Friday, October 4, 2019

பரிகாரங்களில் மிகச் சிறந்தது கோவிலில் சுத்தமான நெய் தீபம் ஏற்றுவதே!

தர்ம சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், வழிபாடுகள், விரதங்கள், பிரார்த்தனைகள், வேண்டுதல்கள், பரிகார பூஜைகள் எல்லாம் காலம் காலமாக தொன்றுதொட்டு நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வரும் விஷயங்களாகும். பரிகாரம் என்பது கஷ்ட நஷ்டங்கள், இடையூறுகள், தடைகளை அகற்றி நல்வழி காட்டுமாறு கடவுளிடத்தில் வேண்டிக் கொள்வதாகும்.

திருக்கோயிலில் தீபம் ஏற்றுவது மிக சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும். அதுவும் அதிகாலை, நண்பகல் (உச்சிவேலை), அந்தி பொழுதில் ஏற்றப்படும் தீபங்களுக்கு மிகவும் விஷேச சக்தி உண்டு. அதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன. கோவில்களில் இந்த மூன்று வேளைகளில் ஏற்றப்படும் தீபம் உடனுக்குடன் துன்ப நிவர்த்தியை தரும்.

மிக கடுமையான பிரச்சனைகளுக்கு நல்ல சுத்தமான நெய்யை, இறைவனின் கருவறையில் சுடர்விட்டு பிரகாசிக்கும் தூங்கா விளக்கில் சேர்த்து வந்தால் போதும். இப்படி தூங்கா விளக்கினை நெய்யால் மூன்று வேளைகளில் தொடர்ந்து தீபம் ஏற்றி வர நாம் எண்ணிய காரியம் நிறைவேறும்.

இத்தகைய தீபம் உடலில் இருந்து பிரிய போகும் ஒரு ஜீவனின் நேரத்தையே தள்ளிப்போடும் அளவிற்கு சக்தி வாய்ந்தது ஆகும். ஆகவே பல ஆயிரம் செலவு செய்து பரிகாரங்கள் பண்ணுவதைவிட ஒரு நெய்தீபம் ஏற்றுவது சிறந்தது.

Thursday, October 3, 2019

கர்ம வினை !


உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கு.  

ஆனால் எதோ ஒரு *குறிப்பிட்ட* நபர் நமக்கு *துணைவராக* அல்லது *துணைவியாக அமைவது* ஏன் ?

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம். 

அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம். 

சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம். 

சிலருக்கு நல்லது செய்கிறோம். பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக
 நன்மைகளைப்பெற்றுக் கொள்கிறோம். இந்த கொடுக்கல் வாங்கலே *"ருண பந்தம்"* 
எனப்படுகிறது.

சிலருடைய உறவுகள் ஆனந்தத்தைக் கொடுக்கிறது. சிலருடைய வருகை மட்டற்ற *மகிழ்ச்சியை* ஏற்படுத்துகிறது.  சிலர் கூடவே இருந்து *தொல்லைப் படுத்துகிறார்கள்.*

சிலரின் வருகை *துக்கத்தை* ஏற்படுத்துகிறது. பல சமயங்களில் இது *ஏன்* நிகழ்கிறது  என்று தெரியாமலேயே  தன் போக்கில்  நம் வாழ்வில் *பல நிகழ்ச்சிகள்* நடக்கின்றன. 

கனவில் கூட காண முடியாத  பல *ஆச்சர்யங்கள்* நமக்கு  சிலசமயங்களில் ஏற்படுகிறது. இதற்கெல்லாம்* என்ன *காரணம் ?* 

ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ?

 நாமே நம் தாயை, தந்தையை, சகோதர சகோதரிகளை, நண்பர்களை, மனைவியை, கணவனை, பிள்ளைகளை, தேர்ந்தெடுப்பதில்லை.
நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம்  என்று யாரேனும் கூறலாம். ஆனாலும் அதுவும் 
தானே நிகழ வேண்டும். நம்மால் உருவாக்க முடியாது. 

முயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு? ஒரு சிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீரென்று காணாமல் போய் விடுவர்.

     அது இறப்பால் மட்டும் அல்ல ,  பல காரணங்களினால் நிகழும். அதே நபர் மீண்டும்  நம் வாழ்வில் வேறு கோணத்தில்  வேறு_பார்வையில் தோன்றுவர்.

 எதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் ஈர்க்கிறது, அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல் வெறுக்க வைக்கிறது. 

 அது என்ன ? சமன் செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும் கர்ம கதிகளின் எச்சங்களே அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை ஏற்படுத்துகிறதா ?

 இதற்கெல்லாம் தெரிந்த ஒரே காரணம் நம்முடைய  *"கர்ம வினை"* தான் .

இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் கொண்டிருக்கிறோம். அத்தனைப் பிறப்பிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறோம்.  

அந்தக் கூட்டின் பெயரே *"சஞ்சித கர்மா"* எனப்படுகிறது.  அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே *'பிராரப்தக் கர்மா எனப்படுகிறது.

இந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல்நம்முடைய இந்தப் பிறவி முடிவடையாது.
நாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது.

இந்த வாழ்க்கை நடைமுறையில் நாம் ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒன்றை கற்கிறோம் அல்லது கற்றுக்கொடுக்கிறோம்.

இதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே.

இது தவிர *'ஆகாம்ய கர்மா'* என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல - கெட்ட செயல்களால் ஏற்படுவது. யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ  உருவாக்கவோ முடியாது.

அவரவர்கள் செய்வினையின் பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும் வாழ்க்கை அமையும்.

துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும்,  ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும்,  அவரவர்கள் கர்ம கதியே.

இதைத் தான் "தீதும் நன்றும் பிறர் தர வாரா என நம் மதம் போதிக்கிறது.

நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பு.

 அப்படி என்றால் ஆகாமி கர்மா நம்முடைய கையிலேயே இருக்கிறது.  

இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும்,  நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது உன்  கையிலேயே உள்ளது. 

 நீ செய்யும் நற்செயல்களையும்,  வினைச் செயல்களையும் நீ மட்டுமே எதோ  ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறாய்  என்பதை உணர்ந்தால்,

நீ என்ன செய்யப் போகிறாய் ?

எப்படி நடந்து கொள்ளப் போகிறாய் ? 

எது போன்ற வாழ்க்கைத் தடத்தை ஏற்படுத்திக்கொள்ளப் போகிறாய் என்பது உனக்குப் புலப்படும்.

இதை போதிப்பது தான் *"ஆன்மீகம்"*

பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது.  இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும்.

 பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது. 

ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறான். 

அதேபோல பெரும் பணக்காரர்களையும்  *'துக்கங்கள்*' விடுவதில்லை.

சர்க்கரை ஆலை அதிபரானாலும் Diabetic- ஆக இருந்தால் இனிப்புப் பண்டங்களை 
உண்ண முடியாது. 

பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தனதுகால்களையே நடை பயிற்சிக்கு நம்ப வேண்டியதாக உள்ளது.

'வினை விதைத்த வழியில் விதி நடக்கும்' 'விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்'

நமக்கு விதிக்கப்பட்டது நம் கடமையைச் செய்வது மட்டுமே. _பலனை ஆண்டவனிடம் விட்டுவிடுவோம்.

நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். 

அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் _துன்பத்தையும் சோகத்தையுமே_ பலனாகப் பெறுகிறோம்.

எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை. நமக்கு நடக்கும் நடக்கப்போகும்_ நல்லதை யாராலும் *கெடுக்க* முடியாது. அதேபோல் தீமையையும் கொடுக்க முடியாது

எளிய முறையில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வது எப்படி ?

வாழ்க்கையில் சந்தர்ப்பம் எப்போதாவது தான் கிடைக்கும். அதை தவற விடுபவர்கள் புத்திசாலிகள் அல்ல. சில குடும்பங்களில், துன்பம் துரத்திக் கொண்டே இருக்கும். குறிப்பாக, வாழாவெட்டியாய் வரும் பெண்கள், அங்கஹீனர்களாகப் பிறப்பவர்கள், திருமணமாகியும் நிம்மதியில்லாமல் இருக்கும் ஆண்கள், பணக்கஷ்டத்தால் அத்தியாவசியத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ளாமல் இருப்பவர்கள்... இதற்கெல்லாம் காரணம் என்ன என்றால், பிதுர் தர்ப்பணம், சிரார்த்தம் ஆகியவற்றைச் செய்யாமல் இருப்பது தான். ஒவ்வொரு அமாவாசையும், பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். மாதப்பிறப்புகளில் பிதுர் தர்ப்பணம் செய்யலாம். இவையெல்லாம் சாத்தியமில்லாவிட்டால், தை அமாவாசை, ஆடி அமாவாசையாவது தர்ப்பணம் செய்யலாம். இதுவரை என் வாழ்க்கையில் தர்ப்பணம் செய்ததே இல்லை, அதற்கு ஏதாவது மாற்று இருக்கிறதா என்றால், அதற்கும் மாற்று வைத்திருக்கிறது சாஸ்திரம்.

