். இப்படி வறுப்பது மாவின் கொழ கொழப்புத்தன்மையை போக்குவதற்குத்தான்!. ------------------------------------------------------------------- ராகி இனிப்பு கொழுக்கட்டை தேவையானவை: ராகி மாவு - 2 கப், வெல்லம் (அ) கருப்பட்டி - ஒரு கப், தேங்காய் - ஒரு மூடி, பயத்தம்பருப்பு - அரை கப், ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன். செய்முறை: பயத்தம்பருப்பை லேசாக வறுத்து நெத்துப்பதமாக (குழைய விடாமல், தொட்டால் உடைகிற பதம்) வேக வைத்துக் கொள்ளவும். ராகிமாவை இளஞ்சூடாக வறுத்து துருவிய தேங்காய், பயத்தம்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து வைக்க வும். வெல்லம் (அ) கருப்பட்டியை தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டவும். அதை மீண்டும் கொதிக்க வைத்து மாவு கலவையில் ஊற்றி கொழுக்கட்டைகளாக பிடித்து, இட்லி தட்டில் துணி போட்டு வேக வைக்கவும். ----------------------------------------------------------------------- ராகி வெஜ் அடை தேவையானவை: ராகி மாவு - ஒரு கப், மாவாக்கிய கோதுமை ரவை (அ) கோதுமை மாவு - ஒரு கப், பச்சரிசி மாவு (விருப்பப்பட்டால்) - கால் கப், காய்கறி கலவை - ஒரு கப் (துருவிய கேரட், வெங்காயம், கோஸ், முள்ளங்கி), சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: எல்லா பொருட் களையும் ஒன்று சேர்த்து வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி பிசைந்து வைக்கவும். அரை மணி நேரம் கழித்து வாழை இலை (அ) பாலித்தீன் ஷீட்டில் எண்ணெய் தடவி கனமான அடைகளாகத் தட்டி தோசைக் கல்லில் சுட்டு எடுக்கவும். --------------------------------------------------------------- ராகி முருங்கை அடை தேவையானவை: ராகி மாவு - 2 கப், முருங்கை கீரை - அரை கப், பச்சரிசி மாவு - கால் கப், நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், உப்பு - தேவையான அளவு. தாளிக்க - கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2. செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்து, வெங்காயம், முருங்கை இலை சேர்த்து வதக்கவும். பத்து நிமிடம் வதங்கியதும், ராகி மாவு, அரிசி மாவில் கொட்டி இளஞ்சூடான தண்ணீரை ஊற்றிப் பிசைந்து, தோசைக் கல்லில் கனமான அடைகளாக தட்டவும். ------------------------------------------------------------------- ராகி புட்டு தேவையானவை: வறுத்த ராகி மாவு - ஒரு கப், அச்சு வெல்லம் - அரை கப், துருவிய தேங்காய் - கால் கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு. செய்முறை: உப்பு கலந்த தண்ணீரை மாவில் சிறிது சிறிதாக தெளித்து புட்டுக்கு பிசைந்து கொள்ளவும். பதினைந்து நிமிடம் கழித்து மிக்ஸியில் போட்டு சுற்றவும் (அப்போதுதான் கட்டி இருக்காது). இந்த மாவை இட்லி தட்டில் துணி போட்டு பத்து நிமிடம் வேக வைக்கவும். வெந்த மாவில் துருவிய வெல்லம் அல்லது வெல்லப்பாகு (தேன் பதத்தில்), துருவிய தேங்காய், ஏலக்காய்த்தூள் கலந்து பரிமாறவும். வெல்லத்தைப் பாகாக செய்து சேர்த்தால் புட்டு தொண்டையை அடைக்காது. ------------------------------------------------------------------ ராகி இடியாப்பம் தேவையானவை: ராகி மாவு - 2 கப், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு. செய்முறை: ராகி மாவை இட்லி தட்டில் துணி போட்டு வேக வைக்கவும். மாவில் தண்ணீர் தெளிக்க வேண்டாம். வெந்த மாவை ஆற வைக்கவும். தண்ணீரை கொதிக்க வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வெந்த ராகி மாவில் கொட்டி இடியாப்ப மாவு பதத்தில் கிளறவும். சூடாக இருக்கும்போதே இடியாப்பங்களாக பிழியவும். ஒன்றின் மேல் ஒன்று பிழியாமல் பரவலாக பிழிந்தால் கொழகொழப்பு