Wednesday, June 19, 2013

முதியோருக்கும் வந்துவிட்டது தடுப்பூசி

பச்சிளம் குழந்தைகளுக்கு, பிறந்ததில் இருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில், மஞ்சள் காமாலை, நிமோனியா, மூளைக் காய்ச்சல், டெட்டனஸ், தொண்டை அழற்சி நோய், கக்குவான் இருமல் போன்ற, பல்வேறு நோய்களுக்கு, தடுப்பூசி போடப்படுகிறது.

-
இந்நிலையில், தான் துவக்கிஉள்ள, முதியோருக்கான தடுப்பூசி மையம் குறித்து விளக்குகிறார், சென்னை மருத்துவக் கல்லூரி, முதியோர் மருத்துவ துறையில் பணியாற்றி, ஓய்வுபெற்ற பேராசிரியர் நடராஜன்.
-
மனிதர்களுக்கு வயது ஆக ஆக, நோய்களை எதிர்த்துச் செயல்படும், ரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் பல செல்களின் செயல்திறன் குறைகிறது. பல்வேறு நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைய காரணமாக உள்ளன. இதனால், முதியோர், தொற்று நோய்களுக்கு எளிதில் ஆளாகின்றனர்.
-
சத்தான உணவுகளுடன், நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, பாதாம் போன்ற பருப்பு வகைகள் மற்றும் பச்சை பயிறு போன்ற, பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம். இவற்றுடன்,சில தடுப்பூசிகளின் மூலமும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, முதுமையில், தொற்று நோய்கள் வராமல் தடுக்கலாம்.
-
ப்ளூ காய்ச்சல்: இக்காய்ச்சல் வராமல் இருக்க, செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான, மழை மற்றும் குளிர்காலத்தில், ஆண்டிற்கு ஒரு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். நிமோனியா சளி: இது, இருமல், சளியோடு, உயிருக்கே ஆபத்துவிளைவிக்கும் ஒருவகை தொற்று நோய். இதை தடுக்க, 50 வயதிற்கு பின், ஒரு முறைஇதற்கான தடுப்பூசியை போட்டுக் கொண்டால் போதும்.சிலருக்கு, தேவையை பொறுத்து, 5 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் ஒருமுறை இந்த ஊசியை போட்டுக் கொள்ளவேண்டி வரும்.
-
இவற்றுடன், கவனக் குறைவாக இடித்துக் கொள்வது போன்றவற்றால் உடம்பில் ஏற்படும் காயங்களால், ரத்தம் கெடாமல் இருக்க, (செப்டிக்) 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை,"டெட்டனஸ்' தடுப்பூசியும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, டைபாய்டு காய்ச்சலுக்கும்மற்றும் தேவையின் அடிப்படையில், மஞ்சள் காமாலைக்கும், முதியோர், தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
கூட்டு குடும்பங்கள் குறைந்துவரும் இன்றைய சூழலில், முதியோர், நோய்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொண்டு, உடல்நலத்தை பாதுகாப்பது அவசியமாகிறது. முதியோர் நலனை கருத்தில்கொண்டு, அவர்களுக்கான தடுப்பூசி மையம் துவங்கப்பட்டுள்ளது.
-
டாக்டர் நடராஜன்,

முதியோர் நல மருத்துவர், சென்னை. 95000 78740
Aadhi Parasakthi Clinic/Dr V S Natarajan Skin Clinic
18/A Flowers Road ,Kilpauk, Chennai, Tamilnadu ( West ) - 600010 Land Mark  Behind Sangam Theater 044-26412030


60 வயதில் தடுமாறக்கூடாது!
வயது முதிர்ந்தவர்கள் லேசாக தடுமாறி கீழே விழுந்தாலே, எலும்பு முறிவு ஏற்படுவதை தடுக்கும் வழிமுறைகளை கூறும், மருத்துவர் நடராஜன்: நான், முதியவர்களுக்கான மருத்துவ நிபுணராக இருக்கிறேன். 60 வயதை கடந்தாலே, பெண்களுக்கு வரக்கூடிய நோய்களில் முக்கியமானது, எலும்பு பலவீனமடைதல் ஆகும். இதனால், உடனே எழுந்து அமர முடியாது. தடுமாறி கீழே விழுந்தாலே, எலும்பு முறிவு அல்லது எதிர்பாராத மரணம் ஏற்படுகிறது. உடலில், "ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்' சுரப்பு குறைவதாலும், வைட்டமின்-டி மற்றும் கால்சியம் குறைபாட்டாலும், எலும்புகள் பலவீனம் ஆவதே இதற்கு காரணம். உடலுக்கு, தேவையான கால்சியம் கிடைக்காத போது, எலும்புகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கால்சியம் எடுக்கப்படுவதால், எலும்புகளை நொறுங்க வைக்கும், "ஆஸ்டியோ போராசிஸ்' பிரச்னை ஏற்படுகிறது. ஆண்களை விட பெண்களுக்கு தான், கால்சியம் மற்றும் வைட்டமின் - டி சத்து, வேகமாக கரைகிறது. இதனால், பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவது அதிகமாகிறது. எலும்பு முறிவு பிரச்னைக்கு தீர்வு காண ஒரே வழி, தினசரி உணவில் பால், தயிரை சேர்ப்பதுடன், மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப, கால்சியம் மாத்திரைகளை சாப்பிடலாம். வைட்டமின்-டி கிடைக்க, தினமும் அரை மணி நேரம் காலை நேர வெயிலில் நடப்பதுடன், சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்தால், எலும்புகள் பலப்படும். வெளிச்சம் மங்கிய நேரத்தில் மேடு, பள்ளம் உள்ள இடங்களில் நடப்பதை தவிர்ப்பது; வழவழப்பான தரையில், "கிரிப்'பான செருப்பு அணிவது; ஈரம் நிறைந்த பாத்ரூம் போன்ற இடங்களில், பக்கவாட்டு கைப்பிடிகள் அல்லது கைத்தடிகளை பயன்படுத்துவதை கடைபிடிக்கலாம். வயது முதிர்ந்தவர்கள், இதை கடைபிடித்து வந்தாலே, கால் தடுக்கி கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்படுவதை, முன்னரே தடுக்கலாம். முடிந்த வரை, கால்சியம் மற்றும் வைட்டமின்-டி சத்துக்களை அதிகம் சாப்பிட்டு, எலும்புகளை வலுவாக்கினாலே, எந்த பிரச்னையும் இன்றி நீண்ட நாட்கள் வாழலாம்.

No comments:

Post a Comment