புரட்டாசி மாத பவுர்ணமி துவங்கி, அமாவாசை வரையுள்ள, 15 நாட்கள் மகாளயபட்ச காலம். மகாளயம் என்றால், மொத்தமாகக் கூடுதல் என்று பொருள் கொள்ளலாம். பிதுர்கள் எனப்படும் முன்னோர்கள் இந்த, 15 நாட்களும் கூட்டமாக பூமிக்கு வந்து விடுகின்றனர். தங்களது சந்ததியர், தங்களை நினைத்துப் பார்க்கின்றனரா என சோதிக்கின்றனர். அவர்களை அந்த, 15 நாட்களும் நினைத்து தர்ப்பணம் செய்தால், அவர்கள் மகிழ்கின்றனர்.

இதற்கு அதிக செலவாகுமோ என்று எண்ணத் தேவையில்லை. வசதி படைத்தவர்கள், தகுதியுள்ள அந்தணர்களை அழைத்து, இதை சில ஆயிரங்கள் செலவழித்து செய்யலாம். மற்றவர்கள் என்ன செய்யலாம் என்றால், சில விதிமுறைகளை சாஸ்திரம் சொல்கிறது.

நதிக்கரைகளுக்கு சென்று, அந்தணர்களுக்கு தட்சணை கொடுத்து தர்ப்பணம் செய்யலாம். அதுவும் முடியவில்லை என்றால், ஒரு பிடி எள்ளை தானம் செய்யலாம். அதுவும் முடியவில்லை என்றால், ஒரு பிடி எள்ளை கையில் எடுத்து, தீர்த்தத்தை விட்டு கீழே விடலாம். இதெல்லாம் முடியாவிட்டால், பசுவை வலம் வந்து வணங்கலாம். அதற்கும் முடியாவிட்டால், வெட்டவெளியில் நின்று இரண்டு கைகளையும் உயரே தூக்கி, "பித்ரு தேவதைகளை வணங்க வேண்டும் என்பது என் ஆசை தான். ஆனால் முடியவில்லை. எனவே, பித்ரு தேவதைகளே... நீங்கள் எல்லாரும், நான் சிரார்த்தம் செய்ததாக எண்ணி திருப்தி அடையுங்கள்...' என்று வேண்டலாம்.

இதை விட சாஸ்திரம் நமக்கு என்ன சலுகையைத் தந்துவிட முடியும். மேற்கண்ட பரிகாரங்களுக்கு ஒரு பாக்கெட் எள் போதாதா. எள் எந்த அளவுக்கு வேண்டும் என்றால், கை கட்டை விரலில் எள்ளை ஒற்றிக்கொண்டு, அதில் தண்ணீரை விட்டு கீழே விட்டால் கூட போதும் என்கிறது சாஸ்திரம்.

மகாளயபட்சத்தின், 15 நாட்களும் இவ்வாறு செய்யலாம். முடியாதவர்கள், மகாளய அமாவாசை தினத்தன்றாவது, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

 இந்த வழிபாட்டை கடமைக்குச் செய்யாமல், சிரத்தையாக செய்தால், கிடைக்கும் பலன் என்ன தெரியுமா?

இனிமேல், நம் குடும்பங்களில் ஊனமான குழந்தைகள் பிறக்க மாட்டார்கள். இப்போது, மாற்றுத் திறனாளிகளாக இருப்பவர்களுக்கு, நல்ல வாழ்க்கை அமையும். மேலும், நம் முன்னோர்கள் பாவம் செய்து நரகத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், அவர்களுக்கு விமோசனமாகி சொர்க்கத்தை அடைவர். அவர்களின் ஆசிர்வாதம், நம்மை மனநிம்மதியுடனும், செல்வச்செழிப்புடனும் வாழ வைக்கும்.

மகாளயபட்ச காலமான 15நாட்களும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.முடியாதவர்கள் மகாளய அமாவாசைக்கு அவசியம் செய்தல் வேண்டும்.

திருவாரூர் மாவட்டம் செதலபதி கிராமத்தில், முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கே, ராமபிரான் பூஜித்த பிதுர்லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை மகாளயபட்ச காலத்தில் ஒரு நாளாவது சென்று தரிசித்து வாருங்கள். அங்கே தர்ப்பணம் செய்வது இன்னும் விசேஷம். திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் ரோட்டில், 22 கி.மீ., தொலைவில் பூந்தோட்டம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து பிரியும் சாலையில், கூத்தனூர் சென்று, 2 கி.மீ., தொலைவில் உள்ள செதலபதியை அடையலாம். கூத்தனூரில் புகழ் பெற்ற சரஸ்வதி கோவில் உள்ளது. பிதுர் தர்ப்பணத்தின் பலன் அளவிட முடியாதது; அனுபவத்தின் மூலமே இதை உணர முடியும்.