இருக்காது. வெல்லம் சேர்ந்த தேங்காய்ப் பாலுடன் சாப்பிட சுவையாக இருக்கும். ராகி மாவுடன் அரிசி இடியாப்ப மாவை சம அளவு கலந்தும் செய்யலாம். -------------------------------------------------------------------- ராகி சேவை தேவையானவை: உதிர்த்த ராகி இடியாப்பம் - 2 கப், நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் - 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு - அரை கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, பொட்டுக்கடலை - தலா ஒரு டீஸ்பூன். செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும். இஞ்சி, பச்சைமிளகாய், எலுமிச்சை சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, உதிர்த்த இடியாப்பத்தை போட்டுக் கிளறவும். கறிவேப்பிலை தூவி பரிமாறவும். -------------------------------------------------------------------------- ராகி வற்றல் தேவையானவை: ராகி மாவு - 2 கப், கல் உப்பு - தேவை யான அளவு, பச்சைமிளகாய் விழுது - சிறிதளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன். செய்முறை: தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, உப்பு, பச்சைமிளகாய் விழுது, சீரகம் சேர்க்கவும். இந்த தண்ணீரை ராகி மாவில் கொட்டி இடியாப்ப மாவு பதத்துக்கு கிளறி, ஓமப்பொடி அச்சில் போட்டு சிறு முறுக்குகளாக பிழியவும். வெயிலில் நன்கு உலர்த்தி, டப்பாவில் பத்திரப்படுத்தவும். தேவையானபோது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். ----------------------------------------------------------------------- ராகி பால் அல்வா தேவையானவை: முழு கேழ்வரகு - கால் கிலோ, நெய் - கால் கிலோ, சர்க்கரை - அரை கிலோ, முந்திரி - 50 கிராம், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் - தேவையான அளவு. செய்முறை: கேழ்வரகை முதல்நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் காலை கிரைண்டரில் அரைத்து 4 முறை பால் எடுக்கவும். இந்த கேழ்வரகு பாலை 4 மணி நேரம் வைத்திருந்தால் தெளிந்து விடும். மேலே நீர்த்திருக்கும் நீரை கொட்டி விடவும். கடாயில் சர்க்கரையை போட்டு தண்ணீர் ஊற்றி, ஜீரா பதத்தில் (சர்க்கரை தண்ணீரில் கரைந்ததும் ஏற் படும் பதம்) காய்ச்சவும். இதில் தெளிந்த கேழ்வரகு பால், நெய் ஊற்றி கிளறி அல்வா பதம் வந்ததும் ஏலக்காய்த் தூள், ஜாதிக்காய்த்தூள், முந்திரி தூவி இறக்கவும். -------------------------------------------------------------------- ராகி மாவு அல்வா தேவையானவை: ராகி மாவு, வெல்லம், தேங்காய்ப் பால் - தலா 2 கப், தண்ணீர் - ஒரு கப், நெய் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - தேவையான அளவு. செய்முறை: தேங்காய்ப் பாலில் தண்ணீர், வெல்லம், ராகி மாவு சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும். நெய் ஊற்றி அல்வா பதம் வரும் வரை கிளறவும். ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். இந்த அல்வாவில் தேங்காய்ப் பால் சேர்த்திருப்பதால் 3 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும். --------------------------------------------------------------------------- ராகி ரெடிமேட் தோசை தேவையானவை: ராகி மாவு - 2 கப், பச்சரிசி மாவு - ஒரு கப், நறுக்கிய பச்சைமிளகாய் - 2, நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - தேவையான அளவு, நறுக்கிய வெங்காயம் - 1, உப்பு - தேவையான அளவு. செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாக தண்ணீரில் கரைத்து ரவா தோசை போல் ஊற்றவும். ஊற வைக்க வேண்டியதில்லை. உடனே செய்யலாம். --------------------------------------------------------------------------- ராகி