சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே ‘தாய்வழி இயற்கை உணவகம்’ நடத்தி வரும் ஆர்.மகாலிங்கம் கூறியதாவது:
நண்பர்கள் சரவணன், ரவியுடன் சேர்ந்து கடந்த ஜனவரி 1-ம் தேதி சைதை ரயில்
நிலையம் அருகே இந்த உணவகத்தை தொடங்கினேன். காலையில் 7 வகையான முளைகட்டிய
தானியங்கள், சளி, இருமல் தீர்க்கும் தூதுவளைக் கீரை, குடல் புண் நீக்கும்
மணத்தக்காளி கீரை, சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயக் கீரை, கொழுப்பு
நீக்கும் கொள்ளு சூப், மூட்டு வலி குணமாக்கும் முடக்கத்தான் கீரை ஆகிய
சூப் வகைகள், நெல்லிக்காய், கருவேப்பிலை, அருகம்புல், வாழைத்தண்டு சாறு
மற்றும் தேனில் ஊறவைக்கப்பட்ட அத்தி, நெல்லிக்காய், கடுக்காய்
ஆகியவற்றையும் விற்கிறோம்.
மாலையில் 6 வகையான சூப், கேரட் பால், தேங்காய் பால் விற்கிறோம். இவற்றை
நாங்களே தயாரிக்கிறோம். சிவகாசியில் உள்ள தாய் வழி இயற்கை உணவகத்தில்
பயிற்சி எடுத்துக்கொண்டோம். ஆரம்பத்தில் 30 பேர்தான் வந்தனர். இப்போது
தினமும் 200-க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். மெரினா மற்றும் பூங்காக்கள்
அருகில் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம்.
No comments:
Post a Comment