ஸ்பான்ஜ் தோசை தேவையானவை: ராகி மாவு - 2 கப், உளுந்து - அரை கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: உளுந்தையும் வெந்தயத்தையும் 3 மணி நேரம் ஊற வைத்து இட்லிக்கு அரைப்பது போல் அரைக்கவும். இதில் ராகி மாவு, உப்பு போட்டு கரைத்து மறுநாள் கனமான தோசைகளாக வார்க்கவும். ---------------------------------------------------------------- ராகி சப்பாத்தி தேவையானவை: ராகி மாவு - ஒரு கப், கோதுமை மாவு - கால் கப், தண்ணீர் - 1 (அ) ஒண்ணேகால் கப், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தளதளவென கொதிக்கும்போது எண்ணெய், ராகி மாவு சேர்த்து கட்டியில்லாமல் ஐந்து நிமிடம் கிளறவும். பிறகு கோதுமை மாவை சேர்த்து ஆறியவுடன் மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, தோசைக் கல்லில் சுடவும். அடுப்பில் வைத்து கிளறாமல் சாதாரண சப்பாத்தி செய்யும் முறையிலும் எல்லாவற்-றையும் சேர்த்து, பிசைந்து செய்யலாம். ----------------------------------------------------------------- ராகி பணியாரம் தேவையானவை: ராகி மாவு, ரவை, சர்க்கரை, பால் - தலா ஒரு கப், சோடா உப்பு - கால் டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பாலில் ராகி மாவு, ரவை, சர்க்கரை, சோடா உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு மணி நேரம் வைக்கவும் (விரும்புகிறவர்கள் துருவிய தேங்காய் சேர்க்கலாம்). பிறகு அப்பக்குழியில் நல்லெண் ணெய் ஊற்றி, பணியாரங்களாக சுட்டு எடுக்கவும். ---------------------------------------------------------------------- சத்துமாவு உருண்டை தேவையானவை: முளைகட்டிய ராகி - ஒரு கப், துருவிய வெல்லம் - அரை கப்புக்கும் சற்று குறைவாக, தேங்காய் - ஒரு மூடி, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன். செய்முறை: முழு கேழ்வரகை 48 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டி ஒரு மூட்டையாக கட்டி வைத்தால் மறுநாள் காலை முளைவிட்டிருக்கும். (ஊறும்போது அடிக்கடி தண்ணீரை மாற்ற வேண்டும்). முளைவிட்ட ராகியை வறுத்து, மாவாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவை ஒரு வாய் அகன்ற பேசினில் கொட்டி நடுவில் ஒரு குழி போட்டு, சுடுதண்ணீர், துருவிய வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் போட்டு கிளறி உருண்டைகளாக பிடிக்கவும். -------------------------------------------------------------- ராகி சுண்டல் தேவையானவை: முளைகட்டிய ராகி - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, துருவிய தேங்காய் - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: முளைவிட்ட ராகியை இட்லி தட்டில் பரப்பி வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். இதில் வேக வைத்த ராகி, தேங்காய் துருவல், கறிவேப்பிலையை சேர்த்து, கிளறி இறக்கவும். தேங்காய் துருவலை தவிர்க்க நினைப்பவர்கள் வறுத்த நிலக்-கடலையை கரகரப்பாக அரைத்தும் சேர்க்கலாம். ---------------------------------------------------------------------- ராகி சாலட் தேவையானவை: முளைகட்டிய ராகி - ஒரு கப், துருவிய கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம் - தேவைக்கேற்ப, மெல்லியதாக நறுக்கிய குடமிளகாய், கொத்தமல்லி - சிறிதளவு, ஒன்றிரண்டாக உடைத்த வேர்க்கடலை - சிறிதளவு, எலுமிச்சை சாறு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து பரிமாறவும். எல்லா சத்துக்களும் நிறைந்த அற்புதமான டிஷ் இது. --------------------------------------------------------------------------- ராகி பழ அப்பம் தேவையானவை: ராகி மாவு, மைதா மாவு - தலா அரை கப், கனிந்த வாழைப்பழம் - 2, சர்க்கரை - தேவையான அளவு. செய்முறை: வாழைப்பழத்தை பொடியாக நறுக்கவும். அதனுடன் மைதா மாவு, ராகி மாவு, சர்க்கரை, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கையால் கரைக்கவும். அப்பக்குழியில் எண்ணெய் ஊற்றி, அப்பமாக சுடவும். குறைந்த தீயில் செய்யவும். இல்லையெனில் கருகிவிடும். ----------------------------------------------------------------------------- ராகி வடை தேவையானவை: கறுப்பு உளுந்து - ஒரு கப், ராகி மாவு - கால் கப், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: உளுந்தை 2 மணி நேரம் ஊற வைத்து பாதி தோல் மட்டும் போகும்படி கழுவவும். கழுவிய உளுந்தை கரகரப்பாக அரைத்து அதனுடன் ராகி மாவு, உடைத்த மிளகு, சீரகம், உப்பு, இஞ்சி, கறிவேப்பிலை கலந்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். ---------------------------------------------------------------------- ராகி பக்கோடா தேவையானவை: ராகி மாவு, மஞ்சள் சோள மாவு - தலா அரை கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 2, இஞ்சி - ஒரு அங்குல துண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்-பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி ராகி, சோள மாவுகளுடன் சேர்க்கவும். பிறகு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து பக்கோடாவாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சோள மாவுக்கு பதில் கடலை மாவும் சேர்க்கலாம். --------------------------------------------------------------------------- ராகி கீர் தேவையானவை: முழு கேழ்வரகு - அரை கப், தண்ணீர் - கால் கப், பால் - முக்கால் கப், பால் பவுடர் (அ) மில்க்மெய்ட் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - தேவைக்கேற்ப, முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன். செய்முறை: முழு கேழ்வரகை வெறும் கடாயில் வறுத்து, ரவை போல உடைத்து வைத்துக் கொள்ளவும். முந்திரியை பொடி செய்யவும். ஒரு பாத்திரத்தில் பால், தண்ணீர் கலந்து கொதிக்க வைக்கவும். இப்போது இதில் உடைத்த ராகியைப் போட்டு வேக வைக்கவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். பால் பவுடர், முந்திரி சேர்த்துக் கிளறி, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும். ---------------------------------------------------------------------------------- ராகி கூழ் தேவையானவை: முழு கேழ்வரகு - 5 கப், உப்பு - தேவையான அளவு. செய்முறை: முழு கேழ்வரகை முதல் நாள் சுத்தமாக கழுவி ஊற வைக்கவும். மறுநாள் நன்றாக அரைத்து 4 முறை பால் எடுக்கவும். எடுத்த பாலின் அளவைவிட மூன்று முதல் நான்கு மடங்கு தண்ணீர் ஊற்றி தனியே வைக்கவும். ஏழு (அ) எட்டு மணி நேரம் கழித்து மேலே தெளிந்திருக்கும் நீரை கொட்டி விடவும். அடியில் வண்டலாக படிந்திருக்கும் பாலை ஒரு துணியில் கட்டி தொங்க விடவும். அடுத்த நாள் துணியைப் பிரித்துப் பார்த்தால் ராகி விழுது படிந்திருக்கும். இதை வெயிலில் காய வைத்து மிக்ஸியில் பவுடராக்கி வைத்துக் கொள்ளவும். கூழ் தேவைப்படும்போது, தேவையான அளவு இந்த மாவை எடுத்து உப்பு, தண்ணீர் ஊற்றி நன்கு காய்ச்சி கொடுக்கவும். குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பருவத்தில் இதைக் கொடுக்கலாம். --------------------------------------------------------------------------- ராகி மோர் கூழ் தேவையானவை: ராகி மாவு - கால் கப், கடைந்த மோர் - கால் கப், தண்ணீர் - முக்கால் கப், உப்பு - தேவையான அளவு, துருவிய கேரட் - 3 டீஸ்பூன், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், சிறிய வெங்காயம் - சிறிதளவு. செய்முறை: ராகி மாவை தண்ணீரில் கரைத்து முதல் நாள் இரவே தனியாக வைத்து விடவும். மறுநாள் காலை அதை அடுப்பில் வைத்து உப்பு சேர்த்து கூழாகக் காய்ச்சி ஆற வைக்கவும். இத்துடன் மோர், பச்சைமிளகாய், கேரட், சிறிய வெங்காயம், இஞ்சி சேர்த்து சாப்பிடவும். --------------------------------------------------------------------------------- ராகி முறுக்கு தேவையானவை: ராகி மாவு - ஒரு கப், பச்சரிசி மாவு - ஒரு கப், கடலை மாவு - அரை கப், எள், உப்பு, பெருங்காயம் - தேவையான அளவு. செய்முறை: ராகி மாவை இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். மாவு சூடாக இருக்கும்போதே இதனு-டன் பச்சரிசி மாவு, கடலை மாவு, எள், உப்பு சேர்த்துக் கொள்ளவும். இதை தண்ணீர் விட்டு பிசைந்து (ரொம்ப கடினமாகவும் இல்லாமல், தளர்வாகவும் இல்லாமல்), முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து, எண்ணெ-யில் பொரித்துக் கொள்ளலாம். ராகி மாவை வேக வைக்காமலும் முறுக்கு செய்யலாம். ------------------------------------------------------------------------ சத்துமாவு கஞ்சி தேவையானவை: முளைகட்டிய கேழ்வரகு, முளைகட்டிய பயத்தம்-பருப்பு, முளைகட்டிய கோதுமை, முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை - தலா ஒரு கப், பொட்டுக்கடலை, கோதுமை ரவை தலா -ஒரு கப், புழுங்கல் அரிசி, வேர்க்கடலை, முந்திரி - தலா அரை கப், எள் - கால் கப். செய்முறை: எல்லா பொருட்களையும் வெயிலில் காய வைத்து தனித் தனியாக வறுக்கவும். பிறகு ஒன்றாக சேர்த்து அரைத்து தேவையான வெல்லம், பால் சேர்த்து கஞ்சியாக காய்ச்சி குடிக்கவும். இது, குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது இனிப்பு பிடிக்காதவர்கள் வெல்லத்துக்கு பதிலாக உப்பு சேர்த்துக் கொள்ளலாம். ------------------------------------------------------------------------------- ராகி பூரி தேவையானவை: ராகி மாவு, கோதுமை மாவு - தலா ஒரு கப், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு. செய்முறை: எல்லா பொருட்களையும் ஒன்று சேர்த்து பூரி மாவுபோல பிசைந்து கனமான பூரிகளாக பொரித்து எடுக்கவும். ---------------------------------------------------------------------------- ராகி போண்டா தேவையானவை: நறுக்கிய வெங்காயம் - கால் கப், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. மேல் மாவுக்கு: ராகி மாவு - ஒரு கப், கடலை மாவு - கால் கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - சிறிதளவு, சோடா உப்பு - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன். செய்முறை: மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கிக் கொள்ளவும். பிறகு இவற்றை சிறு உருண்டைகளாக செய்து, கெட்டியாகக் கரைத்து வைத்துள்ள மேல் மாவில் தோய்த்து பொரித்தெடுக்கவும். --------------------------------------------------------------- ராகி பிஸ்கெட் தேவையானவை: ராகி மாவு - ஒன்றரை கப், சர்க்கரைத்தூள் - முக்கால் கப், டால்டா (அ) நெய் - அரை கப், முந்திரி - 10, பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை. செய்முறை: ராகி மாவையும் பேக்கிங் பவுடரையும் மூன்று முறை சலிக்கவும். இதனுடன் டால்டா (அ) நெய், சர்க்கரை சேர்த்து கட்டிகள் இல்லாமல் பிசையவும். நறுக்கிய முந்திரியை போட்டு பிஸ்கெட்டுகளாக தட்டவும். கடாயில் மணலை பரப்பி, பத்து நிமிடங்கள் சூடு செய்து, பிறகு ஒரு அலுமினிய தட்டில் பிஸ்கெட்டுகளை வைத்து, 10 முதல் 15 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வைத்து மூடி 'பேக்' செய்யவும். 'மைக்ரோவேவ் அவன்'-ல் செய்பவர்கள் 1600 சென்டிகிரேட்டில் 20 நிமிடங்கள் 'பேக்' செய்யவும்.

முக அழகு - சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க

முகப் பளபளப்பு
ஆரஞ்சுத் தோலை எடுத்துக் கழுவி, பொடிப் பொடியாக நறுக்கி நன்றாகக் காய வைக்கவும். பிறகு அதை நைஸாக அரைத்து வைத்துக்கொள்ளவும். வைட்டமின் சி இருப்பதால், இந்தப் பொடி தோலுக்கு மிகவும் நல்லது. இதை ரோஸ் வாட்டர் அல்லது பாலில் குழைத்து முகத்தில் ஃபேஸ் பேக்காகப் போட்டுக்கொண்டால், முகம் பொலிவாக இருக்கும். சருமத்தில் பூசினாலும் பளபளப்பாக இருக்கும்.

புழு வெட்டு, வழுக்கை
1 கோப்பை நல்லெண்ணெ யில் 7, 8 பூண்டை நசுக்கிப் போடவும். அதை நன்றாகக் காய்ச்சவும். இறக்கி வைத்து 1 மூடி எலுமிச்சம் பழத்தில் சாறு பிழிந்து எடுத்துச் சேர்த்து வைக் கவும். பூச்சிவெட்டு இருக்கும் இடத்தில் 2 சொட்டு தேய்த்து வர, முடி வளர ஆரம்பிக்கும்.

வீட்டிலிருந்தபடியே சுலபமாகவும்,செலவி ல்லாமலும்,பக்கவிளைவுகள் இல்லாமலும் செய்து கொள்ளக்கூடிய சித்த மருத்துவ முறையில் ஒரு முக அழகுக் கலவை. முகப்பரு,கரும்புள்ளி நீங்க,சிவப்பு அழகு பெற :

தேவையான பொருட்கள்:-
1 - முல்தானி மட்டி பொடி - 200,கிராம்
2 - கஸ்தூரி மஞ்சள் பொடி - 50, கிராம்
3 - பூலாங்கிழங்கு பொடி - 50, கிராம்
4 -கோரைக் கிழங்கு பொடி - 50, கிராம் 
5 -நன்னாரி வேர் பொடி -50, கிராம்,

இவைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக் கின்றன வாங்கி ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.இதனை இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து பால் சிறிது விட்டுக் குழப்பி முகத்தை நீரில் கழுவித் துடைத்து விட்டு முகத்திலும் கழுத்துப் பகுதிகளிலும் பூசி விட்டு அமர்ந்து அரை மணிநேரம் கழித்து குளிர்ந்தநீரில் கழுவி விடவும் .
இதே போல் வாரம் இரண்டு முறை செய்து வர முகப்பரு ,கரும்புள்ளி, இவைகள் நீங்கும் மேலும் முகத்தின் தோல் பகுதியில் உள்ள இறந்த செல் களை அகற்றும்,முகம் மென்மையாகும்,சிவப்பு அழகு கிடைக்கும். இது அனுபவ முறையில் கைகண்ட முறையாகும்.

முகத்தில் அம்மை வடு ,தழும்பு நீங்க :
1 - கருவேப்பிலை - ஒரு கை பிடி
2 - கசகசா - ஒரு டீ ஸ்பூன்
3 - கஸ்தூரி மஞ்சள் - சிறிய துண்டு இதனை அரைத்து முகத்தில் பூசி அரை
மணி நேரம் கழித்து குளித்து வர அம்மை தழும்பு மறைந்துவிடும்.

10 நிமிடங்களில் முகம் பளபளக்க

முகப்பரு தொல்லை: சந்தனப் பவுடர் அல்லது டூத் பேஸ்ட்டை பருக்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து கழுவினால், நன்கு வெளிப்பட்ட பருக்கள் மறைந்து லேசாக காணப்படும்.

சின்ன சீரகத்தை அரைத்து ஒவொரு நாள் இரவிலும் முகத்தில் தடவி வர முகப்பரு மறைந்து விடும்.

* அகில் கட்டையை, பசும் பால் விட்டு சந்தனம் அரைப்பது போல் அரைத்து, அதை, உடம்பில் பூசி, பதினைந்து நிமிடம் கழித்து குளிக்க, தளர்ந்த சதையெல்லாம் இறுகி, உடல் மினுமினுப்பாக இருக்கும்.

தோல் சுருக்கம் இல்லாமல் என்றும் இளமையுடன் வாழ, நெல்லிக்கனியை தினமும் சாப்பிட்டு வாருங்கள் போதும்.

சரும நிறத்தை சிகப்பாக்கும் முக பூச்சுகள்

முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 - 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும்.

புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம் 

* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

* முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

* பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

* தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

* மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும். 

உதடு உலர்ந்து விட்டதா? * உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு இரத்தம் கசியும். உதடு கறுத்து விடும் இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான். இதைப் போக்க வெந்தயத்தை 1 ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விடவேண்டும். இரவில் வெண்ணையை சிறிதளவும் உதட்டில் தடவவும். சிறு உருண்டையை விழுங்கிவிடவும். இப்படிச் செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும். 

கரு வளையம் போக :- இட்லி மாவை கண்ணுக்குகீழ் பூசி 15 நிமிடம் கழித்து ரோஸ்வாட்டரில் கழுவிவிடவும். இரண்டு வாரம் தொடர்ந்து செய்தால் நல்ல பலன் தரும். * உருளைக்கிழங்கு சாறை தினமும் கண்களை சுற்றி தேய்த்தால் கருவளையம் நீங்கும்.

காது அழகை பராமரிப்பது எப்படி? * உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும், 15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்தமாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகிவிடும். முகத்திற்கு பூசும் பேஸ்- பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது. 

மணம் தரும் கோரைக் கிழங்கு!
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? இல்லையா? என்று இறைவனுக்கே சந்தேகம் வந்ததற்கு காரணம் அந்தக் காலப் பெண்கள் கோரைக்கிழங்கு மாவை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்ததுதானோ என்னவோ... கோரைக் கிழங்கு மாவை தலையிலும், உடலிலும் தேய்த்துக் குளித்து வந்தால் நீங்கள் இருக்கும் இடம் மணமணக்கும் போங்கள். தவிர இந்தக் கிழங்கில் உள்ள `டெர்பீன்கள்' சேர்த்து தயாரிக்கப்பட்ட வாசனை எண்ணெய் காய்ச்சலையும் போக்கக்கூடியது.

தினம் ஒரு நெல்லி!தோல் சுருக்கம் இல்லாமல் என்றும் இளமையுடன் வாழ, நெல்லிக்கனியை தினமும் சாப்பிட்டு வாருங்கள் போதும்.

சருமத்தில் ஏற்படும் அலர்ஜி, சொறி, சிரங்கு போன்ற எல்லா வகை சரும பிரச்னைகளுக்கும் பெஸ்ட் தோழி பறங்கிப்பட்டைதான்!
சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி பறங்கிப்பட்டை சூரணத்தை 40 நாட்கள் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மேலே சொன்ன சரும பிரச்னைகள் எல்லாம் தலை தெறிக்க ஓடி விடும். சருமத்திலும் நல்ல நிறம் கொடுக்க ஆரம்பிக்கும்.

முடி செழித்து வளர...
பெயரிலேயே தன் குணத்தை சொல்லும் `பொடுதலை' தான் நல்ல முடி வளர்ச்சிக்கு ஏற்ற மூலிகை. பொடுதலையின் இலைச்சாறுடன் தேங்காயெண்ணெய் கலந்து காய்ச்சவும். இதை பொடுகு உள்ளவர்கள் தலைக்குத் தேய்த்து வர பொடுகு நீங்கி தலைமுடி செழித்து வளரும். தவிர பெரும்பாலும் முக அழகும், முதுகு அழகும் கெட்டுப் போவதே பொடுகினால்தானே... ஸோ, பொடுதலையை பயன்படுத்தி கூந்தலை வாருங்கள். கூடவே முகத்தையும், முதுகையும் பொடுகு பாதிப்பில்லாமல் அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

அழகுராணி சோற்றுக் கற்றாழை!
சித்தர்களால் `குமரி' என்று செல்லமாக அழைக்கப்படும் சோற்றுக்கற்றாழை உண்மையிலேயே கடவுள் பெண்களுக்குக் கொடுத்த ஒரு அழகு வரம் என்றே சொல்லலாம்... ஃபிரெஷ்ஷான கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும். இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.
கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.

ஆஹோ ஓஹோ பச்சிலை!
ஒரு இலையை கசக்கினாலே வீடு முழுவதும் மணம் வீசும் திருநீற்றுப் பச்சிலையிலிருந்து தயாரிக்கப்படும் வாசனை எண்ணெயை (Bascillicum oil) தொடர்ந்து முகத்தில் தடவி வர முகப்பரு மற்றும் அதைக் கிள்ளினால் வரும் கரும்புள்ளிகள் எல்லாமே மறைந்துவிடும்.

செலவேயில்லாமல் ஸ்லிம்மாக்கும் அருகம்புல்!
சுத்தம் செய்யப்பட்ட அறுகம்புல்லை இடித்து சாறு பிழிந்து அதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர உடலிலுள்ள நச்சு மற்றும் கெட்ட நீர் வெளியேறி விடும். ரத்தம் சுத்தமாகும். உடம்பிலுள்ள தேவையற்ற ஊளைச்சதையெல்லாம் குறைய ஆரம்பிக்கும்.
தேங்காய் எண்ணெயையும், அறுகம்புல் சாற்றையும் சமஅளவு எடுத்து தைலமாக காய்ச்சி அதை உடலெங்கும் பூசி அரைமணி நேரம் கழித்து பயற்றம் பருப்பு மாவால் தேய்த்துக் குளியுங்கள். இப்படியே தொடர்ந்து செய்து வர உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அறுகம்புல் சாற்றில்சிறிதளவு மஞ்சள் மற்றும் விளக்கெண்ணெய் கலந்து பித்த வெடிப்புகளில் தடவி வர பாதங்கள் பஞ்சு போல் `மெத்'தாகி விடும்.

Wednesday, September 11, 2013

மூலிகை செடி வளர்க்கும் இத்தாலி பெண்!

குற்றாலத்தில், 400 வகையான மூலிகை செடிகளை வளர்த்து, பராமரித்து வரும் இத்தாலி நாட்டை சேர்ந்த, மரிய பிரியா மேகி: இத்தாலி நாட்டில் உள்ள, வரிஸி நகரம் தான், என் சொந்த ஊர். அடிப்படையில், நான் ஒரு தாவரவியலாளர். அதனால், குற்றாலத்தில் உள்ள மூலிகை வளங்களும், அதன் பயன்பாடுகளும் என்னை வெகுவாக கவர்ந்தன. அதனால், இத்தாலியை சேர்ந்தவளாக இருந்தும், என்.ஆர்., உரிமம் பெற்று கடந்த, 20 ஆண்டுகளாக குற்றாலத்தில் வசித்து வருகிறேன். இங்கு குடியேறிய ஆரம்பத்தில், குற்றால மலையில் விளையக்கூடிய மூலிகை செடிகளை சேகரித்து, ஒரு மூலிகை தோட்டம் அமைக்க விரும்பினேன். ஏனெனில், குற்றால மலையில், 2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் உள்ளன. அதனால், ஐந்து ஆண்டுகளாக முயற்சித்து, 2 ஏக்கர் நிலப்பரப்பில், என் விருப்பப்படியே மூலிகை தோட்டம் அமைத்து, அந்த அழகிய சூழலிலேயே வீடு கட்டி வசிக்கிறேன். இம்மூலிகை தோட்டத்தில் கொழிஞ்சி, ஊமத்தை, கண்டங்கத்திரி, சிற்றகத்தி, முடைக்கற்றான், வில்வம், ஆடாதொடை, நொச்சி, நோணி, பிரண்டை என, 400க்கும் மேற்பட்ட மூலிகைகளை வளர்க்கிறேன். இவற்றால் பல பயன்கள் உள்ளன. குறிப்பாக, பிரசவிக்க கஷ்டப்படும் பெண்ணின் அடிவயிற்றில், முடைக்கற்றான் இலையை அரைத்துப் பூசினால், சுகப்பிரசவம் ஏற்படும். வெண்நுணா மரத்தின் பழங்களில், அன்றாடம் நம் உடலுக்கு தேவைப்படும், 150 வகையான உயிர்சத்துக்கள் உள்ளன. அழு கண்ணி செடியின் இலைகளை, வெட்டுக்காயம் ஏற்பட்ட இடத்தில் வைத்து கட்டினால், வெட்டுப்பட்ட இடம் ஒன்று சேர்ந்துவிடும். குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி குழந்தை களுக்கு, இம்மூலிகை தோட்டத்தை இலவசமாக சுற்றி பார்க்க அனுமதிக்கிறேன். மேலும், மூலிகை செடி தேவைப்படு வோருக்கு, இலவசமாகவே அவற்றை வழங்கு கிறேன். இதற்கு முன், தென் அமெரிக்கா, நேபாளம் போன்ற நாடுகளில், மூலிகை பண்ணை அமைத்துள்ளேன். கடந்த, 15 ஆண்டுகளாக இந்த மூலிகை தோட்டத்தை பராமரித்து வருகிறேன்.